பொதுவாக கறிவேப்பிலையை சமையலுக்கு பயன்படுத்தி விட்டு அதை தூக்கி எறிபவர்கள்தான் அதிகம். சிலர் மட்டும்தான் அதில், துவையல் மற்றும் பொடி செய்து சாப்பிடுகிறார்கள். கறிவேப்பிலையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் நிறைந்துள்ளன. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட, கை, கால் நடுக்கம் நிற்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். நகங்கள் எளிதில் உடையாது, வலிமை பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வீக்கம், கட்டிகள் இருந்தால் குறையும். குளுக்கோஸ் அளவை சமன் செய்யும். கூந்தல் கருப்பாகும். முடி உதிர்தலைத் தடுக்கும். உடல் சூடு தணியும். இளம் நரை தவிர்க்கும்.
கொத்தமல்லியையும் கறிவேப்பிலையைப் போலவே பலரும் பயன்படுத்துகிறார்கள். அதில் வைட்டமின் பி1, பி2, சி, புரதச்சத்து, கால்சியம், நார்ச்சத்து உள்ளன. குளிர் காய்ச்சல், பித்தம், வாத நோய்கள் குணப்படுத்தும். புண்கள், வீக்கம் விரைவில் குணமடைய உதவும். நரம்பு, எலும்பு, தசைகளில் உண்டாகும் பாதிப்புகளைத் தவிர்க்கும். பெண்களுக்கு மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
புதினாவில் நீர்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, தயமின் உள்ளன. புதினாவில் வைட்டமின் டி உள்ளது. செரிமானத்துக்கு உதவும். தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால், ரத்தம் சுத்தமாகும். செரிமான மண்டலம் மேம்படும். சிறுநீர் பிரியும். சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். காய்ச்சல் குணமாகும். வாந்தி ஏற்படுகின்ற உணர்வைத் தடுக்கும். மாதவிலக்கின்போது ஏற்படும் அடி வயிற்று வலி நீங்கும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்கும். வாய் துர்நாற்றம் நீங்கும்.