மினரல்களின் சிறப்பம்சங்கள்

Spread the love

டி.வில கிரிக்கெட் மாட்ச்சோ, சீரியலோ பார்க்கறப்ப இடைவேளைக்கு, இடைவேளை குழந்தைகளுக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், மினரல்ஸ் எல்லாமே இதுல இருக்கு. இல்ல… எங்க பானத்துல தான் இருக்குன்னு விளம்பரம் வரும். நம்மில் சிலர், இவ்வளவு மினரல்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன் எல்லாம் உண்மையிலேயே நமக்கு தேவை இல்ல.. இதெல்லாம் வியாபார தந்திரம்னு சந்தேகப்படலாம். ஆனா உண்மையிலேயே இது எல்லாம் நம்ம உடம்புக்கு கண்டிப்பா தேவைப்படுது.

சில பெற்றோர்கள், பெருமையா என் குழந்தைங்க காய்கறிகளே சாப்பிட மாட்டாங்கன்னு சொல்லுவாங்க, அது உண்மையிலேயே அவங்க அறியாமையை காட்டுதுன்னு தான் சொல்லனும். ஏன்னா நாம் தினமும் சாப்பிடற காய்கறிகளில்தான் கனிமங்கள் (மினரல்ஸ்), புரோட்டீன் சத்துக்கள் எல்லாமே இருக்குது. நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய விலையில கிடைக்கற கீரைகளில் இதெல்லாம் அதிகமா இருக்குது.

ஒவ்வொரு மினரல்களைப் பற்றியும் அதோட சிறப்பம்சங்களைப் பற்றியும் பார்ப்போமா?

கால்சியம்

நம்முடைய பற்களுக்கும், எலும்புகளுக்கும் முக்கியமான அடிப்படை தேவையா இத சொல்லலாம். எலும்புகளின் அடிப்படை தன்மையானது கால்சியம் பாஸ்பரஸ்&ஐ கொண்டுள்ளது. 99 சதவீதம் எலும்புகளில் கால்சியம் ஆதிக்கம் தான். ரத்தத்திலும் கால்சியம் 100 னீறீ க்கு 10 னீரீ அளவுக்கு இருக்கிறது. நம்முடைய நரம்பு மண்டலமானது சிறப்பாக இயங்கவும், சதைகள் விரிந்து, சுருங்கவும். ரத்தம் வெளியேறுவதை தடுக்கவும் (ஙிறீஷீஷீபீ சிறீஷீttவீஸீரீ) கால்சியம் இன்றியமையாததாக விளங்குகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக, ஒரு மனிதனுக்கு ஒரு கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. விட்டமின் ‘டி’ யுடன் சேர்த்து கால்சியம் நம் உடலில் பல வேலைகளை செய்கிறது. கால்சியம் குறைவாக உட்கொண்டால், நரம்பு தளர்ச்சி, வயிற்று தசை பிடிப்பு, கோபம், மாதவிலக்கு முன் படபடப்பு, கர்பப் பை சுருங்குதல், ஸிவீநீலீமீts, ஞிஷீக்ஷீமீஷீனீணீறீணீநீவீணீ, ளிstமீஷீஜீஷீக்ஷீஷீsவீs போன்ற நோய்கள் உண்டாகலாம்.

அதிகமான கால்சியம் காரணமாக கிட்னி மற்றும் குடல் பகுதிகளில் ‘கல்’ உண்டாகலாம்.

பால் பொருட்களான பால், சீஸ், யோகர்ட் இது தான் கால்சியம் அதிகமாக கொண்டது. கீரை வகைகள், ஆரஞ்சு, பழங்கள், சில மீன் வகைகள், பருப்பு வகைகளிலும் கால்சியம் உள்ளது.

