குதிரைவாலி உப்புமா
தேவையான பொருட்கள்
குதிரைவாலி & 1 கப்
உளுந்தம்பருப்பு & 1/2 டே. ஸ்பூன்
துவரம்பருப்பு & 1 டே.ஸ்பூன்
கடலைபருப்பு & 1/2 டே.ஸ்பூன்
மிளகு & 1/4 டீஸ்பூன்
சீரகம் & 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்
கடுகு & 1/4டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு & 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை & சிறிது
வெங்காயம் & 1 நறுக்கியது
செய்முறை
குதிரைவாலி, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைபருப்பு, மிளகு, சீரகம் முதலியவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும். குதிரைவாலி அரிசி தவிர அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையை வறுத்து வைத்துள்ள குதிரை வாலி அரிசியுடன் கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயம் போட்டு வதக்கி 21/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். பின் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் குதிரைவாலி அரிசியைப் போட்டு கிளறி விடவும். அடுப்பைக் குறைத்து வாணலியை ஒரு மூடி போட்டு மூடி வேகவிடவும். இடை இடையே கிளறி விடவும் வெந்தவுடன் இறக்கவும்.
ராகி பிஸ்கட்
தேவையான பொருட்கள்
ராகி மாவு & 1/2 கப்
கோதுமை மாவு & 1/2 கப்
பொடித்த வெல்லம் & 1/2கப்
வெண்ணெய் &1/2 கப் (100கிராம்)
பேக்கிங் பவுடர் & 1 டீஸ்பூன்
வெண்ணிலா எஸென்ஸ் & 1/2 டீஸ்பூன்
பட்டை பவுடர் அல்லது ஏலக்காய் பவுடர் & 1/2 டீ ஸ்பூன்)
குளிர்ந்த பால் & 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வெண்ணெயை சிறுசிறு துண்டகளாக நறுக்கி கையால் பிசறிக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை சேர்த்து விரல்களால் நன்கு பிசைந்து கொள்ளவும். இப்போது ராகி மாவு மற்றும் கோதுமை மாவை பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். இந்த மாவை வெண்ணெய் வெல்லக் கலவையில் கொட்டி சிறிது சிறிதாக பால் சேர்த்து எஸென்ஸ் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். கோதுமை மாவைத் தூவி இந்த பிசைந்த மாவை உருட்டி சப்பாத்தி போல் தேய்க்கவும். தடிமனாகவும் இருக்கக் கூடாது மெல்லியதாகவும் இருக்கக் கூடாது. 1/2 இன்ச் அளவிற்கு தேய்த்து பாட்டில் மூடி வைத்து சிறு சிறு பிஸ்கட் போல வெட்டி எடுக்கவும். ஓவனில் ‘180நீ’ 15 நிமிடங்களுக்கு பிரிஹீட் பண்ணி வைக்கவும். பிஸ்கட் டிரேயை வெண்ணெய் தடவி வைக்கவும். வெண்ணெய் தடவிய தட்டில் பிஸ்கட்களை அடுக்கி முள் கரண்டியால் (பின்பக்கம்) அழுத்தி டிசைன் மாதிரி உருவாக்கவும். டிரேயை ஓவனில் வைத்து 170 நீ 15tஷீ 20 நிமிடங்கள் பேக் செய்யவும். பிஸ்கட் நிறம் லேசாக பொன்னிறமாக வரும் வரை பேக் செய்யவும்.