கடுகு எண்ணெய் தரும் முக அழகு!

Spread the love

நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் கடுகு தானே! என்று நீங்கள் மனதில் நினைப்பீர்கள். சமையலுக்கு மணமும், சுவையும் தரும் ஒரு பொருளாக கடுகு மற்றும் கடுகு எண்ணெய் என்று இரண்டு வகைகளில் பயன்படுகிறது. கடுகு எண்ணெயானது முகத்திற்கு பளபளப்பு தரவும், பற்களுக்கு பளிச்சென வெண்மையும், வலிமையும் தருகிறது என்பது உங்களில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

முக அழகை அதிகரிக்கும் கடுகு எண்ணெய்

உங்கள் பற்களைச் சுத்தப்படுத்த இயற்கையிலேயே திரவ வடிவில் கிடைக்கும் ஒரு எண்ணெயாக கடுகெண்ணெய் அமைந்துள்ளது. மேலும் பற்களை முத்துப் போல பளபளப்பாக மின்னுவதற்கும், வெண்மை நிறம் அதிகரிக்கவும், பற்கள் வலிமையாக அமையவும் உதவுகிறது. முகத்தில் உள்ள அழுக்கு, கிருமிகளை சுத்தப்படுத்தவும் ரசாயன கிளென்சர்கள், பல சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை நீங்கள் அதிக விலை கொண்டு வாங்குவது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு அதனைப் பயன்படுத்தும் பொழுது சருமத்தில் ஒவ்வாமையும் ஏற்படுகிறது.


ஆனால், இயற்கை தரும் கடுகெண்ணெயை மேக் அப் ரிமூவராக, ஒப்பனை செய்த முகத்தை மீண்டும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. பக்க விலைகள் அறவே இல்லை என்பது மட்டும் அல்லாமல், சருமத் துளைகளை அடைப்பதில்லை. இதன் காரணமாக சருமத்தின் மேல் பரப்பானது எளிதாகவும், ஒரு சில நிமிடங்களில் சுத்தம் பெறவும் இயலுகிறது. பல் துலக்குவதற்குரிய இயற்கையான பற்பசை போன்றும் அமைந்துள்ளது.


கடுகு எண்ணெய், எலுமிச்சைச் சாறு ஓரிரு துளிகளுடன், ஒரு விரலிடுக்கு அளவு உப்பு சேர்த்துக் கொண்டு பல் துலக்கும் பொழுது, பற்கள் உறுதியாகவும், பளிச்செனவும் அமைகின்றன. பல்வேறு இரசாயனப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தப்பட, முடி கிரீம் மற்றும் ஷாம்பூக்கள் முடியின் நிலையை மோசமாக்கி இருக்கும். இரசாயனம் கலந்த முடி கிரீம்கள், எண்ணெய்கள் முடியை சுருட்டி வலிமை இழந்து காணப்படும். முடி உதிர்தலும் காணப்படும்.

இதற்கு கடுகு எண்ணெய் நிவாரணம் தருகிறது. சற்றே சூடான கடுகு எண்ணெய் கொண்டு தலைமுடியில் நன்றாக அழுத்தி மசாஜ் செய்வது போல செய்து வந்தால் முடியின் தன்மை இயற்கைக்கு மாறிவிடும். இதன் மூலம் கடுகு எண்ணெய் தலைமுடிக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதுடன், முடி சுருண்டு போதல், முடி உதிர்தல் போன்றவற்றையும் சரி செய்கிறது.
முகத்தில் காணப்படும் பருக்கள் மற்றும் சிவந்த திட்டுக்கள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த வேண்டுமா? சிறு துளியளவு கடுகு எண்ணெய் எடுத்து மேற்கூறிய இடத்தில் 10 அல்லது 15 நிமிடங்கள் தேய்த்து வாருங்கள். இதன் மூலம் சருமம் ஆரோக்கியமும் பொலிவும் பெறும்.
கடுகு எண்ணெய் கொண்டு தினம் தோறும் உங்கள் முகத்தை மசாஜ் செய்து வர முகத்தில் காணப்படும் கரும்புள்ளி மாறிவிடும். புது நிறம் கிடைக்கும். மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறம் மறைந்து முகம் அழகு பெறும். இதற்குரிய பேஸ் மாஸ்க் கிரீமை நீங்களே தயார் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடுகு எண்ணெய் பேஸ் மாஸ்க் க்ரீம்

தேவையான அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடுகு எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர், எலுமிச்சைச் சாறு ஒரு சில துளிகள் எடுத்துக் கொள்ளவும். மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கிக் கொண்ட கலவையை உங்கள் கழுத்து, முகம் போன்ற இடங்களில் தடவி தேய்த்து விடுங்கள்.

சுமார் 10, 15 நிமிடங்கள் சென்ற பின்பு முகத்தை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். மிகவும் திருப்தியான பலன் கிடைக்க மேற்கூறிய கலவையை தொடர்ந்து மூன்று வாரத்திற்கு குறையாமல் உபயோகப்படுத்தி வர வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!