மேக்கப்பில் 4 ஸ்டெப்ஸ்

Spread the love

மேக்அப்பின் நான்கு நிலைகள்:

1. கிளென்ஸிங் (Cleansing) – மாசு அகற்றுதல்

2. வாஷிங் (Washing) – நீரினால் கழுவுதல்

3. டோனிங் (Toning) – மேம்படுத்துதல்

4. மாய்ஸ்சரைசிங் (Moisturizing) -நீர் நைப்பு உண்டாக்கல்.

1. கிளென்ஸிங் (மாசு அகற்றுதல் ):

மேக்அப்பைக் களையும் போது பெரும்பாலும் ஒப்பனைப் பொருட்களான பவுண்டேஷன், பவுடர், ப்ளஷர் போன்றவைகளை நீக்குவதற்கென்றே தயாரிக்கப்பட்ட  க்ரீம் அல்லது லோஷன்களைக்  கொண்டு அகற்றப்படுகின்றன. இருப்பினும் சருமத்தில் தங்கும் மிக நுண்ணிய துகள்கள், துணுக்குகள் மற்றும் பிற மாசுகள் போன்றவை அகற்றப்பட வேண்டியிருப்பதால் ஒரு க்ளென்சர் (Cleanser) கொண்டு ஆழ்ந்து சுத்தம் செய்யப்பட வேண்டும்.

வறண்ட சருமம் உடையவர்களில் பெரும்பாலோர் மேக்அப் நீக்கும் போது முகத்தைக் கழுவுவதை விட ஒரு க்ளென்சர் கொண்டு மாசு அகற்றுவதை தான் விரும்புகின்றனர். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் மெலிதான நீர்த்த (Light) க்ளென்சரை பயன்படுத்தலாம். நடனம் மற்றும் நாடகத்திற்குப் பயன்படுத்தப்படும் தியேட்டர் மேக்அப் போட்டிருந்தால் ஒழிய கன்த்த க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

கண் மேக்அப் களையும் போது மேக்அப் ரிமூவரில் பஞ்சை வைத்து தோய்த்து எடுத்து மெதுவாகத் துடைத்து களைய வேண்டும். மஸ்காராவை நீக்கும் போது சுத்தமான தண்ணீரில் நனைத்த பஞ்சினைக் கண்களின் கீழ் இமையின் அடியில் வைத்துப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் க்ளென்சரில் தோய்த்தெடுத்த பஞ்சினைக் கொண்டு மேல் இமை, கீழ் இமை இரண்டின் மயிர் வரிசையையும் (Lashes) கீழ் நோக்கித் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். க்ளென்சர் கொண்டு சுத்தம் செய்யும் பொழுது, விரலினால் வட்டம் வரைவது போல (Circular Movements) ஒவ்வொரு பகுதியிலும் வட்டச்சுற்றில் க்ளென்சரைத் தடவித் துடைக்கவும். க்ளென்சர் க்ரீம் வடிவிலிருந்தால் விரலையும் லிக்விட் ( திரவ ) வடிவிலிருந்தால் பஞ்சையும் கொண்டு சுத்தம் செய்து பின்பு டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய துவாலை Towel) கொண்டு துடைக்கவும். முதலில் மூக்கின் மேல்பகுதியில் தொடங்கிப் பின்னர் கண்களைச் சுற்றியும், பிறகு கன்னங்களிலும் க்ளென்சிங் செய்யவும். தாடையிலும், கழுத்துப் பகுதியிலும் கீழிலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்வது போல அழுத்தித் தேய்க்கவும். க்ளென்சிங் முடிந்ததும், பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி நன்கு துடைக்க வேண்டும்.

2. வாஷிங் (Washing) கழுவுதல்:

வெதுவெதுப்பான நீர்கொண்டு முதலில் சருமத்தை நனைத்து,ஈரமாக்கிக் கொண்டு பின்னர் மெல்ல மெல்ல கழுவ வேண்டும். முகத்தைக் கழுவும் போது கன்னம், நெற்றி, தாடை போன்ற இடங்களை நன்கு அழுத்தி மசாஜ் செய்வது போல செய்வதும் வட்டம் வரைவது போல் சுழற்றிச் சுழற்றியும் அழுத்தித் தடவிக் கழுவ வேண்டும். ஒரு முறை கழுவி முடிந்ததும், முன்பிருந்த உஷ்ண அளவைக் காட்டிலும் குறைந்த வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு கழுவ வேண்டும். சுத்தமான டவல் மூலம் கழுத்தின் மேல் மெத்தென்று ஒற்றி,ஒற்றி எடுத்துத் தண்ணீர் இல்லாமல் மென்மையாகத் துடைக்க வேண்டும். ஒரு பொழுதும் அழுத்தித் துடைக்கக் கூடாது. அதன் பின்னர் துடைத்து இருந்த சருமம் ஐந்து நிமிடம் நேரம் காற்றில் உலர்ந்த பிறகு டோனர் இடலாம்.

