இரும்பு சத்து அதிகமாக நிறைந்திருக்கும் மற்றொரு கீரை வகைதான் புதினா,இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகின்றது. புதினாவைதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் பித்தம், குமட்டல்போன்றவற்றை நீக்கி உடலிற்கு புத்துணர்ச்சியை வழங்கி, களைப்பை நீக்கும். நமது உடல்குளிர்ச்சியாக இருக்க நீர் சத்து மிகவும் அவசியம். இந்த தண்ணீரை குடித்தால் உடலில்நீரேற்றம் தடுக்கப்பட்டு உடலிற்கு ஈரப்பதத்தை வழங்கும்.
வயிற்று வலி, வயிற்று பொருமல், மலச்சிக்கல் ஏற்படும்போது, புதினாசாதம் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு புதினா சாறு, கீல் வாதம்,அஜிரனத்திற்கும் நல்ல மருந்து. டயடிற்கு புதினா சிறந்த உணவாகும். இது இரத்தத்தில்இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதினால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இரத்தஅழுத்தத்தை கட்டுபடுத்துவதோடு புதினா மன அழுத்தத்தையும் குறைக்கும்.
கண்ணிற்கு புலப்படாத நச்சுகளை அழிக்ககூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் புதினாவில்இருக்கின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வாய்க்குள் இருக்கும்நச்சுகளை வெளியேற்றி வாய் துர்நாற்றம், ஈறு வெடிப்பு மற்றும் பற்களில் ஏற்படும்கோளாறுகளையும் சரி செய்ய உதவுகிறது. பெண்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துவருவதினால் இரத்த சோகை வராமலும் தடுக்க முடியும். ஏனென்றால் இதில் இரும்புசத்து அதிகம்.
இது இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கும்.