காலை நேரத்து உணவு அனைவருக்கும் மிக மிக அவசியமானது. காலை உணவு உடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து உடலுறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். ஆகையால் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது.
வெறும் வயிற்றில் தேனீர், காபி போன்றவற்றை பருகும் பழக்கத்தைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.இதனால் குமட்டல், வயிற்றுக் கோளாறுகள், உடல் உபாதைகள் போன்றவை ஏற்படும்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய சிலவற்றைப் பற்றி இப்பொழுது காணலாம்.வெறும் வயிற்றில் சுத்தமான தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. மலச்சிக்கல், குடல்கள் சுத்தம் செய்யப்பட்டு சிறுநீர் பிரிவது மற்றும் சிறுநீரகச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகின்றன. இதனால் பசியும் தூண்டப்படுகிறது. புற்றுநோய் குணமாகிறது.
ஓட்ஸ் : வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடுவது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.
தேன் : எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது. இதை வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதால் வறட்டு இருமல், சளி, காய்ச்சல், அலர்ஜி ஆகியவை குணமாகும்.
பாதாம்: செரிமாண சக்தியை தூண்டும். உடல் மெருகேற்றும், உடல் எடையை குறைக்க உதவும்.
சாப்பிடும் முறை: முதல் நாளிரவே ஐந்தாறு பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதன் தோல்களை நீக்கிய பின் சாப்பிடுதல் மிகவும் நல்லது.
பப்பாளி: தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இதில் நிறைய வைட்டமின்களும், தாதுக்களும், வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளன.
தவிர்க்கவேண்டிய உணவுகள்
தக்காளி, வாழைப்பழம், தயிர், சாக்கலேட் மற்றும் இனிப்புவகைகள்.