மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. இயற்கையாகவே பஞ்ச பூத சக்திகளில் ஒன்று மண் ஆகும். நிலத்தில் 3 அடி முதல் 4 அடி ஆழம் வரை தோண்டி கற்கள், துண்டுகள், இரசாயன கலவைகள் ஏதுமின்றி மண்னை எடுத்துக்கொள்ளவும். இது நோய்களை குணப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.
மண் சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகள்.
மண் சிகிச்சையானது சூரிய ஒளியில் உள்ள சக்தியை உடல் பெற உதவுகிறது.
குளிர்ந்த மண்ணை உடலில் தடவி நீண்ட நேரம் அவை உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் நீங்கி உடலானது சமநிலையடைகிறது.
உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும், உருவமும் எளிதாக கிடைக்கிறது.
பயன்படுத்தும் முறை
நன்கு சலித்த மெல்லிய மண்ணை ஈரமான துணியில் வைத்து, அதனை பாதிக்கப்பட்டவர்களின் வயிற்று அளவிற்கு கட்டி, செங்கல் வடிவ அளவில் அவர்களின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று அதன் மீது படாதவாறு மேலே போர்த்த வேண்டும்.
மண் குளியல்
மண் குளியல் தோலிற்கு இரத்த சுழற்ச்சி மற்றும் வலிமையை அளிக்கின்றது. இதனை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். மண் குளியலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்க வேண்டும். உடல் முழுவதும் குளிர்ந்த நீரால் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாலியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக்கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.
மண்குளியலின் பயன்கள்
உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்த பலனை தருகிறது.
உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
பசியின்மை, மன உளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்திஜி மண்குளியலை பயன்படுத்தியுள்ளார்.
மண் கட்டியின் பயன்கள்
மண் கட்டியை அடிவயிற்றில் பயன்படுத்தும் போது ஜீரண கோளாறுகள் நீங்கி, உடல் சூடும் தனிகிறது.
முழுவதுமாக தயாரிக்கப்பட்ட மண் கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும் பொழுது பிரச்சனைகள் நீங்குகிறது.
முகத்திற்கு பயன்படுத்துதல் சுத்தம் செய்யப்பட்ட மண்னை 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கரும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. பின் 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவவும்