கைக்குழந்தைக்குப் பசும்பால்

Spread the love

தாய்ப்பாலைப் போன்றே பசும்பாலை மாற்றக் கூடிய ஒரு புதிய உத்தியை அமெரிக்க ஐக்கிய நாட்டு விவசாயத்துறை (US agriculture department) கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளால் எளிதா ஜீரணிக்கக் கூடிய வகையிலிருக்கும் இப்புதிய கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தாய்ப்பாலின் குணங்களனைத்தும் அடங்கிய குழந்தைகள் பால் தயாரிப்புகள் (Infant milk formulas) பல தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது.

தங்கள் முதல் ஆண்டுப் பருவத்தில் பசும்பாலை மட்டும் குடித்துவந்த குழந்தைகளுக்கு இரும்புத்தாது, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உடலில் குறைந்தும், சோடியம், புரதம் போன்றவைகள் அதிகமாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு முதல் வருடம் முழுவதற்கும் தாய்ப்பாலோ அல்லது இரும்புத்தாது அடங்கிய பாலுணவுகளையோ கொடுத்து வரலாம் என அமெரிக்கக் குழந்தைகள் அகாடமி தெரிவித்திருக்கிறது.

பசும்பாலும், தாய்ப்பாலும் அவற்றில் காணப்படும் புரதத்தின் அளவு மற்றும் அடர்த்தியைப் பொறுத்தே ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. இந்த இரண்டு முக்கிய வேறுபாடுகளினால் தான் தாய்ப்பால், பிறபால் வகைகளைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்துடனும், எளிதாகச் செரிமானம் அடையக்கூடியதாகவும் இருக்கிறது.

மேலும் குழந்தைகளில் பால் புரத ஒவ்வாமையை உண்டாக்கும் புரோட்டீன் பீட்டா லாக்டோகுளோபுலின் (Protein beta lacto globulin) பசும் பாலில்தான் இரக்கிறதே தவிர தாய்ப்பாலில் இல்லை.

உணவுநலம் ஜனவரி 2014


Spread the love
error: Content is protected !!