மாதவிடாய் பிரச்சினை

Spread the love

பெண்ணின் பிறப்புறுப்பில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ரத்தப்போக்கு இருப்பதை மாதவிடாய் என்கிறோம். இதன் சுழற்சியை பிட்யூடர் சுரப்பியின் ஹார்மோன்களும், கருப்பையும் கட்டுப்படுத்துகின்றன. கர்ப்பப்பை எஸ்ட்ரோஜன் எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதன் அளவு மாறுபட்டால் செக்சில் ஆர்வம் இருக்காது. வயது ஆக ஆக இதன் அளவு குறையும். இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியான விகிதத்தில் இல்லாமலிருந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் தோன்றும்.

மாதவிடாய் பிரச்சினைகள் பலவாறாக உள்ளன. அவை :

Dysmenorrhoea
Premenstrual tension (pmt)
Amenorrhoe
Oligomenarrhoba
Hypomenorrhoba
Menorrhoba
Dyspunctional uterine bleeding
Utero vaginal prolaise
Stress incontinence

Dyvmenorrohoea:

உதிரப் போக்கில் வலி -ஏற்படுவதை இப் பெயர் கொண்டு அழைக்கிறோம். பொதுவாக சாதாரண இரத்தப் போக்கில் இடுப்புச் சதை இறுக்கம் காரணமாக லேசான வலியிருக்கும். ஆனால் இங்கு சொல்லப்படும் Dysmenorrohoea வலி மாதவிடாய் ஆரம்பிக்குமுன் முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும். அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே வலி தோன்றும். தோன்றிய வலி 5&6 நாட்கள் நீடிக்கும். ஏதாவது இரண்டு நாட்களில் வலி தாங்கமுடியாமலிருக்கும். தசைகளை இழுத்துப் பிடித்து வலி தோன்றும். (Cramp) அல்லது வயிற்றில் திருகுவலி (Colicky) போல் தோன்றி உடலை வருத்தும். இவ்வலி அடிவயிற்றில் ஆரம்பித்து தொடைக்குப் பரவும். சில நேரங்களில் முதுகுப்புறம், கீழ் வலியிருக்கலாம். வாந்தி, வயிற்றுப் போக்கு, தலை சுற்றல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். சாதாரண மாதவிடாய் வலி திருமணம் ஆனவுடன் நின்றுபோய் விடும்.

ஆனால் இரண்டாவது வகை தொடர்வலி திருமணம் ஆனபின்பும் நீடிக்கும். ஏனென்றால் இடுப்புச் சதைப்பகுதி சேதப்பட்டோ, புண்ணாயிருந்தாலோ, வீங்கியிருந்தாலும், இவ்வலி தொடரும் சிறுநீரில் ஃபைப்ராய்டு கட்டிகள் (Fibroid) இருந்தாலும் கருத்தடுப்பு சாதனங்கள் உபயோகப்படுத்தியிருந்தாலும் வலி தோன்றும்.

Amenorrhoe

இரத்தப் போக்கே இல்லாமலிருக்கும் நிலை. சுரப்பிகள் சரியாக வேலை செய்யாததால் இந்த நிலை ஏற்படுகிறது. மூளையில் காயம், மூளைக் காய்ச்சல், காக்காய் வலிப்பு போன்ற காரணங்களால் தோன்றும் நிலைக்கு முதல் வரை அல்லது ஆரம்ப நிலையாகும். மிகவும் போஷாக்கு குறைவு, மோசமான உடல்நிலையும் காரணம், உணர்ச்சிப் பெருக்கு, சூழ்நிலையும் மாதவிடாயை பாதிக்கும். மனதில் அதிகப் பதட்டம், மனச்சோர்வு, அழுத்தம், உடல்நோவு, திடீரென்று சூழ்நிலை மாறுதல் போன்றவை இரத்தப்போக்கு இல்லாத நிலைக்கு தள்ளும். இது நீடிக்கவும் செய்யும்.

premenstrual tension (PMT)

மாதவிடாய் ஆரம்பிக்க ஏழு நாட்களுக்கு முன்பே இதன் அறிகுறிகள் தோன்றும். பெண்ணின் மனநிலை (Mood) மிகவும் பாதிக்கப்படும். உடல்வருத்தி வேலை செய்தாலும் இம்மாதிரி நேரும். மன எரிச்சல், கோபம், பயம், தலைவலி, தூக்கமின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உடல் பருமன் அதிகரித்தல், மார்பகங்களில் வலி, சர்க்கரை அளவு குறைதல், கால்களில் எடிமா (Oedema) போன்றவை தொல்லை கொடுக்கும். மாதவிடாய தொடங்கியதும் இவை நின்றுவிடும்.

