அசுர பலத்துக்கு மூக்கடலையை இப்படி சாப்பிடுங்க….

Spread the love

மூக்கடலையை கொண்டைகடலை என்று கூறுவார்கள். இது இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மூக்கடலையில் இரண்டு வகை இருக்கின்றது. அதில் மற்றொன்று தான் கருப்பு மூக்கடலை, ஆனால் இரண்டிலும் நிகரான சத்துகள் அடங்கியுள்ளது. உடல் மெலிந்து காணப்படுகிறவர்களும், ஜிம்க்கு செல்பவர்களும் முதல் நாள் இரவு பச்சையான மூக்கடலையை தண்ணீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் சாப்பிட்டு வர உடல் பருமனாகும். இதனை தொடர்ந்து 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இரும்புசத்து நிறைந்து இருப்பதினால் இரத்த ஓட்டம் அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு கூடி உடல் வலிமை பெறுவதோடு ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருகும்.                                                                                                                         

கொண்டைகடலையை சாப்பிட்டு வர இருமல், சளி போன்ற நுரையீரல் பிரட்சனைகள் நீங்கும். அதோடு சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் கொண்டைகடலையை தாரளமாக எடுத்து கொள்ளலாம். ஏனென்றால் இதில் சல்பர் இல்லை. மரபணு கோளாறு வராமல் தடுக்ககூடிய கோலின் வைட்டமின் இந்த கடலையில் இருக்கின்றது. கொண்டைகடலையை பச்சையாக ஊற வைத்து சாப்பிடும்போது தசைகள் வளர்ச்சி அடைவதோடு எலும்புகள் மற்றும் நரம்புகள் பலம் பெறும். சுவைக்காக எந்த மாதிரியானாலும் வேகவைத்து சமைத்து சாப்பிடலாம். இதில் புரதம் மற்றும் சுண்ணாம்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது. மனிதர்களின் ஓரல் உடல்நலத்திற்கு இது மிகவும் நல்லது. மேலும் இதில் நார்சத்து நிறைந்திருக்கின்றது. 

இதனால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாது. உங்களின் தினசரி ஸ்நாக்ஸ்க்கு மிகவும் நல்லது. அதோடு இதில் கொழுப்பு குறைவாக இருப்பதினால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் சாப்பிட்டு வரலாம். ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிஸ், 11mg சோடியம் மற்றும் வைட்டமின், மினரல்ஸ் என அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றது. ஆனால் இதில் கொழுப்புகள் கிடையாது. 14.5gm புரோட்டீன் அடங்கியுள்ளது. இதில் இருக்கும் கிளைசெமிக் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும். மூக்கடலையில் இருக்கும் பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் சி மற்றும் B6 இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதில் இருக்கும் நார்சத்து இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதனால், இருதய நோய் வர வாய்ப்பு இல்லை. மற்ற காய்கறிகளை விட கொண்டை கடலையில் செலினியம் அதிகமாகவே உள்ளது. இதில் இருக்கும் மினரல்ஸ் கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கும் மினரல்ஸ் ஆண்டி ஆக்ஸிடன்ட் கேன்சர் செல்களை அழிக்கின்றது.

To buy herbal Products>>>


Spread the love