தற்போது பேட்டரியால் இயங்கும் நவீன ரக பொம்மைகள் வந்து விட்டன. ஆனால், இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி பொம்மைகள் மட்டுமே இருந்தன. இந்த பொம்மைகள் வெறும் விளையாட்டுச் சாதனங்களாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காத்திடும் மருத்துவ குணம் கொண்டதாகவும் திகழ்ந்தன. இன்றைக்கு கூட்டுக் குடும்பம் என்ற தத்துவமே மறைந்து போய்விட்ட நிலையில், அக்காலத்தில் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து, குடும்ப உறவு முறைகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினர். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, மகன், மகள் என உறவு முறைகளை விளக்கும் பொம்மைகளும், சுற்றுச்சூழலை விளக்கும் வகையில் பறவைகள், விலங்குகள் பொம்மைகளும் தயார் செய்யப்பட்டன.
தேவையான மரங்கள் அழிவு; பொம்மை செய்யும் தச்சர்கள் மற்றும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால், மரப்பாச்சி பொம்மைகளின் உற்பத்தி அடியோடு நின்று விட்டது.
ஆந்திராவில் திருப்பதியிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திலும், சில குக்கிராமங்களிலும் மரப்பாச்சி பொம்மைகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. தொட்டிலில் கட்டுவதற்கும்,கோவில்களில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும் பயன்படுவதால் தான், இன்னும் மரப்பாச்சி பொம்மைகள் முற்றிலும் அழியாமல் உள்ளன.
சிறப்பு
குழந்தை நான்கு மாதத்திலிருந்து கைக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில வைக்கும். அது வாயில வைக்கும் பொருள் பிளாஸ்டிக்காக இருக்கும் பட்சத்தில், அதோட ஆரோக்கியத்துக்கு நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி அப்போ அதுக்கு மாற்று என்ன, நிறையவே இருக்கிறது. மர விளையாட்டு பொருள்கள். குறிப்பாக மரப்பாச்சி பொம்மைகள். இந்த மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தால் செய்யப்படுபவை. இப்பொழுது கருங்காலி குறைந்து போனதால், இந்த மரப்பாச்சி பொம்மைகளை வேறு மரங்களில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கருங்கலி மர கலர் வருவதற்கு, அந்த கலர் பெயிண்ட் அடித்து விடுகிறார்கள். எப்படி சரியான மரப்பாச்சி பொம்மைகளை அடையாளம் கண்டு கொள்ளவது? அரசாங்க பூம்புகார் கடைகளில் இது கிடைக்கும். அதுலேயும் சரியான கருங்காலி மர பொம்மையை எப்படி தேர்ந்தெடுக்கறது? கருங்காலி கொஞ்சம் வாசனையான மரம். சந்தனம் மாதிரி ஒரு வாசனை வரும். ரொம்ப உறுதியா இருக்கும். மரத்தை அரைத்தால் அடர் சிவப்பு நிறத்துல ஒரு வித மாவு வரும்.
சின்ன ஏழு இனச் பொம்மைகள் 400 ரூபாய் வரை விலை இருக்கும்.
பயன்கள்
வாங்கி வந்து அதை நல்ல தண்ணீரில் கழுவி நகத்தால சுரண்டி பாருங்கள். போலி பொம்மையாக இருந்தால், பெயிண்ட் நகத்தோடு வரும். நல்ல கருங்காலி மரமாக இருந்தால் வாசனை, மற்றும் அடர் சிகப்பு நிறத்தில் ஒரு வகை சாயம் வரும். இதை குழந்தைகள் வாயில வைத்தால், நோய் எதிர்ப்பு சக்தி வளரும், சளி, இருமல் தொந்தரவு குறையும், குழந்தை ஆரோக்யமாக வளரும்.
என்ன மரம்
மரப்பாச்சி பொம்மைகள் தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின் போது கொலுவில் வைக்கப்படும் ஒரு வகை மரப்பொம்மைகள் ஆகும். இவை பொதுவாக கருங்காலி மரத்தில் செய்யப்பட்டிருக்கும் அல்லது சிவப்பு சந்தன மரம் (Pterocarpus santalinus), இலவம் மரம் (Bombax) அல்லது செம்மரம் (Sequoideae) போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும் பாரம்பரிய பொம்மைகள் ஆகும். இவை ஆண் மற்றும் பெண் என்று ஜோடியாக கொலுப்பண்டிகையின்போது அலங்கரித்து வைக்கப்படும். இவை திருப்பதியில் ஏழுமலையானையும் அவரது துணைவியாரையும் குறிப்பிடும் வகையில் சிறப்பாக ஆபரணங்களுடன் செதுக்கப்படுகின்றன. இவை கொண்டப்பள்ளியில் ராஜா ராணி பொம்மையாகவும் செய்யப்பட்டு தவறாமல் கொலுவில் வைக்கப்படுகின்றன.
மரப்பாச்சி பொம்மைகள் பாரம்பரியமாக தாயிடமிருந்து மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்டு, அதைக்கொண்டே மகள் தன் வீட்டில் பொம்மை கொலு வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கப்படும் போது அவை மருத்துவ தன்மையுடன் விளங்குகின்றன. குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சப்பும்போது மருத்துவ குணங்கள் உடலில் சேருகின்றன.
To Buy Our Herbal Products >>>