மெக்னீசியம்

இந்த உலோகமானது நமக்கு அடிப்படையாக தேவைப்படும் ஒன்று. நம்முடைய நரம்புகளும், தசைகளும் சரிவர இயங்குவதற்கு இது தேவைப்படுகிறது. 90 என்சைம்ஸ் நம் உடம்பில் சரியாக இயங்க, இந்த மெக்னீசியம் தேவைப்படுது. மெக்னீசியத்தின் அளவு நம் உடம்பில் குறைந்தால் தசைகள் தானா நடுங்க, இயங்க ஆரம்பித்து விடும். கால் மற்றும் பாதங்களில் சுளுக்கு ஏற்படலாம். தூங்கும் பொழுது சிறுநீர் கழிக்கும் பழக்கமும் இருக்கலாம். கீரைகளில் நமக்கு தேவையான மெக்னீசியம் கிடைக்க பெறும். முட்டை, கடல் உணவு பயிர்களிலும் கிடைக்க பெறும்.

பொட்டாசியம்

நம்முடைய உடலில் சுற்றிக் கொண்டு இருக்கும் அடிப்படை திரவம் இது. சோடியத்தூள், இது கூட்டு சேர்ந்து நமது நரம்புகளுக்கும், திசுக்களுக்கும் தேவையான சக்தியையும், உந்துதலையும் கொடுக்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. நமது சிறுநீரில் தேவையில்லாத அமிலங்களை கலக்கி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. மெக்னீசியம் நமது உடலில் குறைந்தால் வாந்தி, பேதி, தசை இயங்காமை, மனதளவில் சோர்வு, விரக்தி, ரத்தத்தில் சர்க்கரை நோய் கூட வரலாம். அதிகமான அளவு மெக்னீசியம் நம் உடலில் இருந்தாலும் கிட்னி, இதயம் பாதிக்கப்படலாம். வாழைப்பழங்கள், தக்காளி, ப்ரோக்கலி, கீரை வகைகள், ஞிக்ஷீஹ் திக்ஷீuவீts, லிமீரீuனீமீs களில் றிஷீttணீssவீuனீ அதிகமாக கிடைக்கப் பெறும்.

காப்பர்

காப்பர் தாமிரமானது மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. நரம்புகள், எலும்புகள் ஆகியவற்றுக்கும் இது தேவைப்படுகிறது. நமது உடலில் காப்பர் அளவு குறைந்தால் எலும்பு தேய்மானம், இதயம் பழுதடைவது, ரத்த சோகை வரவும் வாய்ப்பு இருக்கு. ஆனா காப்பர் பற்றாக்குறை உடலில் வருவது ஒரு அரிதான நோய்ப்பற்று என்றுதான் சொல்லணும். கீரை வகைகள், நிமீறீணீtவீஸீ, ழிuts மற்றும் கொட்டைகளில் காப்பர் காணப்படும்.

இரும்பு

இரும்புச்சத்து ரொம்ப அவசியமானதுங்க. நம்ம ஊர்ல உள்ள பாட்டிங்க கூட குழங்தைங்க கண்ணை பார்த்து இரும்பு சத்தே இல்லைன்னு சொல்லிடுவாங்க. நமது உடலில் சராசரியாக 4 கிராம் இரும்பு சத்துள்ளது. அதில் பாதிக்கு மேல் ரத்த செல்களில் ஹீமோகுளோபின் கலந்திருக்கு. நமது உடலுக்குள் ஆக்சிஜன் உட்கொள்ள, இரும்பு பங்கு அதிகமானது.

ஒரு ஆண்டுக்கு தினமும் 10 மில்லிகிராம் இரும்பு சத்து தேவைப்படுது. ஒரு பெண்ணிற்கு 12 மில்லிகிராம் இரும்பு தேவைப்படுது. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பொதுவாக இரும்பு சத்து குறைவாக காணப்படும். இரும்பு சத்து அளவு குறைந்ததுன்னா, ஹீமோகுளோபின் அளவும் குறையும். இதனால ஆக்சிஜனானது மூளைக்கும், திசுக்களுக்கும் செல்லும் அளவு குறையும். இதனால தலைவலி, சோர்வு, மூச்சு திணறல் வர வாய்ப்பு இருக்கு.

