விபத்தில் சீர்குலைந்த முகத்தை 3 டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சீர்படுத்தும் அதிநவீன சிகிச்சை முறையை லண்டன் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். ஸ்வன்சீஸ் மருத்துவமனையின் அட்ரியன் சுகர் தலைமையிலான மருத்துவர் குழு இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் விபத்தில் முகம் சிதைந்த நிலையில் வந்த நபர் ஒருவரை, மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு 3டி தொழில் நுட்பத்தின் மூலம் சீராக்கப்பட்டது, அதாவது பாதிக்கப்பட்ட நபரின் தலைப் பகுதி கருவி ஒன்றின் மூலம் 3டி முறையில் படம் பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் முகத்தை சீராக்குகின்றனர்.
மருத்துவக் குழுவின் ஈவான்ஸ், தாங்கள் வழக்கமான அறுவை சிகிச்சை முறையை பின்பற்றுவதாகவும், இந்த முறையின் மூலம் முகத்தை துல்லியமாகவும், விரைவாகவும் சீரமைக்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.