Oligomenarrhoba

நிறைய இடைவெளிவிட்டு ( 35 நாட்களுக்கு மேல் ) மாதவிடாய் தோன்றும் நிலை. Amenorrhoe போன்றது.

Hypomenorrhoba

மாதவிடாய் சமயத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைந்து காணப்படும். காணப்படும் நேரமும் குறைவாக இருக்கும். இது காலங்கடந்து நிகழ்ந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டாலும் இந்த நிலை ஏற்படும்.

Menorrhoba

அதிக அளவில், அதிக நாட்கள் உதிரப்போக்கு ஏற்படும் நிலை, சிறுநீரில் பைப்ராய்டு (Fibroid) கட்டிகள், இடுப்பில் வீக்கம், கருப்பை தொங்கல், கருப்பையில் புற்றுநோய், கருத்தடைச் சாதனங்கள் உபயோகப்படுத்தல், போன்றவை காரணங்களாகும். சிலருக்கு மன அழுத்தம், உயர் ரதத அழுத்தம், நல்ல உணவின்மை, ரத்த சோகை, கவலை, அதிக அளவில் செக்ஸ் உறவு, தேவையற்ற மருந்துகள், ஆஸ்பிரின் போன்றவற்றால் இந்த நிலை வரலாம்.

Dyspunctional Uterine Bleeding (DUB)

அசாதாரண அதிக இரத்தப்போக்கு ஏற்படும் நிலை. செக்ஸ் சம்பந்தமான ஹார்மோன்கள் சரிவர உற்பத்தியாகாமல் இருந்தால் கருப்பையில் ரத்தப்போக்கு அதிக அளவு ஏற்படும்.

இவ்வியாதிகளை இயற்கை வைத்தியம் மூலமாக குணப்படுத்தலாம். வாழும் முறையில் குறை, மனோரீதியான அழுத்தம், வேதனை போன்றவைகள் இவ்வியாதிகளுக்குக் காரணமாகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மேற்கொண்டு தூக்கம், சாப்பாடு, போன்றவை குறிப்பிட்ட நேரத்தில் இருந்தால்தான் மாதவிடாய் நோய்கள் அண்டா. மசாலா பொருட்கள், செயற்கை உணவுகள், குளிர்பானங்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பொரித்தவை, தவிர்க்கப்பட வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளைப் பயறுகள், பழச்சாறு, சூப் வகைகள் மிகவும் ஏற்ற உணவாகும். அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். நீராவிக் குளியல், நீச்சல், உடலைப் பிடித்துவிடல் நல்ல ஆரோக்யத்தைத் தரும்.

உண்ணும் உணவு மாதவிடாய் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உணவு அவ்வித பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருகிறது. தேவையான ஊட்டச் சத்து, இரும்புச் சத்து, வேண்டிய அளவு பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி, போன்றவை குறைந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் எழும். பொரிக்கப்பட்ட பதார்த்தங்கள், மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவு, அதிக அளவு காபி, டீ, அசைவ உணவு, டின்னில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய வகை தவிர்க்க வேண்டும்.

பழங்கள், சாலட், கோதுமை ரொட்டி (Wheat Bread) முளைவிட்ட தானியங்கள் போன்றவை சாப்பிட வேண்டும்.

எள், வேர்க்கடலையை நன்கு முதல் நாள் இரவு ஊற வைத்து, அதன் பாலை மறு நாள் எடுத்து இரண்டு கரண்டி (Tea spoon) தேன் அல்லது வெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது மாதவிடாயை ஒழுங்குபடுத்தும்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், அதிக அளவு தண்ணீர் மிகவும் ஆரோக்யத்திற்கு சிறந்தது. உப்பு குறைக்கப்பட வேண்டும். மிகவும் குளிர்ச்சியான, மிகவும் சூடான பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். இஞ்சி, பூண்டு, லவங்கம் சேர்க்கப்படலாம். மாதவிடாய் சமயத்தில் குறைத்து சாப்பிட வேண்டும். பழச்சாறு உகந்தது. கோதுமைப்புல்லின் சாறு நல்ல பலன் தரும். தினசரி அதை ஒரு மாதம் சாப்பிட்டால் பிரச்சினைகள் தீரும்.