இறைச்சிகளில் அதிகமா இரும்பு சத்து காணப்படும். குறிப்பாக மீன்கள், முட்டைகள், பீன்ஸ், ஞிக்ஷீவீமீபீ திக்ஷீuவீts ஆன பேரீச்சம் பழம், கீரை வகைகள், பச்சை காய்கறிகள் இவற்றில் கூட கிடைக்கும். நீங்க நிறைய இரும்பு சத்துள்ள பொருட்களை சாப்பிட்டாலும் உடல் ஏத்துக்காது. நீங்க இதை தவிர்க்க இரும்பு சத்தான சாப்பாட்டை சாப்பிடறப்ப, அது கூட விட்டமின் ‘சி’ நிறைந்த ஆரஞ்சு ஜுஸ் இல்லேன்னா தக்காளி ஜுஸையும் சேர்த்து சாப்பிடணும். ஏன்னா இந்த டீ, காபி சாப்பாட்டுல இருக்கற இரும்பு சத்துக்களை உடலுக்குள் செலுத்த முடியாமல் தடுக்க கூடும். சைவ உணவு உண்பவர்களுக்கு போதுமான இரும்பு சத்து இல்லாமல் இருக்கலாம். அப்படிபட்டவங்க இரும்பு சத்துள்ள பருப்பு வகைகளையோ, ஓட்ஸ் உணவோ சேர்த்து சாப்பிடலாம்.

மேங்கனீஸ்

இது உடலுக்கு அத்தியாவசியமான உலோகங்களில் ஒன்று. இந்த உலோகமானது எலும்பு வளர்ச்சிக்கும், நரம்புகளிலுள்ள எரிச்சலை குறைப்பதற்கும், குழந்தை பிறப்புக்கும், நீர் பொருட்கள் உடலுக்குள் சீராக சென்று, வருவதுக்கும் உதவுது. என்சைம் வேலைப்பாடுகளுக்கும், மேங்கனீஸ் உலோகம் அவசியமானது. மேங்கனீஸ் குறைவாக உடலில் இருந்தால் ணிஜீவீறீமீஜீsஹ், பிஹ்ஜீமீக்ஷீ – ணீநீtவீஸ்வீtஹ் – கூட வழிவகுக்கும். முழு தானியங்கள், ஆப்பிள், பைனாப்பிள், செர்ரி வகைகள், இஞ்சி, கிராம்பு, வெங்காயம், வாழைப்பழம், வேர்கடலை போன்ற பொருட்களில் மேங்கனீஸ் காணப்படும்.

துத்தநாகம்

துத்த நாகம் என்கின்ற உலோகம் நம்முடைய எலும்புகள், திசைகள், கண்கள், விந்து, உறுப்புகள் சீராக இயங்க தேவைப்படுகிறது. துத்தநாகம் அளவு உடலில் குறைந்தால் நகங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலைமுடிகள் உயிரற்று போய்விடும். சுவையற்ற நாக்கு, மூட்டு வலி இப்படி பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. பொதுவாக உடல் முழுவதும் பாதிப்பு உண்டாகும். மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, ஆடு இறைச்சி மற்றும் லெக்யூம்களில் துத்தநாகம் கிடைக்க பெறும்.

குரோமியம்

குரோமியம் நம்முடைய உடலில் குளூக்கோஸின் அளவை ஒரே சீராக வைக்க உதவும். குரோமிய அளவு உடலில் குறைந்தால் கண் பார்வையில் பல சிக்கல்கள் உண்டாகும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாட்டு இறைச்சி, விஷீறீணீssநீபீ மற்றும் காளான்களில் குரோமியம் அதிக அளவில் கிடைக்கும்.

செலினியம்

செலினியம் காட்ராக்ட் (கண்ணில் திரை) வராமல் தடுக்கும், சில வகை கான்சர் நோய் வராமலும் காக்கும். குரோமோசோம் பாதிக்கப்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. அசைவ உணவுகளில் செலினியம் அதிகம் கிடைக்க பெறும். அதனால் சைவ உணவு உண்பவர்கள் முழு தானியங்கள், பூண்டு, முட்டைகள் உட்கொள்வதன் மூலம் செலினியம் குறைபாட்டை நீக்கலாம்.

