பழக்கவழக்கங்கள் பாகுபாடில்லாமல் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் பிரட்சனை விந்தணு குறைபாடு.இதனால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நரம்பு பிரட்சனை, தாம்பத்திய உறவு சிதைந்து போவது, குழந்தை பெற இயலாமல் போவது போன்ற பிரட்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். விந்தணு உற்பத்திக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என ஏற்கனவே நம்ம வீடியோவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் சில உணவுகளை சாப்பிட்டால், விந்தணு குறைவதற்கு அதிக வாய்ப்பும் உள்ளது. அவ்வித உணவுகளை இப்போது பார்க்கலாம்.
பால் அனைவரும் குடிக்கலாம், அதில் எந்த பிரட்சனையும் இல்லை என்று அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் கொழுப்புகள் நீக்கப்படாத பால் பொருட்களான கடும்பு, வெண்ணெய், பாலாடைகட்டி இவையனைத்தும் நிறையுறாத கொழுப்புகள் அதிகமாக இருப்பதினால், இது விந்தணுக்களின் உற்பத்தியை முழுமையாக குறைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது.கடல் மீன்கள் சாப்பிட வலியுறுத்தி வந்த காலம் எப்போதோ போய்விட்டது.
கடலில் மெர்குரியின் அளவு அதிகரித்து வருவதனால் கடல் மீன்களின் தன்மை முற்றிலுமாக மாறிவருகிறது. அதனால் விந்தணு குறைய கடல்மீன்களும் பிரட்சனைதான். காபியில் இருக்ககூடிய காஃபின் உடல் செல்களுக்கு நல்லது இல்லை. இது உற்பத்தி செல்களை பாதிப்பதினால் விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. முடிந்த அளவிற்கு ஒன்று அல்லது இரண்டு காபி ஒருநாளைக்கு குடிக்கலாம்.சோயா பால், சோயா பீன்ஸ் இதை எப்போதாவது சாப்பிடுங்கள். ஏனென்றால் இயற்கையாகவே இதற்கு பாலுணர்வை குறைக்கின்ற தன்மை உள்ளது.
செயற்கை சர்க்கரை தன்மையை கொண்டு தயாரிக்ககூடிய ஒன்றுக்கும் உதவாத Health Drink-கை தொடவே கூடாது. போதுமான அளவிற்கு இனிப்பையும் உணவில் சேர்க்ககூடாது. குறிப்பாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு Good bye சொல்லுவது மிகவும் நல்லது.