கொசுக்களிடம் இருந்து தப்பிக்க

Spread the love

மழை காலம் வந்த உடனே மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, எல்லா வியாதிகளும் வந்து விடும். அதற்க்கு முக்கிய காரணம் இந்த கொசுக்கள் தான். கொசுக் கடியில் இருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கான சில வழிமுறைகளை பற்றி கீழே பார்ப்போம்…

காலையிலும், மாலையிலும் தான் கொசுக்கள் அதிகமாக நம்மை சீண்டிப் பார்க்கின்ற நேரம். அதனால் அந்த நேரத்தில் முடிந்த அளவு உங்கள் உடல் முழுவதும் மூடுமாறு ஆடைகளை அணியவும்.

தண்ணீர் தேங்குகின்ற இடங்களையும்,  வீட்டு குளியலறைகளையும்  சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு எந்த இடத்திலும்  தண்ணீர் தேங்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் தண்ணீர் தேங்குகிற இடத்தில் தான் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடித்து வருவதினால், நோய் வருவதை தடுத்து விடலாம்.

மிகவும்  வாசனையான சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களை பயன்படுத்தாதீர்கள்,  ஏனென்றால் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாத நேரத்தில் பூக்களில் இருக்கின்ற வாசனையை  தேடிப் போகும். திறந்த வெளியில் படுத்து தூங்குவதை தவிர்க்கலாம், கொசு வலையை பயன்படுத்துவது நல்லது.

நம் வியர்வையை கொசு மோப்பம் பிடிக்கும், அதனால் எப்பொழுதும் சுத்தமாக இருங்க வேண்டும். நம் உடம்பில் இருந்து வெளியாகின்ற வெப்பம் அக சிவப்பு கதிர்கள், இதன் மூலம்  தான் கொசுக்கள் நம்மை  அடையாளம் தெரிந்து கொள்கிறது.

கொசுக்களுக்கு கருப்பு நிறமும், நீல  நிறமும்  தான் சீக்கிரம் கண்ணுக்கு தெரியும். அதனால் இரவு  நேரத்தில் கருப்பு மற்றும் நீல நிற ஆடைகள்  அணிவதை தவிர்ப்பது நல்லது.

காற்று நன்கு வீசுகின்ற இடத்தில் கொசுக்கள் அதிகளவில் வராது. அதனால் காற்று இல்லாத இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.

கீ.பி


Spread the love