மண்ணின் மகிமை (Mud Pack Therapy)

Spread the love

இமாலுவேல் பெல்கே என்பவரால் மண் சிகிச்சை மிகவும் பிரபலமாயிற்று. பண்டைய காலத்தில் இது உபயோகத்திலிருந்தாலும், தற்காலத்தில் தான் இது மிகவும் பயனுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பெல்கே நம் பூமியில் கிடைக்கும் மண் இரவில் ஆற்றல் அதிகம் கொண்டதென்று நம்பினார். காயங்களுக்கும், தோல் வியாதிகளுக்கும் களிமண், ஈர மண்ணை வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்குமென்றார்.

அடால்ப் என்பவர் இரவில் தரையில், மண் தரையில் படுத்தால் சில வியாதிகள் குணமாகுமென்றார். உடம்பு வலுப்பெறும். செயல்புரியும் ஆற்றல் மேலொங்குமென்று நம்பினார். வெறும் கால்களுடன், குளிர் காலத்தில் தவிர, நடந்து கொண்டிருந்தால் உடல் நலன் பெறும். பெயின்ட் அடிக்கப்பட்ட தடங்களில் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் உடம்பு கெடும். அமெரிக்க இந்தியர்கள் நோயாளிகளை கழுத்து வரை நிற்க வைத்து மண்ணால் மூடினார்கள். சில மணி நேரங்கள் இவ்வாறு நின்றால், மண்ணில் உள்ள தாதுக்கள் உடம்பில் ஏறி வியாதிகளை நீக்குமென்று நம்பினர்.

மண் பைகள்

இன்றைய இயற்கை மருத்துவர்கள் மண் பைகளை மிகவும் உபயோகிக் கின்றனர். சில வியாதிகளால் தோன்றும் காயங்கள், சுளுக்கு, கொப்பளங்கள், புண்கள், இப் பைகளால் குணப்படுத்தப்படுகின்றன.

ஈரமண் பையில் அடைக்கப்பட்டு வைப்பதால் ஈரப்பசை வெகுநேரம் நிற்கும். இது தோலின் துவாரங்களில் புகுந்து, இரத்தத்தை இழுத்து வலி போன்றவற்றை நீக்கும். கெட்டுப்போன பொருட்களை வெளியே எடுத்து விடுகிறது.  

பூமிக்கு அடியில், பத்து சென்டி மீட்டர் ஆழத்திலுள்ள மண் தோண்டப்படுகிறது. இது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். கூழாங் கற்கள், உரம் போன்றவை இருக்கக் கூடாது. இவ்வாறு

(Compost)

எடுக்கப்பட்ட மண் வெந்நீரில் சேர்க்கப்பட்டு பேஸ்டாக செய்யப்படுகிறது. இது குளிர்ந்தவுடன், ஒரு துணியில் பரப்பி வைக்கப்படுகிறது. தேவைக்கேற்ப மண் பரப்பப்பட வேண்டும். வயிற்றில் வைக்க வேண்டிய பேக் 20 cm x 10 cm x 25 cm அளவில் இருக்க வேண்டும். இது வயது வந்தவர்களுக்கான அளவு.

மண் பைகள் பொதுவான உடல் பலஹீனத்திற்கும், நரம்பு வியாதிகளுக்கும் நல்ல பலன் தரும். காய்ச்சலைத் தணிக்க வல்லது. இன்புருயன்சா, அம்மை நோய், ஸ்கார்லட் பீவர் போன்றவற்றை குணமாக்கும். கீழ்க்கண்ட வியாதிகளுக்கு மிகவும் உகந்தது.

வீக்கம், கண், காது பிரச்சனைகள், கவுட் ருமாடிசம், வயிற்றில் தொல்லைகள், சிறுநீரகங்கள், ஈரல் சரிவர இயங்காமை, டிப்திரியா, செக்ஸ் சம்பந்தப்பட்ட வியாதிகள், தலைவலி, பல்வலி, பொதுவான வலிகள், போன்றவற்றை தீர்க்கும். மண் பாண்டேஜை உடம்பில் வைத்து ப்ளானால் போன்றவற்றால் மூடி வைக்க வேண்டும். 10 & 30 நிமிடங்கள் இது உடம்பில் இருக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கும்.

