பால் வகைகள்… பலப்பல

Spread the love

தினமும் எல்லோரும் குடிக்கின்ற ஒன்று தான் பால், பாலை குடிக்க மட்டும் பயன்படுத்தாமல் சாப்பாட்டிற்காகவும் பயன்படுத்துகிறோம்,  பாலை வைத்து பல விதமான இனிப்புகளை செய்து  சாப்பிடுகிறோம். நமது கடைகளில் வாங்குகின்ற பால் பாக்கெட்டுகளில் கொழுப்பு எவ்வளவு  கலக்கின்றனர் என்று பார்க்க வேண்டும். இந்த கொழுப்பு  அளவை  வைத்து தான்  பாலை பல வகைகளாக பிரிக்கிறார்கள். இந்த ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொண்டோம் என்றால், பாலை எப்படிலாம்  பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெளிவாக புரியவரும். இந்த பாலின் பல வகைகளை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

முழு பாலில் தான் நிறைய  கொழுப்பு உள்ளது,  இதில் மொத்தம் 3.25% கொழுப்பு சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். பொதுவாக நாம்  உபயோகப்படுத்துகின்ற பால் இது தான். ஆனால் கொழுப்பு நிறைய உள்ள பாலை குடிப்பது உடம்புக்கு நல்லது தான் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

2% குறைக்கப்பட்ட கொழுப்பு, இது  போன்று  பால் பாக்கெட்டில் போட்டு இருந்தால் பாலுடைய மொத்த கொழுப்பு  2 சதவிதம் இருக்குறதாக அர்த்தம்.

உங்களுக்கு  கொழுப்பு இல்லாத பால் வேண்டும் என்றால்  கொழுப்பு நீக்கிய பால்  என்று அழைக்கப்படுகிற பாலை சாப்பிடலாம்.  இந்த பாலில்  கொழுப்பே  இருக்காது.

மாட்டுக்கு நல்ல ஆர்கானிக் தீவினம் மட்டுமே கொடுத்து, அந்த மாட்டில் இருந்து கிடைக்கின்ற  பாலை தான் இயற்கை பால் என்று கூறுகிறார்கள். லாக்டோஸ் ப்ரீ பால் (lactose free milk), அதாவது சாதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற  பசும் பாலில் இருந்து லாக்டோஸ்சை(lactose) மட்டும் பிரித்து எடுத்துவிடுவார்கள்.

இந்த எல்லா வகையான  பாலிலும்  கொழுப்பு மட்டும் தான் மாறுபடுமே தவிர, பாலில் இருக்கின்ற  9  வகையான சத்துகளும் அப்படியே தான் இருக்கும் என் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மிருகங்களில் இருந்து கிடைக்கப்படும் பாலின் வகைகள்

நாம் பிறந்ததில் இருந்து பால் குடிக்கின்றோம்,  தாய்பாலுக்கு பிறகு பொதுவாக  நம்  எல்லோருக்கும் தெறிந்த பால், பசும் பால் மட்டும் தான். பிறந்ததில் இருந்து மாட்டுப் பாலை மட்டும்  தான் நாம்  குடித்து வளர்கிறோம். ஆனால், உலகம் முழுவதும் மனிதர்கள் பசு மாட்டிடம் மட்டும் பால் எடுக்கவில்லை, நிறைய மிருகங்கள் இடமிருந்து  பால் மனிதனுக்கு கிடைக்கப்படுகிறது. எந்தெந்த மிருகங்களிடம் இருந்து மனிதனுக்கு பால் கிடைக்கின்றது என்பதை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

பசு மாட்டிடம் இருந்து பெற படும்  பால் மிகவும்  ஆரோகியமானது என்று கூறுகிறார்கள், சக்கரை வியாதிக்கும், இருதய நோய்க்கும்  பசு மாட்டு பால் நல்லது என்று கூறுகிறார்கள் .

எருமை மாட்டு பால், இது மிகவும் கேள்வி பட்ட  ஒன்று தான். இந்த பாலில் தான்  கொழுப்பு  நிறைய இருக்கின்றது. அதிகமானோர்க்கு எருமை மாட்டு பால் செரிக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு செரிக்கவே செரிக்காது என்று கூறுகிறார்கள்.

பசும் பாலை போன்றே ஆட்டு பாலும் ஒன்று.  இதில் கொழுப்பு  குறைவாக தான் உள்ளது, இதனால் எளிதில் செரிமானமும் ஆகிவிடும்.  நிறைய  சத்துகளும், கால்சியமும் ஆட்டு பாலில் அடங்கி உள்ளது. தேச தந்தை மஹாத்மாகாந்தி தினமும் ஆட்டுப்பாலை குடிப்பதை  வழக்கமாக கொண்டிருந்தார்.

செம்மறி ஆட்டு பாலில்  கொழுப்பு  அதிகமாக  இருக்கும். எனவே தான்   இந்த பாலில் இருந்து  பாலாடைக்கட்டி மற்றும் கெட்டியான தயிர் கிடைக்கின்றது.

ஒட்டக பாலில்  கொஞ்சம் உப்பு இருப்பதாக   கூறுகின்றனர்,  அது மட்டுமில்லாமல் வைட்டமின்  C ஒட்டக பாலில் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த பாலில் இயற்கையாகவே லாக்டோஸ் (lactose free) இருப்பதாக கூறுகிறார்கள். நிறைய

புரதங்களும் இந்த ஒட்டக பாலில் இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் நாம் தினமும் பசும்பாலை குடிப்பது போல, அரேபியர்கள் ஒட்டகப்பாலை தான்  தினமும் குடிக்கிறார்கள்.


Spread the love
error: Content is protected !!