இந்தியாவில் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. சிலர் காலையில் எழுந்த உடன் நாடுவது டீயை தான். டீயைக் குடிப்பதன் மூலம் நமக்கு தேவையான புத்துணர்ச்சியும், ஆரோக்கியத்தையும் தருகிறது. இன்னும் சிலருக்கு டீயை விட மசாலா டீ என்றால் மிகவும் பிடிக்கும்.
மசாலா டீ செய்வது எப்படி ?
மாலை நேரத்தில் மசாலா டீ குடித்தால் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கும். ஆனால் சிலருக்கு மசாலா டீ எப்படி போடுவது என்று தெரியாததால் கடைக்கு சென்று குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இனி கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே தயார் செய்யலாம். மசாலா டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்
பால் – 3/4 டம்ளர்
தண்ணீர் – 1/2 டம்ளர்
டீ தூள் – 2 ஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்
மிளகு – 1/2 ஸ்பூன்
காய்ந்த இஞ்சி – 1
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
செய்முறை
முதலில் மசாலாவிற்கு எடுத்து வைத்துள்ளவற்றை அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாலையும், தண்ணீரையும் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பால் கொதிக்கும் போது, அதில் டீத்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு, அதில் சர்க்கரை மற்றும் மசாலா பொடியை போட்டு கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் கழித்து இறக்கி வடிகட்டி பரிமாற வேண்டும். சுவையான மசாலா டீ ரெடி .
டீயின் வகைகள்
டீயை தினமும் காலையில் எழுந்தவுடன் குடிக்கிறோம், சிலர் டீ பிரியர்களாக இருப்பார்கள். இருந்தாலும், நமக்கு தெரிந்தது குறிப்பிட்ட டீக்களின் பெயர்கள் மட்டும் தான். நமக்கு தெரியாமல் எவ்வளவோ டீக்கள் உள்ளன. வாங்க அவற்றை தெரிந்துக் கொள்வோம்,
· ஆப்பிள் டீ
· எலுமிச்சை டீ
· மின்ட் டீ
· மசாலா டீ
· திரிகடுகம் டீ
· இஞ்சி டீ
· பன்னீர் ரோஸ் டீ
· தூதுவளை டீ
· கற்பூரவல்லி டீ
· மல்லிகை பூ டீ
· ஏலக்காய் டீ
· கீரின் டீ
· நெல்லிக்காய் டீ
· செம்பருத்தி பூ டீ
· சங்கு பூ டீ
· ஆவாரம் பூ டீ
· கொய்யா இலை டீ
· முருக்கை கீரை டீ
· துளசி டீ
· கொத்தமல்லி டீ
· கரம் மசாலா டீ
· சோம்பு டீ
என பல வகை டீக்கள் உள்ளன. ஒவ்வொரு டீயிலும் ஒரு மருத்துவ குணம் உள்ளது.
மசாலா டீயின் நன்மைகள்
· மசாலா டீயைக் குடிப்பதன் மூலம், உடம்பில் உள்ள கலோரி குறைக்கிறது.
· சளிக்கு மசாலா டீ சிறந்த மருந்தாகும், ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர் யாராவது சளியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் அவர்களுக்கு மசாலா டீ போட்டு கொடுக்கலாம், சிறிது நேரத்தில் சளி குணமாகி விடும்.
· மசாலா டீ குடிப்பதன் மூலம், உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம் சரியாகிறது. செரிமானத்தை சீராக்குகிறது.
· வாயுக் கோளாறுகளை சரிசெய்ய மசாலா டீ பெரிதும் உதவுகிறது.
· சர்க்கரை நோய் உள்ளவர்கள் மசாலா டீயை குடிப்பதின் மூலம் அவர்களின் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கிறது. இதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது.
· மசாலா டீயை, குறிப்பாக பெண்கள் மாதவிடாயின் போது குடிப்பதனால், அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி குறைகிறது.
· மசாலா டீ தொடர்ந்து குடித்துக் கொண்டே வந்தால் மூட்டு வலி, முதுகு வலி ஆகிய இரண்டுமே குறையும்.
· மசாலா டீ தொடர்ந்து குடிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
பா.மு