மருத்துவ பழமொழிகளும், விளக்கங்களும்

Spread the love

சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை.

சுக்கின் பயன் என்னவென்று தெரிந்து கொள்ளும் பொழுது செரிமானம் நன்றாக நடைபெற உதவும், தலைச் சுற்றல், மயக்கம், வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும். மனிதனின் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றிலும் ஏற்ற இறக்கமாக இருப்பதனால் மனிதனுக்கு நோய் உருவாகிறது என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. மேற்கூறிய மூன்று தோஷங்களையும் கட்டுப்படுத்தும் ஒரே மருந்து சுக்கு மட்டும் தான்.

கொத்தமல்லியுடன் சுக்கு சிறிதளவு ( நான்கில் ஒரு பங்கு அளவு) சேர்த்துக் கொதிக்க வைத்த பின்பு வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வர மனிதனுக்கு பல நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.

தன் காயம் வெங்காயம் சாப்பிடு

வெங்காயத்தின் பயன் என்ன? வெங்காயத்தின் தோலை உரிக்க உரிக்க இறுதி வரை வெங்காயத் தோலாகவே வந்து ஒன்றும் இருக்காது. ஆனால், தோலானது வாதம், பித்தம், கபம் மூன்றையும் சுக்கினைப் போல கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதில் சிறப்பானது. சாதாரண வெங்காயத்தோல் மிகப் பெரிய மருத்துவ குணம் கொண்டது போல, மனித உடலில் உறுப்புகள் சாதாரண வெங்காயத் தோல் மிகப் பெரிய மருத்துவ குணம் கொண்டது போல மனித உடலில் உறுப்புகள் வெறும் சதை, எலும்பால் ஆக்கப்பட்டது. சதையை அறுத்து, அதனுள் உள்ள எலும்பை, மற்றவைகள் ஏதும் உண்டா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதனை கணக்கில் கொண்டு தான் இதனை பழமொழியாகக் கூறினார்கள்.

உடம்பை முறித்துக் கடம்பில் கட்டு

கடம்பு என்பது கடம்ப மரத்தினைக் குறிக்கும் ஒரு வார்த்தை. கடம்ப மரத்தின் மருத்துவ பண்புகளை நாம் தெரிந்து கொண்டால், இப்பழமொழிக்கு பொருத்தமான அர்த்தம் புரிந்து விடும். கடம்ப மரமானது உடல் உஷ்ணத்தை வெளியேற்றி உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைத் தரும். கண், வயிறு சார்ந்த நோய்கள், மூட்டு வலி, தசைப் பிடிப்பு, குளிர் காய்ச்சல் போன்ற நோய்களைக் குணப்படுத்த கூடியது. கடின உழைப்பின் காரணமாக உடம்பு அதிகமாக களைப்பு ஏற்படுகிறது.

களைப்பை நீக்க போதுமான அளவு ஓய்வு எடுத்தால் தான், மறுநாள் மீண்டும் உழைக்கப் புத்துணர்ச்சி தரும். இதனை கருத்தில் கொண்டு, சோர்வுடன் உழைத்து விட்டு வரும் மனிதன் அன்றைய இரவு உறக்கத்தை, ஓய்வை கடம்ப மரத்தினால் செய்யப்பட்ட கட்டிலில் படுக்க வேண்டும் என்று பழமொழியின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

காலையில் துயில்வானும் மாலையில் இருப்பானும் பதர்

நாம் எடுக்கும் ஓய்வின் வேளை, பணிபுரியும் நேரம் போன்றவைகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாலை எழுந்து விடுவதால், காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்களை நாம் தரிசிக்கும் பொழுது, கண் ஒளி ஆரோக்கியம் கிடைக்கும். காலை சூரியன் உதயமாகும் அந்த வேளையில் மனிதனுக்கு ஆரோக்கியத்திற்குத் தேவையான ஓஷோன் வாயு அதிகளவு கிடைக்கும். மாலை நேரம் காற்றில் நடைபயிற்சி மேற்கொள்ள உடல் வலிமை பெறும். இவ்விரண்டைக் கொண்டு தான் இப்பழமொழி உருவாக்கப்பட்டுள்ளது.

எட்டியும் இருக்கும் நஞ்சு போக்கும் இஞ்சி சுரம் போக்கும்

எட்டி, எருக்கு போன்ற மூலிகைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரண்டு மூலிகைகளின் மருத்துவப் பண்புகளில், மனித உடலில் உள்ள நஞ்சை முறிக்கும் குணம் கொண்டது. இஞ்சி, சுக்கு, கடுக்காய் மூன்றையும் ஒரு மண்டலம் சுமார் 48 நாட்கள் உட்கொண்டு வர உடல் பலம் பெறும். இதில் இஞ்சி பால் வித காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

நாம் நமது உறவினர் அல்லது நண்பர் வீட்டிற்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால் எவ்வளவு உரிமைப் பட்ட்வராக அவர் இருப்பினும், நீண்ட நாட்கள் தங்குவது தவறு. மூன்று நாட்களுக்கு மேல் இருத்தல் கூடாது. இதன் மூலம் விருந்தளிப்பவர்க்கும், விருந்தினருக்கும் பலவித அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று கூறும் பெரியவர்கள், நாம் நோயினால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் சமயம் உட்கொள்ளும் மருந்து, மூன்று நாட்களுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது மேற்கொள்ளும் மருந்து, நோயினைக் குணப்படுத்தும் ஆற்றலை மூன்று நாட்களூக்குள் நோயாளிக்கு உணர்த்த வேண்டும் என்கிறார்கள்.

இருப்பவன் இரும்பைத் தின்பான் போறவன் பொன்னைத் தின்பான்

இங்கு இரும்பு என்று கூறப்படும் தனிமம் தாது உப்பு மனிதனுக்கு அவசியமான ஒன்று. இரும்புச் சத்த் குறைந்தால் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், நவதானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமுடன் வாழ இயலும்.

ஆனால், அடிக்கடி பெண் போகம் செய்ய வேண்டுமென்று விரும்புபவன், தங்கள் சேர்த்துள்ள் பஸ்பங்களை மருந்தாக அதிகளவு உட்கொள்வான். தங்கபஸ்பம் உட்கொள்வதால் பிற்காலத்தில் நரம்பு சார்ந்த பல கோளாறுகள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, ஆரோக்கியம் கெட்டு, மரணத்திற்கு விரைவில் வழி ஏற்பட்டு விடும்.

பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியாதே

நாம் உண்ணும் உணவுகளே மருந்தாகச் செயல்படுகிறது. மருந்தே உணவாகவும் பயன்படுகிறது. பக்க விளைவுகள் ஏதும் இதில் இருப்பதில்லை. உடலில் இரத்தம் போதுமான அளவு இல்லையெனில் உடல் வெளுத்துக் காணப்படும். அனிமியா என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இரத்த சோகைக்கு காரணம் உடலில் போதுமான அளவு இரும்புச் சத்து இருப்பது இல்லை என்பதே. இரும்புச் சத்து அதிகம் உள்ள ஒரே தாவரம் கீரை வகைகள் தான்.

அதுமட்டுமின்றி, பலவித உயிர்ச்சத்துகளும் அதிகம் உள்ளன. எனவே தான், கீரைகளின் அருமையை, அவசியத்தை நம் முன்னோர்கள் இதன் மூலம், அதாவது, விலை மதிப்பு அதிகம் உள்ள தங்கத்தைக் கூட எறிந்து விடலாம். ஆனால், மனிதனுக்கு நூறு சதவீத உடல் ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புச் சத்துகளும், மற்ற பிற உயிர்ச் சத்துகளுமுள்ள பொடிக் கீரையைக் கூட வீணாக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்காதே

உடலிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் அல்லது சிறுநீர்ப் பை நிரம்பி அழுத்தம் தரும் உணர்வை கொடுக்கும் பொழுது, சிறுநீரை வெளியேற விட வேண்டும். அதனை அடக்கி வைத்தல் கூடாது. அடக்கி வைப்பதால் உடலில் பல நோய்கள் தோன்ற காரணமாக அமைந்து விடுகின்றது. நீர்க்கட்டு, கல் அடைப்பு, மூட்டு வலி போன்றவைகள் இதற்கு உதாரணமாகும்.

பணி புரியும் இடங்களில் வேலை பழுவின் காரணமாக ஆண்களும், பெண்களும் முறையாகச் சிறுநீர் கழிக்காமல் தள்ளிப் போடுகின்றனர். மனிதனுக்குச் சுற்றுப்புற சூழலில், ஒரு சில நேரங்களில் கோபமும், ஆத்திரமும் ஏற்படுகிறது. மேற்கூறிய கோபத்தை, அடக்குவதால் கூட அவ்வளவு பாதிப்பு ஏற்படாது. ஆனால், சிறுநீர் கழிப்பதை அடக்கி வைத்தால் உடல் ஆரோக்கியம் கெடும் என்ற காரணத்தினால் தான் பெரியோர்கள் இப்பழமொழியைக் கூறியுள்ளனர்.


Spread the love