சிறுதானியங்களின் பயன்பாடு கிட்டத்தட்ட 197௦-லேயே முடிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கம்பு, சோளம், கேழ்வரகு, ஊட்டச்சத்துக்கள் ஒரே பேக்கில் என பவுடராக விற்பதினால் நாமும் Ready Made உலகத்திற்கு மாறிவிட்டோம். சிறு தானியம் என சொல்லகூடிய கம்பு, சோளம், கேழ்வரகு இவற்றில்பேரூட்ட சத்துக்கள் இருக்கின்றது.
கால்சியம், இரும்பு, கலோரிகள், நார்பொருள், சுண்ணாம்பு சத்து என மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு தேவையான சத்துகள் சிறுதானியங்களில் இருக்கின்றது. அதிலும் சைவ உணவுகளிலேயே அதிகபடியான கால்சியம் வரிசையில் கேழ்வரகிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. மற்ற தானியங்களை விடவும் இதில் 344mg சுண்ணாம்பு சத்து நிறைந்திருக்கின்றது. போதுமான அளவு இரும்பு சத்தும் இருக்கின்றது.
சர்க்கரை நோயாளிக்கு அதிசிறந்த உணவு இந்த கேழ்வரகு,இது தற்போது சேமியா மாதிரி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கேழ்வரகிற்கு ஈடு கேழ்வரகு மட்டும்தான். புரதசத்து, மாவுசத்து, இரும்புசத்து, கண்கள் பாதுகாப்பிற்கு உதவுகிற கரோட்டீன் வரைக்கும் அடங்கியிருக்கின்ற மற்றொரு சிறப்புதான் கம்பு. உடல் களைப்பு, சோர்வு, கை, கால் வலி இவையெல்லாம் கம்பு சாப்பிடுபவர்களுக்கு வருவதில்லை.
இரத்த சோகைக்கும் good bye சொல்லலாம். உலக அளவில் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, பல தொழிற்சாலைகளுக்கு மூல பொருளாக இருக்க கூடியது சோளம். மதுபானத்தில் தொடங்கி குழந்தைகளின் Nutrition பவுடர் வரை இதன் பயன்பாட்டை சொல்லிக்கொண்டே போகலாம். கலோரிகள் அதிகமாக நிறைந்ததினால் பிற நாடுகளில் காலை, மாலை, இரவு என சோளத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஓபிசிட்டி இருப்பவர்கள் தவிர,
சிறுதானியத்தில் இருக்ககூடிய நார்பொருள், பித்த உறுப்புகளை ஒன்றாக்கி, இதயத்திற்கு ஊட்டமளித்து, கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.
சுண்ணாம்பு சத்தின் குறைபாட்டால், எலும்புகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது. மகப்பேரு காலத்தில்,
பெண்களுக்கு சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியம். அதுவும் அந்த நாட்களில் இந்த சிறுதானியங்களை சாப்பிடுவதனால் சுண்ணாம்பு சத்தை குறைவில்லாமல் பாதுகாக்கலாம்.