மூட்டுவலியை எளிதாய் போக்கிட

Spread the love

முடக்கத்தான் ஈரம் மிகுந்துள்ள இடங்களில், வேலிகள் மற்றும் பெருஞ்செடிகளைப் பற்றிப் படரும் ஒரு வகைக்கீரை வகைகளில் ஒன்றாக இருப்பதோடல்லாமல் கீல் வாதம் போன்ற வாத நோய்கள், இடுப்புப்பிடிப்பு போன்றவற்றிற்கும் ஒரு சிறந்த நிவாரணியாகும்.

செழிப்பான இடங்களில் வளரும் முடக்கத்தான் கொடி, பெரிய இலைகளுடனும், காய்களுடனும் காணப்படும். இதன் இலை, தண்டு, காம்பு எல்லாம் நல்ல பசுமை நிறத்தில் இருக்கும். ரூமாடிசம் என்கின்ற கீல் வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்களுக்கு இதனை சூப் வைத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனாலேயே இதை (முடக்கு + அற்றான்) முடக்கற்றான் என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும் நமது நாட்டுக் கிராமங்களிலே இது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. சிலருக்கு அடிக்கடி உடலில் வலி ஏற்படும். இந்த வலிக்கு முடக்கத்தான் சூப் சிறந்த மருந்தாகக் கருதப்படுகுறது. முடக்கத்தான் கீரையை ஒரு மருந்தென்று எண்ணாமல் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்வு. சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். மலம் எளிதில் பிரியும். கை, கால் வலி, மூட்டு வலி முதலியன குணமாகும். இந்தக் காலத்தில் மிக அதிகமானவர்களை அவதிப்படுத்தும் கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி இரண்டிற்கும் முடக்கத்தான் ஒரு கை கண்ட மருந்து. இதைத் தினமும் சாப்பிட்டு வர இக்குறைகள் உடனே குணமாகும்.

முடக்கத்தான் சூப்

தேவை

முடக்கத்தான் கீரை – 1 கட்டு

சிறிய வெங்காயம் – 10

பூண்டு         – 5 பல்

மிளகு          – சிறிது

சோம்பு         – 1/2 ஸ்பூன்

சீரகம்           1/4 ஸ்பூன்

தக்காளி         – 2

தேங்காய்        1 மூடி

பருப்பு வேக வைத்த நீர் – 1 லிட்டர்

நெய், உப்பு       – தேவைக்கு

செய்முறை

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சோம்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து ஆறிய பின்னர் பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு மூடி தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு அதில் அரைத்த விழுது பொடியாக்கப்பட்ட பொடி சேர்த்து கிளறவும் பின் அத்துடன் பருப்பு வேக வைத்த நீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள கீரையை போட்டு 5 நிமிடம் நன்றாக மூடி வைத்து கொதிக்க விடவும். பின்னர் தேவையான அளவு தேங்காய் பாலை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பின் எடுத்து வடிகட்டியும் பரிமாறலாம். அல்லது அப்படியேயும் பரிமாறலாம்.


Spread the love