முல்தானி மட்டி

Spread the love

களிமண் வகைகளில் ஒன்று முல்தானி மட்டி. களிமண்களின் உபயோகங்களை நாம் அறிந்திருந்தால் மற்றவரை “உன் மூளையில் களிமண் தான்” என்று திட்டமாட்டோம்!

களிமண் பாறைகளின் சிதைவினால் ஏற்படும் தாதுப் பொருட்களின் கலவை. நீண்ட காலம் பாறைகள் அதுவும் சிலிகேட்நிறைந்த பாறைகள், கார்பானிக் அமிலம் போன்றவற்றால் ரசாயனம் மற்றும் கால நிலை மாறுபாட்டால் சிதைவடைகின்றன. ஹைட்ரோ – தர்மல் (நீர் – உஷ்ணம்) செயல்களாலும் இது ஏற்படலாம். சிதைவடைந்த பாறைகளின் “குழி” “விரிவு” களின் களிமண் தாதுப்பொருட்கள் படிந்து விடுகின்றன. பெரிய அளவில் களிமண் தாதுப்பொருட்களின் குவியல் ஏற்படும் காரணம் உண்டான இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக சேர்ந்து விடுவது. இதனால் களிமண் படிவங்களை ஏரிகளின் அருகாமையில், கடல் கரை ஓரங்களில் காணலாம்.

உண்டான இடத்திலேயே நிலை கொண்டிருக்கும் களிமண் படிவங்களை முதல் படிவங்கள்‘ (Primary Clays) அல்லது Residual clays என்பார்கள். உதாரணம் கயோலின் (Kaolin) படிவங்கள். பிறந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு நீர், ஐஸ், காற்று இவற்றால் கடத்தப்பட்ட களிமண் படிவங்களை இரண்டாம் படிவங்கள் (Secondary clay deposit) அல்லது அடுக்கு (வீழ்) படிவு‘ (Sedimentary clays) என்பார்கள்.

களிமண்ணில் கிட்டத்தட்ட 30 வகைகள் உள்ளன. நடைமுறையில் பரிசுத்தமான அசல் களிமண் கிடைப்பதரிது. பல வகைகள் ஒன்றோடு ஒன்று கலந்தும். வேறு சில தாதுப்பொருட்களுடன் கலந்தும் தான் களிமண் கிடைக்கிறது.

களிமண்ணின் குணாதிசயங்கள்

களிமண் தண்ணீருடன் சேர்ந்தால் இஷ்டப்படி உருவம் அமைக்க இணக்கமான பொருளாகிறது. உலர்ந்தால் கடினமாகிறது. நெருப்பில் சுட்டால் ரசாயன, பௌதிக மாற்றங்களை அடையும். சுட்ட களிமண் கடினமாகிறது. (உதாரணங்கள் – மண் பாண்டங்கள், செங்கல், பீங்கான் போன்றவை). களிமண்ணில் நீர் ஊடுருவி பரவாது.

கற்காலத்துக்கு முன்பேயே மனிதனுக்கு களிமண்ணின் உபயோகம் தெரிந்திருந்தது. எழுதுவதற்கு களிமண் பலகைகள் பயன்படுத்தப்பட்டன்.

களிமண்ணின் பயன்கள் ஏராளமானவை. நீர் தேக்கங்களில் நீர் கசியாமல் இருக்க, காகித தயாரிப்பில், தண்ணீரை வடிகட்டி சுத்திகரிக்க, கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள் தயாரிக்க – என்று களிமண்ணின் பல பயன்களை கூறலாம்.

மருத்துவத்தில் வயிறு கோளாறுகளுக்கு களிமண் நல்லது. தென் அமெரிக்காவில் கிளிகள் உணவிற்கு பின் களிமண்ணை தின்பதை கவனித்த பின் மனிதனின் வயிற்று பாதிப்புக்களுக்கும் களிமண் மருந்துகள் தயாரிக்கப்பட்டன.

சர்ம நோய்களுக்கு சில வகை களிமண்கள் மருந்தாகின்றன. களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரே (ஷிஜீக்ஷீணீஹ்) மருந்துகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்பட்டால், பூச்சிகளின் தொல்லையை தவிர்க்கலாம். இந்தியாவில் முல்தானி மட்டி தொன்று தொட்டு, அழகு சாதனமாக பயன்பட்டு வருகிறது. இந்தியாலின் வடமேற்கு பிரதேசங்களில் கிடைக்கிறது.

பொதுவாக முல்தானி மட்டி, கயோலின் போன்ற களிமண்கள் முகத்தின் பளபளப்பை, சர்ம அழகை அதிகரிக்கும். இந்த களிமண்கள் சருமத்திலிருந்து அழுக்கை, நச்சுகளை, காந்தம் இரும்பை இழுப்பது போல், இழுத்து விடும். தவிர இரும்பு, களிமண்களை முக பினிக் என்று கூறலாம். ஆரோக்கியமான சர்மம் உடழகை எடுத்துக்காட்டும். அதுவும் அதிக எண்ணை சுரப்பினால் முகம் பொலிவின்றி பருக்களால் பாதிக்கப்படுவதை முல்தானி மட்டி தடுக்கும்.

முல்தானி மட்டி Fuller’s earth எனப்படுகிறது. இது சர்மத்தை சுத்திகரிக்கும் இயற்கை பொருள். முகத்திலிருந்து நச்சு, எண்ணை, அழுக்கு இவற்றை உறிஞ்சி விடும். ஈரமான முல்தானி மட்டி, பச்சை நிறமாக காணும். இதை Montmorillonite – bearing clay பிரிவை சார்ந்தது. இந்த பிரிவிலுள்ள களிமண்கள் அதிகமாக, தண்ணீரை உறிஞ்சி, உப்பும் திறமை உடையவை. பிரான்ஸிலுள்ள Montonarillon என்ற இடத்திலிருந்து முதலில் எடுக்கப்பட்டதால், இந்த பெயர் வந்தது.

உபயோகிக்கும் முறை

1.     தண்ணீரில் குழைத்து முகம் கழுத்து, முடி, இவற்றில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவவும். உடல் முழுவதும் கூட பூசிக் கொள்ளலாம்.

2.     நார்மல், உலர்ந்த சர்மத்திற்கு முல்தானி மட்டி 6 பாகம் கற்றாழை சாறு, முட்டை வெள்ளை (அ) சுத்தமான நீர், 1 பாகம் தேன் கலந்த கலவையை பயன்படுத்தலாம்.

3.     எண்ணை பசை மிகுந்த சர்மத்திற்கு 5 பாகம் முல்தானி மட்டி + 1 பாகம் தேன் + 1 பாகம் கற்றாழை சாறு + 1 பாகம் எலுமிச்சை சாறு.


Spread the love
error: Content is protected !!