ஆண்மையை பெருக்கும்; அறுபதிலும் ஆற்றல் தரும் மூலிகை
இறக்கும் வரை இல்லற சுகத்தை அனுபவிக்க நினைக்காத மனிதர்கள் யாரும் கிடையாது. நாகரீகம் வளர்ந்த பிறகு ஆண்மை சக்தியை பெருக்கி, நீண்ட காலம் தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க மனிதர்கள் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான மருந்துகளை தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.
அலோபதி மருத்துவர்களிடம் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் ஆலோசனை கேட்கறாங்க.. கேட்கிறாங்க.. கேட்டுகிட்டே இருக்கிறாங்க… ஆனால், இந்திய மருத்துவத்தில் தொன்று தொற்று பல மூலிகைகள் ஆண்மை குறைவை போக்க பயன்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று முசலி. பல சக்தியூட்டும் ஆயுர்வேத டானிக்குகளிலும் ஆண்மை பெருக்கும் மருந்துகளிலும், ‘சியவனப்ராச’ லேகியத்திலும், முசலி சேர்க்கப்படுகிறது. அலோபதி மற்றும் யுனானி மருத்துவத்திலும், பல மருந்துகளில் முசல பயனாகிறது. முசலி பிரிவில் இரண்டு மூலிகைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று வெள்ளை (ஸ்வேத (அ) சஃபேத்) முசலி. மற்றொன்று கறுப்பு முசலி. பொதுவாக முசலி என்றால் வெள்ளை முசலியையும், தால்மூலி என்றால் கறுப்பு முசலியையும் குறிப்பிடப்படும். இரண்டு வகை முசலிகளுமே ஆண்மை பெருக்கியாக பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை முசலி
தாவர இயல் பெயர் – Asparagus Adscendens
Family – Liliaceae
வெள்ளை முசலி, சதவாரி (Asparagus racemosus) போன்றது. பல கிளைகளுடைய முள் செடி. செடி முழுவதும் ஒரு அங்குல நீட்ட முட்களிருக்கும். இதன் கிழங்கு (Rhiuome) வெண்மை நிறமாக 20 செ.மீ. நீளமிருக்கும்.
கறுப்பு முசலி (தாலமூலி)
முசலியின் தாவரவியல் பெயர் – Curculigo Orchioides, Gaetn
குடும்பம் – Amaryllidacea.
சமஸ்கிருதம் – முஸலி, தாலமூலி, சவகா, ஹேம புஷ்பா
ஹிந்தி – முஸலி, காலி முசலி,
தமிழ் – நிலப்பனை, தாலமூலி
தாலமூலி சிறு செடி. நீட்டமான வேர் கிழங்கு உடையது. இலைகள் 15 லிருந்து 45 செ.மீ. நீளமும், 1.5ல் இருந்து 2.5 செ.மீ. அகலமும் உடையது. பூக்கள் மஞ்சள் நிறமானவை. பழம் நான்கு விதைகளுடன் கூடியது. விதைகள் நீண்ட செவ்வமாக, கறுப்பாக, பிரகாசமாக இருக்கும்.
முன்பு சொன்னபடி இரண்டு வகை முஸ்லிகளும் ஆண்மையை பெருக்கும். விந்தணுக்களை அதிகரிக்கும். வெள்ளை முஸ்லி வயாகராவுக்கு நிகரானது என்றும் இதனால் வெண் முஸ்லி (Safed Musli) கேரளாவில் அதிக அளவில் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிலும் வெள்ளை முசலியின் ஒரு வகையான ” Chlorphytum borivilianum ” அதிக “டிமான்ட்” இருப்பதாக கூறப்படுகிறது.
பயிரிடப்படும் இடங்கள்
முசலி வெட்ப மண்டலங்களில் நன்கு விளையும். 1500 மீட்டர் உயரமான இடங்களிலும் விளையும். உத்திரபிரதேசம், வங்காளம், அஸ்ஸாம், கொங்கன், மேற்கிந்தியா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பயிரிடப்படுகிறது. தண்டுக் கிழங்கை நட்டு 12.5 செ.மீ. ஙீ 12.5 செ.மீ. இடைவெளிகளில் பயிரிடப்படுகிறது.
ரசாயனம்
முசலியில் (தண்டு கிழங்கில்) சர்க்கரை சத்து 7.5% பசை (Mucilage) 8.12%, ஹெமி – செல்லுலோஸ் 20.15% மற்றும் இதர பாலி – சாக்ரைட்ஸ் (Poly sacchroids) 17.01% உள்ளது. முஸலியில் க்ளைகோசைடும் (Glycosides) உள்ளது.
பயன்படும் பாகம் – தண்டுக்கிழங்கு (Root stock, Rhizome)
பொதுக்குணங்கள் – டானிக், சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி
உபயோகங்கள்
முசலி பல வித ஆயுர்வேத மருந்துகளில், முக்கியமாக வலிமையூட்டும் ஆண்மை பெருக்கிகளில் உபயோகப்படுகிறது. பாலியல் குறைபாடுகளுக்கு முசலி ஒரு நல்ல மருந்தாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் கிளைக்கோசைட் (Glycoside) இருப்பதால் ஆண்மைக் குறைவுக்கு நல்ல மருந்தாகும். விந்து அளவு, விந்தணுவின் எண்ணிக்கை இவற்றை பெருக்குகிறது. இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவையும், சீரம் புரத அளவையும் அதிகரிக்கிறது. சிறுநீர் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து. நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தேசத்தில் முசலி சரும வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சரக சம்ஹிதா சரகர், சுஸ்ருதர், வாகபட்டர் – ஆயுர்வேத குருக்கள் சொல்வது – முசலி உடல் எடையை கூட்டும். இளமையை திரும்பி வரச் செய்யும்.
பாலியல் நோய்களுக்கும், மூலத்திற்கும் மருந்தாகும்.
வெண்குஷ்டம் போன்ற சரும வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
ஆர்த்ரைட்டீஸ், ருமாட்டிஸம் இவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.