எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு உரிமை கொண்டாடுவோர் யார் என்பது தான் முக்கியம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதற்கு முதலில் உரிமை கொண்டாடுவது, முதல் கண்டுபிடிப்பாளர் தான். அந்த வகையில் பார்க்கும் போது, காப்புரிமை என்பது மிகவும் முக்கியம். இந்த காப்புரிமை என்பது என்னவென்றால், ஒரு கண்டுபிடிப்பிற்கான அல்லது ஒரு பொருளுக்கான, முழு உரிமையும் குறிப்பிட்ட காலங்கள் வரையில், கண்டுபிடிப்பாளருக்கே உரியது என்பதை சட்டப்படியாக தெரிவிக்கும் ஆவணமாகும்.
இந்த காப்புரிமையை, ஒரு நாட்டிற்குள் அல்லது குறிப்பிட்ட எல்லை வரையில் மட்டுமே வழங்க முடியும் என்பது காப்புரிமை விதியாக இருக்கின்றது.எந்த ஒரு பொருளுக்கும் காப்புரிமை பெற்றவரையன்றி,பிறர் அந்த பொருட்களை உற்பத்தி செய்வதும், அதை விற்பதும் தடை விதி சட்டத்திற்குட்டப்பது. அதை பொருட்படுத்தாமல், காப்புரிமை பெறாத நிறுவனத்தினர் பொருட்களை தயாரிக்கும் பட்சத்திலோ அல்லது விற்பனை செய்யும் பட்சத்திலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
காப்புரிமை பெறத் தகுதிகள்:
ஒரு கண்டுபிடிப்பு அல்லது பொருளுக்கு காப்புரிமை பெற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1.எந்த ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும், தனித்தன்மையாக இருக்க வேண்டும்.
2.இதுவரை யாரும் அறியாததாக இருக்க வேண்டும்.
3.காப்புரிமை பெறும் கண்டுபிடிப்பு அல்லது பொருள், பயன்பாடு உள்ளதாக இருத்தல் அவசியம்.
இந்த காப்புரிமை, குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது 20 ஆண்டுகள் மட்டுமே.
குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குட்பட்டது.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகளுக்கு கட்டுப்பட்டது.
காப்புரிமை பெறுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?
காப்புரிமை பெறுவதால், ஒரு கண்டுபிடிப்புக்குரிய உரிமையாளர், தொழில்ரீதியாக பாதுகாப்பாக உணர முடியும். கண்டுபிடிப்புக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
அந்த பொருளின் அல்லது கண்டுபிடிப்பின் பயனை, காப்புரிமை பெற்ற உரிமையாளர் முழுமையாக அடைய உதவுகிறது.
உரிமையாளருக்கு சொந்தமான கண்டுபிடிப்பை பிறர் தவறாக பயன்படுத்துவதை தடை செய்யு வழிவகுக்கின்றது.
ஒரு கண்டுபிடிப்பு அல்லது பொருளுக்கான உரிமையாளரின், பொருளாதாரத்தை உயர்த்துதற்கு பயன்படுகின்றது.
அதேவேளையில், காப்புரிமை பெறாமல், எந்த பொருளாவது இருந்தால், அந்த பொருளை ,யார் வேண்டுமானாலும் தயாரித்துவணிக ரீதியாக பயன்படுத்தலாம். இதற்கு தடை ஏதும் இல்லை.
கடந்த 1995 ஆம் ஆண்டு, சுமன் ரி. தாஸ், ஹரிஹர் றி. கோலி என்கிற இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள், மிஸிஸிப்பி மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில், மஞ்சள், காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது என்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து, மஞ்சளுக்கு காப்புரிமையும் பெற்றனர். (காப்புரிமை எண்: 54015041).
மஞ்சளுக்கு காப்புரிமை வழங்கியதை எதிர்த்து, இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கழககமானது “பழங்காலக் கலை” என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது. இதன் கூற்றுப்படி, மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது தனித்தன்மை புதியதாக பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். மஞ்சள் வழக்கு தனித்தன்மை மற்றும் புதியதாக இல்லை ஆதலால் இரத்து செய்யப்பட்டது.
மஞ்சள் பால் தரும் நன்மைகள்
மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கிருமிநாசினியாக பயன்ப டுத்தப்படுகிறது.
ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ள ஓர் அற்புதமாகும். உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம் அல்லது களையலாம்.
அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலந்து சாப்பிடும் போது, எண்ணிலடங்கா பல உடல் நல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளை விக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.
மஞ்சள் பால் செய்வது எப்படி ?
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடலாம். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கலாம் அல்லது சொடாகவும் குடிக்கலாம் இது இயற்கை நமக்கு தந்துள்ள அற்புதமான அன்பளிப்பாக சொல்லலாம்.
இதனால் கிடைக்கும் நன்மைகள்
சுவாசக் கோளாறுகள் சீராகும்.
புற்றுநோய் தடுப்பு சக்தி கிடைக்கும்.
தூக்கமின்மை நீங்கும்
ஜலதோஷம் மற்றும் இருமல் விலகும்
கீல்வாதம் குணமாகும்
வலிகள் குறையும்
இளமை உணர்வு கிட்டும்
முதுமையை தள்ளிப்போடலாம்
ரத்தத்தை சுத்தப்படுத்தும்
கல்லீரல் நச்சு நீக்கும்
எலும்பு வலுப்பெறும்
செரிமானம் சீரடையும்
மாதவிடாய் தசைப் பிடிப்புகள் மறையும்
சரும பிரச்சனைகள் விலகும்
எடை குறைய உதவும்
மஞ்சள் டீ தயாரிப்பது எப்படி?
இது மிகவும் எளிமையானது ஓரிரு கோப்பை தண்ணீரை முதலில் கொதிக்க வைத்திடுங்கள். அதில் அரை இன்ச் அளவுள்ள மஞ்சள் கிழங்கை சுத்தம் செய்து துருவி சேர்த்திடுங்கள் அல்லது கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்திடுங்கள். இதனை கொதிக்கிற தண்ணீரில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் அது கொஞ்சம் ஆறியதும் அதில் தேன் ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூளை சேர்த்து குடிக்கலாம். இதனைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும்
இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும்
புற்றுநோய் பிரச்சனைகளிலிருந்தும் காத்திடும்
குடலின் செரிமானத்தை ஊக்குவிக்கின்றது
கொலஸ்ட்ராலைக் குறைத்திடும்
கண் கருவிழி பாதிப்புகளை சரி செய்கிறது
கசன் பார்வை சீராக்கும்
சருமத்திற்கும் மிகவும் நல்லது