அதிசயங்கள் நிறைந்த “MALL OF AMERICA”

Spread the love

இந்த கால இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும், ஏன் பெரியவர்களுக்கு கூட “ஷாப்பிங் மால்” என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் முழுதும் செலவழிக்க வேண்டும் என்றாலும் சரி, சலித்தாலும் சரி, ஷாப்பிங் மால்க்கு அனைவரும் செல்கின்றனர். அதோடு ஷாப்பிங் மால்க்கு போய் ஏதாவது வாங்க வேண்டும் என்று அவசியமும் இல்லை, WINDOW ஷாப்பிங் பண்ணிட்டு, பல வகையான உணவுகளை சாப்பிட்டு, பிடித்த படத்தை பார்த்து விட்டு வரலாம், நேரம் போவதே தெரியாது.

ஒரு சிறிய ஷாப்பிங் மாலிற்கே இப்படி என்றால்?, ஒரு ஊரே ஷாப்பிங் மாலாக இருந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்து பாருங்கள், சுற்றி பார்க்க ஒரு நாள் பத்தாது. அப்படி ஒரு இடம் அமெரிக்காவில் உள்ளது, அந்த இடத்தின் பெயர் “MALL OF AMERICA”, 1992-ல் இந்த மால் திறக்கப்பட்டுள்ளது..இந்த மால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி வலைத்து கட்டி உள்ளனர். பார்க்கிங் ஏரியாவிற்கு மட்டும் இரண்டு தனித்தனியாக 7 மாடி சாய்வுபாதைகள் உள்ளது.

இந்த மாலின் முதல் தளத்தில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது, இந்த பூங்காவில் ROLLER COASTER RIDE கூட உள்ளதாம், அதற்கு மேல் மாடியில் 3௦௦ அடி நீளத்திற்கு ஒரு AQUARIAM TUNNEL உள்ளது, அந்த AQUARIAM-ல் கிட்ட தட்ட 4500 வகையான மீன்கள் இருக்கின்றது. அதோடு ஒன்று இல்லை, இரண்டு FOOD COURT இருக்கின்றது, 2௦-க்கு மேல் FAST FOOD CENTRES உள்ளதாம். அதோடு குழந்தைகளுக்கென்று தனி MUSEUM ஒன்று உள்ளது, எல்லா விதமான SHOPPING கடைகளும் உள்ளன இந்த MALL OF AMERICA-வில். சினிமா திரையரங்குகளும் ஏராளமாக உள்ளது..

ஊருக்கு, இல்லையென்றால் ஏரியாவிற்கு GOOGLE MAP பார்த்திருப்பீர்கள், இந்த மாலிற்க்கென்று தனி GOOGLE MAP உள்ளதாம். அப்படியென்றால் எவ்வளவு பெரிய மாலாக இருக்கும் என்று நீங்களே சிந்தித்து பாருங்கள். இந்த மாலிற்கு அதிகமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். அமெரிக்காவிற்கு சென்றால் நிச்சயமாக இந்த MALL-அ பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு நாள் பத்தாது இந்த MALL-அ சுற்றி பார்பதற்கு…அதனால் அனைவரும் சேர்ந்து சென்று மகிழுங்கள்……..


Spread the love