கீழ்க்கண்ட பானங்களில் ஏதாவது இரண்டை தினசரி பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

சீரகம் (Cumin seeds) ஒரு தேக்கரண்டியெடுத்து 250 மில்லிகிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து இளம் சூட்டில் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

Aniseeds 1-&2 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து அதற்குச் சரியான அளவில் வெல்லம் சேர்த்து இளம் சூட்டில் தண்ணீரை தினசரி இரண்டு தடவை குடிக்கவும்.

புதினா இலையை சட்னியாக சாப்பிடலாம். உப்பு அல்லது வெல்லம் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தினசரி இரண்டு வேளை சாப்பிடலாம்.

நன்றாக தண்ணீர் விட்டு மோரில் வேப்பிலை / கொத்துமல்லி / புதினா / இஞ்சி / பூண்டு / சீரகம் (ஏதாவது ஒன்று) சேர்த்து குடிக்கவும்.

இரவில் இளம் சூட்டில் பாலை மிளகும், மஞ்சள் தூள் கலந்து இரவில் குடிக்கவும்.

பச்சை மாங்காயை 10&15 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சதைப் பகுதியை எடுத்து, வெல்லம், கொஞ்சம் உப்பு, சீரகப்பவுடர் சேர்த்து கொதித்த தண்ணீரில் கலந்து குடிக்கவும் ( 100 & 200 மில்லிகிராம்)

கீழ்க்கண்ட உணவுகள் தாமதமான, சரிவர ஒழுங்கில்லாத இரத்தப்போக்கு, மிகவும் குறைந்த மாதவிடாய் குறைகளை நீக்கும்.

ஹெர்பல் டீ குடிக்கவும். பீட்ரூட் சூப் மிகவும் நல்லது. தினசரி ஒரு கப் குடிக்கவும்.

இரண்டு தேக்கரண்டி கடுகுப் பவுடரை எடுத்து நன்றாக பசை செய்து குளிக்கும் தண்ணீரில் கரைத்து அத் தண்ணீரில் குளிக்கவும். மாதவிடாய் உடன் வரும்.

கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளும் பலனளிக்கும்.

தண்ணீர் சிகிச்சை (Hydrothrapy)

குளிர்ந்த, சூடான இடுப்பு குளியல் (Hip bath) மாதவிடாயின்போது எடுக்காமல், மற்ற நாட்களில் எடுத்துக் கொள்ளலாம். குளிர் பை (Cold pack) மாதவிடாயின் முன்பு நல்ல பலன் கொடுக்கும். வெப்பமான இடுப்புக் குளியல் & வலிகலந்த குறைந்த ரத்தப்போக்கின் போது எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதை மாதவிடாயின் ஏழு நாட்களுக்குமுன்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாயின் போது கூடாது. வயிற்றுப் பகுதியில் தண்ணீர் பையை (Abdominal Pack) வைத்துக் கொள்வது நல்லது. இதை எந்த நாட்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

சுடு தண்ணீரில் எனிமா எடுத்துக் கொள்வது பயனளிக்கும்.

களிமண் சிகிச்சை (Mud therapy)

குளிர்ச்சியான களிமண் பையை அடி வயிற்றில் 10&20 நிமிடங்கள் வைத்தால் நல்லது. Dysmenorrhoea, Amenorrhoe வுக்கு மிகவும் பயன்படும்.

தேகத்தை பிடித்துவிடல்:

தேகத்தை பிடித்து விடல் உடல் ஆரோக்யத்தை வலப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீர் செய்யும், சதைப் பகுதியை நன்கு வலுவடையச் செய்கிறது. மாதவிடாயின்போது தொடைப் பகுதியில், இடுப்பில், முதுகில் மசாஜ் செய்தால் Dysmenorrhoea , Amenorrhoe போன்றவற்றிற்கு பலனளிக்கும். Menorrhoba க்கு கூடாது. அடிவயிற்றில் இடவலமாக (Anti clock wise ) பிடித்துவிட வேண்டும். திடீரென்று தடவக் கூடாது. மருந்து சேர்க்கப்பட்ட எண்ணையைத் தடவக் கூடாது.