நமது உடம்பில் வயிறுதான் எல்லா வியாதிகளுக்கும் இருப்பிடம். எனவே, அதில் மண் பாண்டேஜ் வைத்தால் எல்லா வியாதிக்குமே நீங்கும். முதலில் அஜீரணக் கோளாறுகள் ஏற்படா. வெளியிலிருக்கும் உஷ்ணத்தைக் குறைக்கும்.  Morbid பொருட்களை வெளியேற்றும்.

பிரசவ வேதனையில் இது மிகவும் நல்ல பலனை விளைவிக்கும். இதற்கு மண்ணை ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மாற்ற வேண்டும்.

ஏற்கனவே சிகிச்சை பெறும் நோயாளிக்கு இது ஒரு மாற்றுச் சிகிச்சையாக பயன்படும். எந்த உறுப்புக்கு சிகிச்சை தேவைப்படுகிறதோ அதில் 5 & 10 நிமிடங்கள் ஒத்தடம் தர வேண்டும். அது நன்றாக சூடாக வேண்டும். பின்பு மண்ணைத் தடவி அது தோலின் மேல் 5 & 15 நிமிடங்கள் இருக்கும் வரை காத்திருக்க வேண்டும். தேவையைப் பொறுத்து நேரம் மாறுபடலாம்.

சூடாகவும், குளிர்ந்தும் இருக்கக் கூடிய மண்ணைத் தடவினால் நாட் கணக்கிலிருக்கும் வலி, குடலில் உள்ள பிடிப்புகள், இடுப்பு வலி மறையும்.

Flatulence குடலில் அடைப்பு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கும். பாக்ட்ரியா சம்பந்தப்பட்ட Inflammation போன்றவை குணமடையும்.

Amoebiasis, Colitis, Enteritisபோன்றவைகள் குணம் பெறும்.

மண் குளியல் (Mud Bath)

மண் குளியல் மற்றொரு சிகிச்சை முறையாகும். பாதிக்கப்பட்ட பகுதியில் மண் பூசப்படுவது ஒரு முறை, இந்த முறையில் உடம்பு பூராவும் மண் பூசப்படும்.

மண் நன்கு அரைக்கப்பட்டு, அசுத்தப் பொருள்கள் நீக்கப்படும். வெந்நீர் சேர்த்து பின்பு மிருதுவான பேஸ்டாக குழைக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பேஸ்ட் ஒரு ஷீட்டில் பரவலாக தடவப்படும். இந்த ஷீட் உடம்பு முழுவதும் சுற்றப்படும். உஷ்ண நிலையைப் பொருத்து பிளாங்கட் எண்ணிக்கை மாறுபடும். பின்பு மிதமான சூட்டில் வெந்நீரில் குளிக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இம்மாதிரி மண் குளியல் தோலை மேம்படுத்தும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். தோலிலுள்ள திசுக்களை ஆற்றலுள்ளதாக்கும். அடிக்கடி மண் குளியல் செய்தால் உடம்பின் நிறத்தை அழகுபடுத்தும். தோலிலுள்ள புள்ளிகள் மறையும். அம்மை வடுகள், தோல் வியாதிகளால் எற்படும் குறைகள் நீங்கும். சோரியாசிஸ், வெண் குஷ்டம், தொழுநோய் கூட குணமாகும்.

மண் குளியல் ருமாடிக்கால் உண்டாகும் வலி, மூட்டுகளில் வலி, காயங்களால் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும். மண் குளியல் 30 & 60 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். குளிக்கும்பொழுது நோயாளிக்கு குளிரக் கூடாது. அழகுக் கலைகளில் இது பயன்படும்.


வெ. சுந்தரராஜன்


Spread the love
error: Content is protected !!