எவ்வளவு நன்மைகள்! இந்த கடுகு எண்ணெயில்….

Spread the love

கடுகு எண்ணெயில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டி-பாக்டீரியல் நிறைந்துள்ளது. இதனால் தொற்றுகளால் ஏற்படும் பிரட்சனைகளில் இருந்தும், மூட்டுவலி, இரத்த கட்டு, இதய நோய், மற்றும் புற்றுநோய் வராமலும் தடுக்கும். அதிலும் குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படாமலும் காக்கின்ற ஆற்றல் கடுகு எண்ணெய்க்கு உள்ளது. இதில் இருக்கும் குளுக்கோஸ்னோலேட் புற்றுநோய் வர கூடிய செல்களை அழிக்கும். மேலும் இரத்தகட்டு போன்ற பிரட்சனைக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும்.

பெண்களுக்கு முகத்தில் வளர்ந்து வரும் தேவையில்லாத முடி வளர்ச்சியை தடுக்க லேசான சூட்டில் கடுகு எண்ணெயை தடவி மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி நீங்கும். இல்லையென்றால் மஞ்சளையும் சேர்த்து தடவலாம். கடுகு எண்ணெயில் மோனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் என்ற நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலம். உடலிற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கின்றது. வாய் பிரட்சனைகளுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். 

கடுகு எண்ணெயை சூடு செய்து இதமான சூட்டில் பற்கள், சதை மற்றும் ஈறுகளில் நன்கு தேய்த்து கொப்பளித்து வந்தால், வாய்நாற்றம், வாய்புண், கீறள் மற்றும் பற்கள் இடுக்குகளில் ஊடுருவியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றிவிடும். தினமும் காலையும், மாலையும் இந்த மாதிரி செய்து வர வாய்க்கும் பற்களுக்கும் எந்த பிரட்சனையும் வராது. சீதள உடம்பு உள்ளவர்கள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுவார்கள். உணவில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால் இது உடலிற்கு சமநிலையை உண்டாக்கி சளி, இருமலை குணமாக்கும். மேலும் காய்ச்சலால் ஏற்படும் சூட்டையும் குறைக்கும். 

https://www.youtube.com/embed/iyD8tgTJhAw


Spread the love