உங்கள் வீட்டில் மணத்தக்காளி செடி இருந்தால் நீங்கள் அல்சர்க்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. புண்ணாக இருக்கும் வயிற்றை, மருந்து, மாத்திரை போட்டு இன்னும் புண்ணாக்க வேண்டிய அவசியம் இல்லை…..மணத்தக்காளியில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளது. இது நார்ச்சத்து மிகுந்த கீரை, இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று புண் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து வருவது, உடல் குளிர்ச்சியை தருகிறது, வயது வந்த பெண்களுக்கு அந்த காலத்தில் இந்த கீரை மிகவும் நல்லது. மணத்தக்காளி கீரையை நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் வாய் புண் குணமாகும். அப்படி இல்லை என்றால் வெறும் 5 இலைகளை வெறும் வாயில் மென்று சாப்பிட்டாலும் வாய்புண் குணமாகும்.
வயதானவர்களுக்கு மூட்டு பகுதியில் ஏற்படும் வீக்கத்திற்க்கு இந்த இலையை வதக்கி மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சரியாகும். குறிப்பாக இதன் இலை, வேர், இரண்டையும் கொதிக்க வைத்து குடித்து வந்தால் பலவித நோய் தொற்றில் இருந்து ஆரோக்கியமாக வாழலாம். வத்தல் வாந்தியை நீக்கி, பசியின்மையை சரி செய்யவும், பாடகர்களுக்கு குரல் இனிமையை கொடுப்பதிலும் மணத்தக்காளி பலன் தருகிறது.
பெண்களின் கருப்பை வலிமை பெறவும், பிரசவத்தை எளிமையாக்கவும் இந்த கீரை உதவுகிறது. மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து, பொரியல் செய்து சாப்பிட்டால் குடல்புண் மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்ற பிரட்சனை குணமாகும்.