குறையில்லாத மனிதனே கிடையாது அனைத்து மனிதர்களிடமும் குறையிருக்கின்றது. எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் அவரிடமும் குறை இருக்கும். மனிதன் குறையுடனேயே பிறக்கின்றான், குறையுடனேயே வாழ்கின்றான். இறுதியில் குறையுடனேயே இறக்கின்றான். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களால் குறையில்லாத எவரையேனும் காண முடியுமா? உலகில் குறை இல்லாத மனிதன் என்று எவருமே கிடையாது.
குறைகளைக் கண்டறிந்து குறையென ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சித்து ஓரளவு தன்னை மாற்றிக் கொண்டு அல்லது ஓரளவு நல்லவனாக வாழ முயற்சிப்பதே வாழ்க்கை. வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் தான் – தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடைபெறும் போராட்டம்.
ஆசைகளும் சகல எண்ணங்களும் நம்மை தீய வழியில் செலுத்திட முயற்சிக்கும். ஒரு நிமிடம் நாம் நமது தவறான எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் இடமளித்தால் நாம் நமது மனிதன் வழி நடத்தலின் படியே தவறான வழிக்கு சென்று விடுவோம்.
நாம் மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு நம்மிடமும் தவறான பழக்கவழக்கங்களும் செயல்களும் உள்ளன என்பதனை உணர்ந்து நம்மை நாமே மதிப்பிட்டு பின்னர் பிறரை விமர்சிக்க வேண்டும். இதனைத்தான் வள்ளுவர்
குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து அவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
குற்றமில்லாத மனிதனைத் தேடுவது அலையில்லாத கடலைத் தேடுவது போன்றதாகும்.
இதனையே “மற்றவர்களுடைய குற்றங்களைக் காண்பது, மற்றவர்களின் குற்றங்களைக் கூறுவது ஆகியவை நாம் செய்யும் மோசமான குற்றங்களாகும்”
இயேசு நாதர் கூறியுள்ளார்.
குறை நிறை இல்லாத மனிதனே கிடையாது. எது அதிகமாக உள்ளதோ அதனை வைத்து நல்லவர்கள், கெட்டவர்கள் என பாகுபடுத்திக் கொள்ள வேண்டும். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு நாணயத்திற்கு எவ்வாறு இரு பக்கங்கள் உள்ளனவோ அதனைப் போலவே மனிதனிலும் குறை நிறை ஆகிய இரு குணங்களும் இருக்கும். இந்த எதார்த்த உண்மையை நாம் ஏற்க பழகிக் கொள்ள வேண்டும். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
எனவே நாம் பிறர் குறைகளைப் பெரிது படுத்தாது, குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்து நல்லவர்களைத் தேடிச்சேர்ந்து, தீயவர்களை விட்டொழித்து வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டும். நல்ல வாழ்விற்கு இயேசுவின் இந்த வழிகாட்டல் பயனுள்ளதாக அமையும் என நம்புவோம்.
தங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் டாகடர். எஸ். செந்தில் குமார்.