மிளகு சமையல்

Spread the love

முருங்கைக்காய் மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்

புளி       –     எலுமிச்சை அளவு

மிளகாய்த்தூள்        ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய்       2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு        ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு      ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு        ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை   –     தேவையான                              

அளவு

பெருங்காயம்         சிறு துண்டு

மிளகு                2 டீஸ்பூன்

தனியா               ஒரு டீஸ்பூன்

வெல்லம்       சிறு துண்டு

கடுகு           ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி        ஒரு டீஸ்பூன்

வெந்தயம்       கால் டீஸ்பூன்

உப்பு                 தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, பெருங்காயம், உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, மிளகு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

ஆறியதும் இதனை தண்ணீர் விடாமல் பொடித்துக்கொண்டு, பின் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பின், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மீதமிருக்கும் பருப்பு வகைகள், கறிவேப்பிலை, வெந்தயம், ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

பின் மஞ்சள்பொடி, மிளகாய்த்தூள், முருங்கைக்காய், புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.

மிளகு குழம்பில் முருங்கைக்காய் சேர்ப்பதால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சுவையான முருங்கைக்காய் மிளகு குழம்பு தயார்.

கிராமத்து மிளகு குழம்பு

கோடை காலங்களில் அதிகளவில் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடித்து விடும். இதற்கு மிளகு குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம். இத்தகைய மிளகு குழம்பை நாம் எவ்வாறு செய்வது, என்பது பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்    50 கிராம்

பூண்டு               15

புளி                  1 எலுமிச்சை அளவு

உப்பு                தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு

மல்லி (தனியா)       3 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு      1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு       1 டேபிள் ஸ்பூன்

மிளகு                2 டேபிள் ஸ்பூன்

பச்சரிசி               1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் 6 டேபிள் ஸ்பூன்

கடுகு           1 டீஸ்பூன்

சீரகம்           1 டீஸ்பூன்

வெந்தயம்       1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை   சிறிது

செய்முறை

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான கிராமத்து மிளகு குழம்பு தயார்.

ஜோகி


Spread the love