நினைவாற்றல் நீங்கள் எப்படி?

Spread the love

இப்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஞாபக மறதிஎன்பது சாதாரணமாகி விட்டது. வீட்டில் ஓடிப்பிடித்து விளையாடும் குழந்தை முதல் கொண்டு வேலைக்குப் போகும் பெரியவர்கள் வரை “ஸாரி மறந்துட்டேன்” என்று சொல்வது வழக்கமாகி விட்டது.அதே வேளையில்,ஞாபக மறதி என்பதை ஒரு குறையாக மட்டுமே பார்க்காமல்,நோயின் அறிகுறியாகப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நாம் பார்க்கும் ,கேட்கும், உணரும் ,சுவைக்கும் முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இறுக்கும்(சென்சரி மெமரி ) உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தையும் செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணிதுளிக்களுக்கு மட்டும் இருக்கும்.

ஷார்ட் டெர்ம் மெமரியை திரும்ப செய்யும் போது அது நாள் பட்டஞாபகசக்தியாக மாறும்.

எனவே , ஞாபக சக்திக்கு மிகவும் முக்கியமான இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல். மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்புள்ளது . இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுவதும் நினைவில் இருக்கும் .

பயம்…

பயம் இருக்கிறது.எதுவாக இருந்தாலும் பயமில்லாமல் சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.புதிதாக ஒரு போன் வருகிறது என்றால் யாரோ என்ன பேசப் போகிறாரோ என்று பலர் தேவையில்லாமல் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.அப்படி தேவையில்லாமல் பயப்பட்டுக் கொண்டிருந்தால் ,தேவையான ஞாபக சக்தி பெறுவதில் சிக்கல் வந்து விடும் கவனம்.

உடற்பயிற்சி செய்யுங்கள்!

உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும் ஆரோக்கியத்துக்கும் மட்டுமல்ல,மூளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்,ஞாபகத் திறனை அதிகரிக்கவும் அவசியமாகிறது.எனவே, தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது நல்லது.மூளையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள விஷயம் என்னவென்றால்,ஒன்றை நாம் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலையில் அதை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது.மிகச்சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்து கொள்ள நம்முடைய மூளை குறைந்தது 8 நொடிகளை எடுத்துக் கொள்கிறது.

பதற்றம் வேண்டாம்!

பெண்கள் காலையில் எழுந்ததில் இருந்து பரபரப்பாக பணிபுரிந்து கொண்டிருப்பார்கள்.பரபரப்பாக மட்டுமல்லாமல் பதற்றத்தோடும் செயல்படுகிறார்கள்.பதற்றம் ஞாபக சக்தியை பாதிப்பதற்கான காரணமாக இருக்கிறது. இந்த பதற்றம் மாணவர்களையும் விட்டு வைப்பதில்லை. “நல்லா தான் படிச்சிட்டு போனேன் ஆனா எக்ஸாம் ஹாலுக்குள்ள போனவுடன் மறந்து போயிடுச்சு”என்று சொல்லும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.அவ்வாறு அவர்கள் மறப்பதை exam blog out என்பார்கள்.எக்ஸாம் ஹாலுக்குள் சென்றவுடன் பதற்றத்தோடு இருப்பதால் தான் படித்தவை நினைவுக்கு வர மறுக்கிறது. பதற்றத்தை அறவே ஒழித்து விடுங்கள்.உங்கள் ஞாபக மறதிக்கு ரெட் சிக்னல் வந்து விழும். ஞாபகத்திறனுக்கு க்ரீன் சிக்னல் விழும்.

நல்ல தூக்கம் முக்கியம்

நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம்.இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு என்பவை இரண்டும் ஒன்றல்ல,ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம் .ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது.ஆனால் அவ்வாறு தூங்கி புத்துணர்ச்சி பெறாமல் இருந்தால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது.நினைவுத் திறனும் பாதிக்கப்படும்.ஆகவே,ஞாபகத் திறனைப் பெற வேண்டுமானால் நல்ல தூக்கத்தை ஒத்தி வைக்காதீர்கள்.

