மருத்துவ தகவல்கள்

Spread the love

1.         உமிழ் நீர் சுரப்பிகள் சுரக்கும் ஒரு என்ஜைம் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் அந்த என்ஜைம் என்ன?

2.         பாலில் உள்ள சர்க்கரையை க்ளூகோஸாக எந்த என்ஜைம் மாற்றுகிறது?

3.         உணவிலிருந்து புரதத்தை பிரித்தெடுக்கும் என்ஜைம் எது?

4.         உடல் உணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்கள் யாவை?

5.         மூளையின் ஒரு பாகம், உணர்ச்சிகளையும், பிட்யூடரி சுரப்பியையும், உடலின் உஷ்ண அளவையும் கட்டுப்படுத்துகிறது. அந்த பாகத்தின் பெயர் என்ன?

6.         இதயத்தின் எந்த பாகம் உடல் முழுவதும் ரத்தம் பாய்வதற்காக “பம்ப்” செய்கிறது?

7.         ஜீரண மண்டலத்தின் எந்த பாகத்தில் புரதம் ஜீரணமாக்கப்படுகிறது?

8.         ‘லாக்ரிமல்’ (Lacrimal) சுரப்பியின் வேலை என்ன?

9.         உடலின் பெரிய அவயம் எது?

10.       எலும்பில் உள்ள வேதிப்பொருள் என்ன?

11.       குஷ்ட ரோகத்தை உண்டாக்கும் நுண்ணுயிர் (பாக்டீரியா) எது?

12.       ஷயரோகத்தை (ஜி.ஙி.) உண்டாக்கும் பாக்டீரியா எது?

13.       இதயத்திற்கு நல்ல மருந்தான ஒன்று வயிற்றில் ‘அல்சரை’ உண்டாக்கும் அந்த மருந்தின் பெயர் என்ன?

14.       உருளைக் கிழங்கை தோலுரித்து விட்டு சமைத்தால், எந்த விட்டமின் இழக்கப்படுகிறது?

15.       புழுங்கலரிசி, பச்சரிசியை விட சத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எந்த ஊட்டச் சத்து புழுங்கலரிசியில் அதிகம் உள்ளது?

விடைகள்:-

1.         டையாலின் (Ptyalin)

2.         லாக்டோஸ்

3.         பெப்சின்

4.         பிட்யூடரி ஹார்மோன்கள்

5.         ஹைபோதாலமஸ்

6.         இடது வென்ட்ரிகிள்

7.         வயிறு மற்றும் சிறுகுடல்

8.         கண்ணீரை சுரப்பது

9.         கல்லீரல்

10.       கால்சியம் பாஸ்பேட்

11.       Mycobacterium Leprae

12.       Mycobacterium tuberculosis

13.       ஆஸ்பிரின்

14.       விட்டமின் ‘கே’ மற்றும் ‘ஏ’

15.       தியாமைன் (விட்டமின் பி1)

சில மருத்துவ கண்டுபிடிப்புகள்

  1. பிறந்த குழந்தை ‘நீலமாக’ இருந்தால் அதை Blue – baby என்கிறார்கள். இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் நேரும் கோளாறு இது. இதை முதலில் கண்டறிந்தவர் – ஹெலன் ப்ரூகு டௌசிக் (Helen Brooke Taussih)
  • பாக்டீரியாவால் காயங்களில் தொற்று நோய்கள் உண்டாகும் என்று முதலில் கண்டுபிடித்தவர் – லூயி பாஸ்டர் (Loui’s Pasteur)
  • ஷயரோகத்தை (Tuberculosis) உண்டாக்கும் நுண்ணுயிரை கண்டுபிடித்தவர் ராபர்ட் கோச் (Robert koch) என்ற ஜெர்மன் தேசத்தை சேர்ந்த விஞ்ஞானி.
  • ஷயரோகம் தண்டுவடத்தையும் (முதுகெலும்பு) தாக்கும் என்று கண்டறிந்தவர் பெர்சிவல் பாட் (Percival Pott) எனும் அறுவை சிகிச்சை நிபுணர்.
  • டைபாய்டு ஜுரத்தை கண்டுபிடிக்க உதவும் இரத்தப் பரிசோதனையை கண்டுபிடித்தவர் – ஃபெர்னான்ட் விடால் (Fernand Widal) என்ற ப்ரான்ஸ் நாட்டு டாக்டர்.
  • அறுவை சிகிச்சையின் போது ‘ஆன்டி – செப்டிக்’ (anti – septic) மருந்துகளை முதன் முதலில் உபயோகித்தவர் – ஜோசப் லிஸ்டர் (Joseph Lister).
  • போலியோவிற்கு வாய்வழி தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் – ஆல்பர்ட் ஸாபின் (Albert B. Sabin)
  • அம்மை வியாதிக்கு (Small pox) தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் -எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner)
  • உடல் வெப்ப அளவை அளக்கும் தர்மோ மீட்டரை (Thermometer) கண்டுபிடித்தவர் – கலீலியோ கலீலி. (Galileo Galelei)
  1. விட்டமின் ‘டி‘ யை கண்டுபிடித்தவர் – மெக் கோலம் (Mc Collum)
  2. போலியோவிற்கான ஊசி மூலம் போடப்படும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் சால்க் – (Salk)
  1. ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை – சாமுவேல் ஹெய்ன்மான் (Samuel Hahnemann)
  1. கொலஸ்ட்ரால், விலங்குகளின் செல்களிலிருக்கும் அசிடிக் (acetic) அமிலத்திலிருந்து பெறப்படுகிறது இதை கண்டுபிடித்தவர் – கொன்ராட் எமில் ப்ளாக் (Konrad E Block mil)
  1. 1900 வருடத்தில் இரத்தத்தின் நான்கு பிரிவுகளை (A, B, AB and O) கண்டறிந்தவர் கார்ல் லேண்ட்ஸ்பீனர்(Carl Landsteiner)
  1. 1898 ல் அட்ரீனல் ஹார்மோனை தனிப்படுத்தியவர் யார்?- ஜான் ஏபல் (John J. Abel)

Spread the love