மில்க் ஷேக்ஸ்

Spread the love

வாழைப்பழ மில்க் ஷேக்

தேவை

                        வாழைப்பழம்              -1

                        யோகர்ட்                    -1/2 கப்

                        பால்                 –           1/2 கப்

                        ஜாம்-                           1 டே.ஸ்பூன்

                        சீனி-                            தேவைக்கேற்ப

                        ஐஸ்க்யூப்ஸ்-               சிறிது

செய்முறை

பாலைக்காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். வாழைப்பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பழத்தை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஜாம், யோகர்ட், பால், சீனி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைச் சேர்த்து ஒரு அடி அடித்து சில்லென்று பருகவும்.

கோகனெட் மில்க் ஷேக்

தேவை

                        தேங்காய்ப்பால்-                     1 கப்

                        வாழைப்பழம்              -1

                        சீனி                             -தேவைக்கேற்ப

                        துருவியதேங்காய்-                  சிறிது

                        ஐஸ்க்யூப்ஸ்-               சிறிது

செய்முறை

வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேங்காய்ப்பால், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து தேங்காய் பூ தூவி ஜில்லென்று பருகவும்.

சோயா கொக்கோ மில்க் ஷேக்

தேவை

                        சோயாமில்க்-              1 கப்

                        கொக்கோபவுடர்-                   2 டீஸ்பூன்

                        பால்                             -1கப்

                        சீனி-                            தேவைக்கேற்ப

                        ஐஸ்க்யூப்ஸ்-               சிறிது

செய்முறை

பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சோயா மில்க், கொக்கோ பவுடர், சீனி, பால், ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துப் பருகவும்.

பீட்ரூட் மில்க் ஷேக்

தேவை

                        பீட்ரூட்-                                  1                                 

                        பால் –                          1/2 லிட்டர்

                        வெனிலாஐஸ்கிரீம்-    1 கப்

                        சீனி-                            தேவைக்கேற்ப

                        வெனிலாஎசன்ஸ்-      1/2 டீஸ்பூன்

                        ஜெல்லி-                      1கப்

                        தண்ணீர்-                     1 டம்ளர்

செய்முறை

பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பீட்ரூட் தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பாலுடன், பீட்ரூட் ஜுஸ், சீனி, வெனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ்கிரீம், ஜெல்லி சேர்த்து அலங்கரித்துப் பருகவும்.

ஆப்பிள் மில்க் ஷேக்

தேவை

ஆப்பிள்-1

           பால்-                           1 கப்

       எலுமிச்சம்ஜுஸ்        -1ஸ்பூன்

            ஜாதிக்காய்ப்பொடி – 1சிட்டிகை

            ஐஸ்க்யூப்ஸ்    -சிறிது

செய்முறை

பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் பால், ஆப்பிள், சீனி, ஜாதிக்காய்ப் பொடி, ஐஸ் க்யூப் முதலியவற்றைப் போட்டு ஒரு அடி அடித்து கடைசியாக எலுமிச்சம் ஜுஸ் கலந்து பருகவும்.

சாக்லேட் மில்க் ஷேக்

தேவை

            பால்-               1 டம்ளர்

            கொக்கோபவுடர் -1 டீஸ்பூன்

            சீனி -தேவைக்கேற்ப

            ஐஸ்க்யூப்ஸ் -சிறிது

செய்முறை

பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் பால், கொக்கோ பவுடர், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நுரை வரும் வரை அடித்துப் பருகவும்.

நுங்கு மில்க் ஷேக்

தேவை

            இள நுங்கு       -4

            பால் -2 கப்

            சீனி -தேவைக்கேற்ப

            ரோஸ்எசன்ஸ்    -சிறிது

            ஐஸ்க்யூப்ஸ்    -சிறிது

செய்முறை

நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் நுங்கு, பால், சீனி, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு பரிமாறவும்.


Spread the love
error: Content is protected !!