கடைகளிலும் சரி, வீட்டிலும் சரி, அழகுபடுத்துவதற்கு முன் நமது தோலிற்கு இந்த மேக்கப் பொருத்தமானதா என தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதற்கு முன்னால் நமது முகம் ஆயில் முகமா அல்லது உலர்ந்த முகமா என தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற மாதிரி தான் காஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.
மேக்கப் செய்வதற்கு முன்னால் அந்த மேக்கப் படியே நமது முகம் ஒத்துழைக்க வேண்டும்.அதற்குதான் முதலில் கிளன்சிங் போடுகிறோம், இது மிகவும் அவசியம். எதற்கு கிளன்சிங்போடுகிறோம்? இந்த லோஷன் முகத்தில் இருக்கும் தோலை சுத்தமாக்கும். காஸ்மெட்டிக்ஸ் கெமிக்கல் நமது தோலிற்குள் ஊடுருவ முடியாத வகையில் ஒரு அடுக்கை உருவாக்கும்.
இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதனால் முகப்பரு, தழும்பு, முகத்தில் குழி, பள்ளம் போன்றவை வராமல் பாதுகாக்கிறது. அடுத்தது மாய்ச்சரைஸர், ஆயில் தோல், உலர்ந்த தோல் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நல்ல மாய்ச்சரைஸர் ஆரோக்கியமானது தான். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு மாய்ச்சரைஸர் செய்வது அவசியமாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்னால் ப்ரைமர் செய்வது அவசியம், இதனால் நமது முகத்தில் மேக்கப் பொருட்கள் நமது தோலில் நுழையாத மாதிரி ஒரு அடுக்கை உருவாக்கி விடும். அதோடு நீண்ட நேரம் முகத்தில் மேக்கப் நிற்கவும் உதவுகிறது.
ஆயில் முகம் உள்ளவர்கள் குறிப்பாக மேட் பினிஷிங் ப்ரைமரை பார்த்து வாங்குவது அவசியமாகும். அதே மாதிரி வறண்ட சருமத்திற்க்கு ஜெல் ப்ரைமர், இல்லையென்றால் வாட்டர் ஃபேஸ்டு ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இவை இரண்டிற்கும் நடுநிலையாக சாதாரணமான தோல் உள்ளவர்கள், சாதாரண ப்ரைமரை பயன்படுத்தலாம். ப்ரைமருக்கு அடுத்ததாக, ஃபவுன்டேஷன் போடவும், இதுவும் ஆயில் தோலிற்கு ஸ்டிக் ஃபவுன்டேஷனையும் வறண்ட சருமத்திற்கு லிக்யூட் ஃபவுன்டேஷனையும் எப்பொழுதும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கும்போது உங்களது கன்னம், நெற்றியில் தடவி பார்த்து வாங்குவது நல்லது. கை மணிக்கட்டில் தடவி பார்ப்பது தவறு. மேக்கப் சம்மந்தமான இன்னும் அதிக தகவல்கள் நமது வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்