மூக்கிரட்டை

Spread the love

சிறுகொடி வகையைச் சேர்ந்த மூக்கிரட்டை  பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணமளிக்கும் சிறந்த  மூலிகையாகப் பயன்படுகிறது. இதற்கு மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலிய வேறுபெயர்களும் உண்டு.

இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும் , தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும்,வாய்க்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி. சிறிது வேர் இருந்தால் ஈரம் பட்டவுடன் தளைத்துவிடும்.  இதன் தாயகம் இந்தியா. பின்னர் பசிபிக்கிலும் தென்அமெரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக் காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

ஒரு பிடி மூக்கிரட்டை வேரும் 4 மிளகும் 100 மி. லி. விளக்கெண்ணையில் வாசனை வரக்காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு 6 மாதக் குழந்தைக்கு 15மி. லி. அதற்கு மேல் 30 மி. லி  வாரம்1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல் மூலச்சூடு, நமைச்சல் , சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி, செரியாமைஆகியவை தீரும்.  மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

ஒரு பிடி வேர், மிளகு 4 உந்தாமணிச்சாறு 50மி.லி. அகியவற்றை 100 மி.லி. விளக்கெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி மாந்த இழுப்பு அடிக்கடி சளி, காய்ச்சல் வருதல் குணமாகும்.

ஒரு பிடி மூக்கிரட்டை வேர் , அருகம்புல் 1பிடி , மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல்வாதம், ஆஸ்துமா£, கப இருமல் குணமாகும்.

ஒருபிடி  மூக்கிரட்டை வேர், அருகம்புல் ஒருபிடி,கீழாநெல்லி ஒரு பிடி , மிளகு10 சிதைத்து அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை , நீர் ஏற்றம் , சோகை, வீக்கம் , நீர்கட்டி , மகோந்தரம் தீரும்.

மூக்கிரட்டை இலையைப் பொரியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை,ஒரு சிட்டிகை தேனில்  கொள்ள மாலைக்கண், கண்படலம் , பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டைஇலை, பொன்னாங்கண்ணி இலை சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இலையைத் தொடந்து பயன்படுத்த வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்

இதன் இலையை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெயிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை மீன், கருவாடு ஆகியவை

ரட்டைப்பட்டை வேர் &20 கிராம் , மாவிலங்கு பட்டை 20கிராம் வெள்ளைச் சாரணைவேர் &20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி  தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், 50 மி. லி  வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி கிராம் நண்டுக்கல்பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3, மாதங்களில் முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.


Spread the love