ஆண்களின் ஆரோக்கியம்

Spread the love

30 வயதுக்குப் பின் கவனம் தேவை. பொதுவாக ஒரு மனிதனுக்கு குழந்தையாக பிறந்தது முதல் 20 வயது வரை உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் சீராக நடைபெற்று வரும். 20 வயது முதல் 30 வயது வரை ஆணின் உடல் பலம் பொருந்தியதாக, அனைத்து உறுப்புகள் உடல் வளர்ச்சி பெற்று ஆரோக்கியமாக காணப்படும். 30 வயதை ஒரு ஆண் தாண்டிய பின்பு அவன் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அவனது உடல் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த வயதில் சிறப்புக் கவனம் செலுத்துவதனால் மட்டுமே அவனது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

பொதுவாக ஆண்கள் தங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் வராத வரை மருத்துவரிடம் செல்வதில்லை அல்லது மிகவும் குறைவான சமயங்கள் தான் மருத்துவரை அணுகுகிறார்கள். நம்மால் நன்றாக வேலை பார்க்க முடியவில்லை. மேலும் தங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று ஆண்கள் எண்ணுவதால், தாங்கள் உடலில் பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை, எதிர் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இக்காலத்தில் ஆண்கள் பெரும்பான்மையாக சந்திக்கும் ஒரு பிரச்சனை இதயம் சார்ந்த நோய்கள் தான். மேலும் உயர் இரத்த சிக்கல்கள், நுரையிரல் புற்றுநோய், பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய், விந்து முந்துதல், மன அழுத்தம் மற்றும் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்றவை தற்காலத்தில் ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது.

உடல் மேலாண்மையில் வாழ்க்கை முறை மாற்றம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. உடலை தகுதியாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் ஸ்ட்ரெஸ் மற்றும் உணர்ச்சி சமநிலையற்று இருப்பதால் நமக்கு நிறைய உடல் நலப் பிரச்சனைகள் வருகின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கண்டு வெளிவருவதால் மட்டுமே நாம் முழு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று கூற முடியும். எந்த மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறானோ அவன் நம்பிக்கை கொள்ளலாம். எந்த மனிதன் நம்பிக்கை கொள்கிறானோ அவன் ஒவ்வொன்றையும் பெற்று இருப்பான் என்று கூறும் அரேபிய பழமொழி உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. பெண்களை ஒப்பிடும் பொழுது ஒரு சில வியாதிகள் ஆண்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே தான் இதனை மனதில் வைத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சையை தேர்ந்தெடுப்பது முதல் உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் உடல் பயிற்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இதயம் சார்ந்த பிரச்சனைகள்: ஆண்களின் இறப்புக்கு முக்கியமான காரணம் மாரடைப்பு தான். பணிச்சுமை அதிகம் காரணமாகவோ, போதுமான தூக்கம் இல்லாததாலோ ஏற்படும் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், உயர் இரத்த அழுத்தத்தை அதிக அளவில் ஏற்படுத்துவதுடன் மாரடைப்பிற்கும் காரணமாகிறது. உயர் இரத்த அழுத்தம் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவு வருடம் தோறும் ஆண்களின் மரணத்திற்கு காரணமாக உள்ளது. ஆண்கள் அதிகம் புகைப்பிடிப்பதால் மற்றும் மது வகைகள் அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் தோன்றுகிறது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பதால் இதய நோய்களுக்கு ஆதாரமாக இருக்கும். ஆரதரோஸ் துளிரோசிஸ் என்ற பெருந்தமனி துடிப்பு ஏற்படுகிறது. மனிதனின் மூளைக்கு வேலை தரும் அதிக நேரம் அமர்ந்தே பணி செய்யும் வேலைகள், உடலுழைப்பு குறைவது வாழ்க்கை முறை மாற்றங்களினால் இதயம் சார்ந்த நோய்களுக்கு காரணமாகிறது.

இதயம் சார்ந்த நோய்களுக்கு கீழ்கண்ட மூலிகைகள் பயன்படுகின்றன. அர்ஜின மரம், திரிபலா சூரணம், தங்க பஸ்பம், ஆயிரக பஸ்பம், இராஜதா பஸ்பம் போன்றவைகள் இதயம் சார்ந்த மருத்துவ சிகிச்சையில் மிகவும் பயனளிக்கிறது. இதயத்தைப் பலப்படுத்துவதில் பல மருந்துகள் ஆயுர்வேத ஆசான் சரகர் விளக்கியுள்ளார். இதில் பெரும்பாலும் சிட்ரிக் அமிலம் மட்டும் சேர்ந்துள்ள மருந்துக்கள் அதிக அளவு வைட்டமின் தாது உப்புகள் மற்றும் மாவுச்சத்து அற்ற பால் சர்க்கரை உள்ளன. மேற்கூறியவை இயல்பான உடல் வளர்ச்சிக்கும் அவசியமான சத்துக்களாகும்.

தினசரி 500 மி.லி என்ற அளவில் வைட்டமின் ‘சி’ சத்தை புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட ஆரஞ்சிலிருந்து பிழிக்கப்பட்ட பழரசம் பயன்படுத்தும் பொழுதும் குறை அடர்த்தி லிபோ புரோட்டீன் என்ற கெட்ட கொழுப்பின் அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றத்தை தடுக்கிறது. ஆகவே சிட்ரஸ் அடங்கியுள்ள ஆரஞ்சு, எழுமிச்சை, மாதுளம்பழம், திராட்சை பழங்களானது கெட்ட கொலஸ்ட்ராலுக்கு எதிராக ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. இதய தமனிச் சுவருக்கு பாதுகாப்பு தருகிறது. இது மட்டுமல்லாமல் இதயம் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கஷாயம் அல்லது எண்ணெயை வைத்து தேய்த்து ஆவி பிடித்தல் மேற்கூறிய பகுதிகளில் உள்ள நச்சுப் பொருட்கள் அகற்றும். உச்சந்தலையில் மருத்துவ இலைகள் உள்ள எண்ணெய்யை விட்டு மசாஜ் செய்வதன் மூலம் குணப்படுத்தலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love