கோபால்ட்

விட்டமின் பி-12 விஷீறீமீநீuறீமீ ன் ஒரு அங்கம் கோபால்ட். இது உடலில் சர்க்கரையை ஜீரணமாக்கும் தன்மை கொண்டது. இறைச்சி, லிவர், நட்ஸ், பழங்கள், காய்கறிகளில் இவை கிடைக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு விட்டமின் பி-12 குறைவாக கிடைக்கலாம். அதனால் பி-12 மாத்திரைகளை அவர்கள் உட்கொள்ளலாம்.

நிக்கல்

நிக்கல் நம்முடைய உடலிலுள்ள ஆர்.என்.ஏ., டி.என்.ஏ-விலுள்ள நியூக்லிக் ஆஸிட்களை சீராக இருக்க உதவும். இது குடலுக்கும், கிட்னி இயக்கத்திற்கும் தேவையான ஒன்று. இது குறைவாக உடலில் இருந்தால் குடல் பாதிக்கப்படும். நிறைய நிக்கல் உடலில் இருந்தாலும் ஜிஷீஜ்வீநீ பிரச்சனைகள் வரக்கூடும். தானியங்கள், காய்கறிகளில் இவை கிடைக்கும்.

விஷீறீஹ்தீமீபீமீஸீuனீ

இது பற் சிதைவு உண்டாவதை தடுக்கும். வயதான காலத்தில் ஆண்கள் ஆண்மை இழப்பையும் இது தடுக்கும். மீsஷீஜீலீணீரீமீணீறீ நீணீஸீநீமீக்ஷீ வராமலும் இது காக்கும். இது தேங்காய், தானியங்கள், சூரியகாந்தி விதைகள், பால் பொருட்கள், டீ, சோயா, ஸிணீவீsவீஸீs சிக்கன், மீன் வகைகளில் கிடைக்கும்.

க்ஷிணீக்ஷீணீபீவீuனீ

மனித திவீssuமீs-களில் இந்த க்ஷிணீக்ஷீணீபீவீuனீ காணப்பெறும். இது கறுப்பு மிளகில் கிடைக்கும். சோயா பீன் எண்ணெய், சோளா எண்ணெய், ஆலிவ் மற்றும் ஆலிவ் எண்ணெயில் இவை கிடைக்கும்.

ஐயோடின்

ஐயோடின் இல்லாமல் ஜிலீஹ்க்ஷீஷீவீபீ ரீறீணீஸீபீ-கள் இயங்காதுன்னு பலருக்கு தெரியும். ஒரு வளர்ந்த நபரின் உடலில் 30 மில்லி கிராம் ஐயோடின் இருக்கும். இது குறிப்பாக தைராய்டு சுரப்பிகளில் தான் அதிகம் காணப்பெறும். ஐயோடின் இந்த தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க உதவுகிறது. ஒரு நாளைக்கு வளர்ந்த மனிதருக்கு சராசரியாக 150 மில்லி கிராம் ஐயோடின் தேவைப்படுகிறது. இது மிஷீபீவீக்ஷ்மீபீ உப்பு, கடல் உணவுகள் மற்றும் ஷிணீறீt ளிஸீவீஷீஸீs ல் கிடைக்கும்.

கனிமங்கள் நமக்கு காய்கறிகள், பழங்களில் அதிகம் கிடைக்கிறது. இவைகள் மண் முலம் செடிகளுக்குள் செலுத்தப்பட்டு நாம் உட்கொள்வதன் மூலம் நமக்கு கிடைக்க பெறும் இயற்கை பொக்கிஷம். ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்வதன் மூலமும் இதை நாம் பெறமுடியும். ஆயுர்வேதம் மூலமாக தயாரிக்கப்படும் கனிமங்களுக்கு ஙிலீணீsனீணீs என்று பெயர்.

இந்த கனிமங்களை திரும்ப, திரும்ப கேட்டு சாணம் மூலம் எரிக்கப்பட்டு இந்த ஙிலீணீsனீணீs தயாரிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஙிலீணீsனீணீ தயாரிக்க பல மாதங்கள் கூட ஆகலாம்.

நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். உடல் சீராக இருந்தால் மனம் இருமடங்கு சுறுசுறுப்பாக இயங்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லைன்னு தான் சொல்லணும்.


Spread the love