3. டோனிங் (Toning) மேம்படுத்துதல்:

Toning   செயல்களுக்கு என்றே தயாரிக்கப்பட்ட பலவகை டோனர்கள் (Tonners)  கடைகளில் கிடைக்கின்றன. இனிய மணத்துடன் கிடைக்கும் டோனர்கள் மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது.ஈர நைப்பை வெளி விட்டு, சருமத்தினை குளிரச் செய்கின்றன. இதன் காரணமாக சருமத் துவாரங்கள் தற்காலிகமாக சுருங்குகின்றது.எண்ணெய்ப் பசை சருமத்தில் மேல் அதிகமான கிளென்சர் போல் செயல்பட்டு எஞ்சி நிற்கும் சில மாசுக்களையும், பிசுபிசுப்பையும் அகற்றுகின்றன.மிக மென்மையான டோனர்களை ப்ரெஷனர் (Freshner) என்றும், டெலிகேட் டோனர் (Delicate Toner) என்றும் கூறுகின்றனர்.

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அஸ்டிஞ்சென்ட் எனப்படும் டோனர்கள் சக்தி மிக்கவையாகும். இவை எண்ணெய்ப் பசை அதிகமாக உள்ளவர்க்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. காம்பினேஷன் சருமம் ( அதாவது வாதம், பித்தம், கபம் மூன்றில் ஏதாவது இரண்டு தோஷங்கள் சேர்ந்து இருக்கும் ) உள்ளவர்கள் வறட்சியான சரும இடங்களில் சக்தி மிக்க டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. நமது நாடு வருடத்தின் பெரும்பாலான நாட்கள், பெரும்பகுதிகள் வெப்பம் சற்று அதிகமாகத் தான் காணப்படுகிறது. அதிக வெப்பத்தினால் வியர்வை அதிகம் சுரப்பதும் சருமத் துவாரங்கள் அகன்று இருக்கவும் வாய்ப்புண்டு. ஆகையால் டோனர் இடத் தொடங்கும் முன்பு, ஒரு மிருதுவான காட்டன் துணியில் ஐஸ் கட்டிகளைப் (Ice Cubes)  போட்டு பொட்டலம் போல கட்டி, முகத்தில் ஒற்றிக் குளிரச் செய்து விட வேண்டும். பின்னர் முகத்தில் படர்ந்திருக்கும் ஈரத்தைத் துவாலை மூலம் ஒற்றி எடுத்து  துடைத்த பின்னர் தேர்ந்தெடுத்துள்ள டோனரை இடலாம். டோனரை ஒரு பஞ்சில் (Cotton Pad) ஊற்றிக் கொண்டு அல்லது உங்களது இடது உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு வலது கையால் முகம் முழுவதும் அடித்துத் தடவ வேண்டும்.

4. மாய்ஸ்சரைசிங் (Moisturizing) நீர் நைப்பு உண்டாக்கல்.:

மேக்அப் மற்றும் சரும பராமரிப்பில் மிகவும் முக்கியமானது மாய்ஸ்சரைசிங் தான். மாய்ஸ்சரைஸர் சருமத்தினை மிருதுவாக்கி, வெயில், காற்று, தூசி, பனி போன்றவற்றினால் ஏற்படும் கேடுகளில் இருந்து பாதுகாக்கிறது. ஓவியம் வரைவதற்கு கேன்வாசினை தயாராக்குவது போல மேக்அப் இடுவதற்கு முன் முகம் மாய்ஸ்சரைஸ் செய்யப்பட வேண்டும்.

மாய்ஸ்சரைஸ் செய்ய துவங்குவதற்கு முன்பு, உங்கள் கை விரல்களின் உதவி கொண்டு முகம், கழுத்து, தோள் போன்ற இடங்களைத் தடவிப்பார்த்து எங்கெங்கு வறண்டு காணப்படுகிறது என்று தெரிந்து கொண்டு, விரல் நுனியில் மாய்ஸ்சரைஸ்சரை எடுத்துக் கொண்டு அந்த இடங்களில் ஒவ்வொன்றாகத் தடவுங்கள். அவ்வாறு தடவும் பொழுது கீழிலிருந்து மேலாகவும், உள்ளிருந்து வெளிப்புறமாகவும் தடவ வேண்டும். மேலோடு தடவவும். சருமத்தை அழுத்தி இழுத்தல் கூடாது. கன்னங்களில் விரல் நுனியில் கீழிலிருந்து மேலாகத் தடவவும்.திரும்பத் திரும்ப பலமுறை தடவிய பின்பு எங்காகிலும் மாய்ஸ்சரைஸர் தெரிந்தால் அதைப் பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் மூலம் துடைத்து விடவும்.


Spread the love
error: Content is protected !!