மாஞ்செடி பயிரிடுவது எப்படி?

Spread the love

மாமரம் தமிழகத்தில் செழிப்பாக வளரக் கூடியது. மானா வாரியாகப் பயிர் செய்தாலும் நீர் பாய்ச்சி, பூச்சி நோய்களிலிந்து காத்து வந்தால் தகுந்த பலன் கிட்டும். கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரம் வரை உள்ள இடங்களில் எல்லாம் வளரும் வளர்ச்சிக் காலத்தில் மழையும், பூக்கும் காலத்தில் குளிரும், வறட்சியும், காய்க்கும் போது வெப்பமான கால நிலையில் ஏற்றது.

மாமரத்தின் வேர்கள் அதிக ஆழத்தில் படர்ந்து செல்லும். இதனால் ஆழமான வடிகால் வசதி கொண்ட, வளமான மண் ஏற்றதாகும். செம்மண்ணில் மாமரம் செழிப்பாக வளரும். இடத்தைப் பொறுத்தும், அதில் ஆதிக்கம் செலுத்தும் கால நிலையைப் பொறுத்தும், மாவகைகளைத் தேர்ந்தெடுத்து நட வேண்டும்.

மா ஒட்டுக்கள் கொட்டையிலிருந்து நேராக எடுக்கப்படும் கன்றுகளை விட விரைவில் காய்ப்புக்கு வருவதாலும், அதன் பரம்பரைப் பண்புகள் மாறாமல் எடுத்துச் செல்லும் தன்மையுடையதால் ஒட்டுக்களை வாங்குவது நல்லது.

மா ஒட்டுகள் நட ஜுலை முதல் டிசம்பர் வரை ஏற்ற காலமாகும். வளமுள்ள மண்ணில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆதலால் சாராரண மண்ணில் இடப்படும் இடைவெளியைக் காட்டிலும் அதிக இடைவெளி விடுதல் நல்லது. ஒவ்வொரு பக்கமாக 9 மீ முதல் 13 மீ வரை மா வகைகளுக்கு தக்கவாறு இடைவெளி விடவும். கன்றை நடக் குறைந்த அளவு ஒரு மாதத்திற்கு முன்னால் லு ஓ லு ஓ லு மீட்டர் அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். செடி நடுவதற்கு முன்னால் குழிகளில் சருகுகளைப் போட்டுக் கொழுத்துவது நல்லது. குழியைக் காம்போஸ்டும், மண்ணும் கலந்தோ, மக்கிய சாணி உரமும், மண்ணும் கலந்தோ நிரப்ப வேண்டும்.

ஒட்டுச் செடியின் தொட்டியை உடைத்து நீக்கிவிட்டுச் செடிக்காக மூடிய குழியில், தோண்டி எடுத்த ஆழமான பகுதியில் நட வேண்டும். நடும் போது ஒட்டுச் செடியின் வேரைச் சுற்றியுள்ள பந்து போன்ற மண்ணைக் கலைக்கக் கூடாது. நட்ட பின்னால் ஒட்டுப் பொருந்திய பாகம் மண்ணின் மேல் இருக்கும் படி விட்டு, மண்ணை நிரப்ப வேண்டும். ஒட்டுச் செடிகளுக்கு, நட்ட நாளிலிருந்து தண்ணீர் 2 வருடங்கள் வரையிலும் மழைக் காலத்தைத் தவிர்த்து, வாரம் ஒரு முறை ஒழுங்காக நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சுற்றிலும் சிறிய வட்டமான பாத்திகள் அமைத்தும், நீர்க்கால்வாய்கள் வெட்டியும் நீர்ப்பாய்ச்சலாம். தண்ணீர் அடிமரத்தைத் தொடாத வண்ணம் பாத்திகள் உயரமாகவும், சரிவாகவும் இருத்தல் வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் மாமரம் காய்ப்புக்கு வந்து விடும்.


Spread the love