மிளகு ரசம்

Spread the love

மிகவும் எளிமையாக, விரைவில் செய்யக்கூடிய மிளகு ரசத்தில் உள்ள நன்மைகள் மற்றும்  செய்யும் முறை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

பயன்கள்

ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றது. ரசம், வயிற்றை சீர் செய்து, உடல் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இருமல், சளி, மூச்சு முட்டுதலுக்கு நல்ல தீர்வை தருகிறது. காய்ச்சல் நேரங்களில் ரசம் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்

மிளகு –         ஒன்றரை தேக்கரண்டி

பூண்டு           5 பல்

சீரகம் –               ஒன்றரை தேக்கரண்டி

புளி –            கைப்பிடி அளவு

தக்காளிப்பழம் – 2   

துவரம்பருப்பு –        ஒன்றரை   தேக்கரண்டி

கடுகு –            ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய்    ஒன்றரை   தேக்கரண்டி

மிளகாய் வற்றல் –  5

கறிவேப்பிலை,      

கொத்தமல்லி –    தேவையானஅளவு

உப்பு –        தேவையான அளவு

செய்முறை

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடுகு சேர்த்து அவை பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் 650 மில்லி தண்ணீரில் புளியை கரைத்து அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றைப் பொடி செய்து சேர்க்கவும்.

பின் அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு கொதிக்க விடவும்.

கொத்தமல்லி இலையை ரசத்தின் மீது தூவி ஊற்றி இறக்கி வைத்து விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.


Spread the love