அழுத்திவிடுதல் (Acu pressere) :

பெண்கள் தசை இழுத்துப்பிடிப்பதால் (Cramps) ஏற்படும் வலியினால் கஷ்டப்படும் பொழுது முதுகை அழுத்திப் பிடித்தால் வலி மறையும். முதுகுத் தண்டின் வலதுபுறம் 2.5 செ.மீ. அளவில் முதுகின் நடுப்பகுதியில் அழுத்திவிட்டால் 30 செகண்டுகளில் வலி குறைந்துவிடும். 3&4 நிமிடங்களில் வலி முழுவதுமாக மறைந்துவிடும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு அழுத்திவிடுதல் நல்ல பயன்தரும். அடி வயிற்றில் தொப்பிளின் மூன்று செண்டிமீட்டர் கீழே ஒரு அழுத்திவிடும் பகுதியுள்ளது. மற்றொறு இடம் கால்களினுள் கணுக்காலுக்கு மேல் உள்ளது.

கைகளின் முதல் இரண்டு விரல்களில், கட்டைவிரல்களில் அழுத்திவிட்டால் மாதவிடாய் சதை பிடிப்பு மறைந்துவிடும்.

மேற்கொண்டு உடற்பயிற்சிகள், யோகாப் பயிற்சிகள், நடத்தல், நீச்சல், போன்றவை இடுப்புப் பகுதியை வலுப்படுத்தும், உடம்பை பொதுவாக பலப் படுத்துவதோடல்லாமல் உடம்பின் அங்கங்களை நெகிழ்வடையச் செய்யும்.

மாதவிடாய் நிற்பது (Meno pause):

பெண்களுக்கு மாதவிடாய் பல பிரச்சினைகளை ஏற்படுத்தித் தொல்லை கொடுக்கிறது. அது நிற்கும்பொழுதும் பெண்களை அல்லல் படுத்துகிறது. மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம். மாதவிடாய் நின்று அவள் இனிமேல் தாய்மையடைய முடியாது. தாம்பத்ய உறவில் நாட்டம் குறையுமென்பதை நினைவூட்டும் ஒரு நிலையாகும். எஸ்ட்ரோஜன் (Estrogen) அளவு குறையத் தொடங்குகிறது. கால்சியம் குறைந்து எலும்பு தேயத் தொடங்கும், உடையத் தொடங்கும். மேற்கொண்டு ரத்த நாளங்கள் இறுகி இதய நோய்கள், மாரடைப்பு அவளைத் தாக்கும். இந்த நிலை ஒரு பெண்ணின் 45&55 வயதிற்குள் ஏற்படும்.

திடீரென்று மனநிலை மாறுதல், பெண்ணின் பிறப்புறுப்பு உலர்ந்து போதல் போன்றவை உணரப்படலாம். இந்த மாற்றத்தை நல்ல திடமான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். கால்சியம், வைட்டமின், மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல தூக்கம், ஓய்வு தேவை. பனிபடர்ந்த புல்தரையில் நடக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிவது மிகவும் நல்லது.

உணவு மிகவும் முக்கியமானது உணவைப் பற்றி எழுதப்பட்ட பகுதியை நன்கு படித்து அதன்படி உட்கொண்டால் ஆரோக்யமாக இருக்கலாம். மேற்கொண்டு கீழ்க்கண்டவற்றை எடுத்துக் கொள்வது அவசியம்.

எலும்பு தேய்மானம், உடைவதை தவிர்க்க கால்சியம் அவசியம். எனவே பால், பயறுகள், சோயாபீன், பச்சைக் காய்கறிகள், எலுமிச்சம்பழம், பட்டாணி, பீன்ஸ், வேர்க்கடலை, சூரியகாந்தி விதை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் இ, நிறைய உடம்பில் சேர வேண்டும். மோர், கொழுப்பில்லாத பாலில் செய்யப்பட்ட பதார்த்தங்கள் உட்கொள்ளவும்.

ஹெர்பல் டீ நல்லது. ராயல் ஜெல்லி (Royal Jelly) ஓ.கே. நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் பலனளிக்கும். ஹார்மோன் மாத்திரைகள் ஹார்மோன் அளவை சீர்படுத்தும். நாலுநிமிடங்கள் சுடுதண்ணீரில் குளித்து, ஒரு நிமிடம் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். sauna baths சானா குளியல் நன்று. செக்ஸ் உறவில் ஈடுபடுவது, அதுபற்றி பேசுவது, உடல் ரீதியாக, மனரீதியாக நலம் தரும்.

மாதவிடாய் நிற்பது உடலில் ஏற்படும் ஒரு மாற்றமே. அது வாழ்க்கையை பாதிக்காது. எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் ஏற்றுக்கொண்டால் ரொம்ப பாதிப்பு இருக்காது.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகளைக் கண்டு ஓடாமல், எதிர்நோக்கி தீர்வு காண செயலில் இறங்கினால் நலமான வாழ்வு நிச்சயம்.


Spread the love