மூளையை முடங்க விடாதீர்கள்!

நன்கு விளையாட வேண்டும்.மூளையை நன்கு யோசிக்க வைக்கும்,கூர்மையாக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும்.உதாரணமாக,செஸ்,வார்த்தை விளையாட்டு,மெமரி கேம்ஸ் விளையாடுவதும் நல்லது.அதே வேளையில்,நமது பாரம்பரிய ஞாபகத் திறனை வளர்க்கும் பயிற்சிகளான தோப்புக் கரணம்,கூட்டு விளையாட்டுகள், அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடினால் ஞாபகத் திறன் வளரும்.இதற்காக பெரிய பெரிய பயிற்சிகள் செய்ய வேண்டுமென்பதில்லை.ஒன்றிலிருந்து 100 வரை எண்ணுங்கள்.பின்பு 100லிருந்து தலைகீழாக எண்ணுங்கள்.அதைத் தொடர்ந்து 100லிருந்து இரண்டிண்டாக குறைத்து எண்ணுங்கள்.பிறகு நான்கு நான்காக குறையுங்கள்.இப்படியே 6,7என்று எண்கள் தாண்டி எண்ணத் தெரிந்தால் உங்களுக்கு நல்ல நினைவுத் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.இதை தொடர்ந்து முயற்சி செய்யும் போது நினைவுத் திறன் அதிகரிப்பதைக் காணலாம்.

நினைவுத் திறன் வளர்க்கும் உணவுகள் சாப்பிடுங்கள்!

உணவு முறையை நன்கு தெரிந்தெடுத்து உண்ணுங்கள்.பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமாக புரதச் சத்து கிடைக்கும்.குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும்.இது தவிர பாஸ்பரஸ் மட்டும் குளுட்டாமிக் உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.ஜங்க் புட் வகைகளைத் தவிர்த்து, உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது நினைவுத் திறனை அதிகரிக்க உதவும்.

அசை போட்டுப் பாருங்கள்!

கண்டிப்பாக நினைவில் வைக்க வேண்டிய விஷயங்களை சத்தமாக சொல்லிப்பார்த்தல் நல்லது.படிக்கும் போது பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய் விட்டு படித்து,சற்று ரிதம் போல வரிசைப்படுத்திக் கொள்ளுதலும் சிறந்தது.புதிய தகவல்களை அறியும் போது ,அதனுடன் தொடர்புடைய பல தகவல்களை இணைத்துப் பார்க்க வேண்டும்.

இது தவிர ஒன்றை படங்கள் வடிவில் ஞாபகப்படுத்திப் பழக வேண்டும்.ஒரு விஷயத்தை வெறுமனே நினைவுப் படுத்துவதை விட விஷூவலைசேஷன் என்கிற காட்சிப்படுத்துதலைப் பயன்படுத்தும் ஞாபகத் திறன் அதிகரிக்கிறது.ஆகவே நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்தால் ஞாபக சக்தி குறைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.!

நினைவுத்திறன் அதிகரிக்க உதவும் மூலிகைகள்:

1.அதிமதுரம்_இதன் பொடி 5 கிராம் அளவு எடுத்து அரை தேக்கரண்டி நெய்யில் கலந்து உட்கொண்ட பின்பு 100 மிலி பசுவின் பால் அருந்தி வரவும்.

2.வல்லாரை வல்லாரை இலைப் பொடி 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினசரி இரவில் படுக்கு-முன்பு அருந்தி வரலாம்.

3.சீரகம் சீரகப்பொடியை கால் கரண்டி எடுத்து நெய் சேர்த்துக் குழப்பி வெ-றும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.

4.அகத்திக்கீரை வாரம் இருமுறை மதிய உணவாக சாப்பிட்டுவரலாம்.

5.சீந்தில் கொடி இலைச்சாறு நினைவுத் திறனை அதிகரிக்கும்.




Spread the love