புரதம் தரும் காளான் சூப்

Spread the love

காளான்கள் என்று அழைக்கப்படும் நாய்க் குடைகள் உணவிற்கு மிகவும் உகந்தவை இவற்றை ஆங்கிலத்தில் MUSH ROOM என அழைக்கிறார்கள். பொதுவாக வெள்ளை நிறக் காளான்களே உணவிற்கு உகந்தவை. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன. தாவரவியலில் காளான்களை FUNGI என வகை பிரித்துள்ளனர்.

வண்ணங்கள் கொண்ட காளான்கள் விஷத்தன்மை உடையவை. அவை உணவிற்கு உகந்தவை அல்ல. அதிக அழகாகவும் வண்ண  வண்ண நிறங்களில் காணப்படும் காளான்கள் விஷத்தன்மை கொண்டவை. அவற்றிலிருந்து பவ்வேறு விதமான மருத்துவப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. வண்ணங்கள் அதிகமாக அதிகமாக விஷத்தன்மை அதிகரித்துக் கொண்டே போகும். உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும்.

காளான்கள் பச்சயம் (HLOROPHYLL) இல்லாத பூஞ்சான் வகை பாசி இனத்தைச் சேர்ந்தவை ஆகும். ஃப்ரான்ஸி ல் 1680 ல் முதன் முதலாக வெள்ளை பட்டன் மஷ்ரூம் எனும் காளான் வகை பயிரிடப்பட்டது.

காளான்களில் அதிக புரதம் காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம், மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும்.

பின்னர் இது ஃப்ரான்ஸிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் 1943 ல் முதன் முதலாக தமிழகத்தின் கோவை மாநகரில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

உலகப் புரதப் பற்றாக்குறையை போக்கும் விதமாக காளான்கள் விலங்கினங்களுக்கு மாற்றாக பயிரிடப்பட்டு வந்துள்ளது. பச்சைப் பட்டாணி இறைச்சி மீன், முட்டை இவற்றிற்கு அடுத்தபடியாக காளான்கள் தான் அதிக அளவு புரதத்தைத் தரக்கூடியவை. இக் காளான்களின் தனித்தன்மை என்னவென்றால் இவை மேற்கூறிய உணவுகளை காளான்களில் உடலுக்குத் தேவையான பல அமினோ அமிலங்கள் காணப்படுகின்றது. அதிக பொட்டாஷியமும் குறைவான சோடியமும் அடங்கியுள்ளது எனவே இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு ஒர் வரப்பிரசாதம். புரதம் அதிகமாகவும் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உடையவர்களும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

காளான் சூப்

தேவையான பொருட்கள்

காளான்    –50கிராம்

தண்ணீர்    –250மி.லி.

தக்காளி    –1

வெங்காயம் –1

இஞ்சி, கறிவேப்பிலை-சிறிது

கொத்தமல்லி, புதினா-சிறிது

மிளகுத்தூள், சீரகத்தூள்-சிறிது

உப்பு        -தேவையான அளவு

கார்ன் ப்ளார் –2டீஸ்பூன்

செய்முறை

தக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காளானை நன்றாகக் கழுவி நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் சமயம் மசித்து அடுப்பைக் குறைத்து ஆறும் முன் வடிகட்டவும். கார்ன் ப்ளாரை கட்டிகள் இல்லாமல் தண்ணீரில் கரைத்து சூப் கெட்டியாவதற்கு ஊற்றி கொதிக்க விடவும். கடைசியில், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தூவி பரிமாறவும்.


Spread the love