தேங்காய்ப் பாலில் பருத்தித் துணியை முக்கி, அதிகளவு உள்ள பாலை பிழிந்து விட்ட பின்பு, துணியை ஒப்பனைப் படுத்திய முகத்தை கழிப்பதற்கு பூசிக்கொள்ள வேண்டும். சருமத்தை சுத்தப்படுத்தும் முக ஒப்பனையை எளிதாக கலைப்பதுடன் சருமத்தை சுத்தப்படுத்த உதவும் கிளென்சராகவும் இது பயன்படுகிறது.
அவகேடோ பேஸ் பேக்
தேவையான பொருட்கள்
அவகேடோ
உப்பு, சர்க்கரை
பசுவின் பால், தேன், வெண்ணெய்
கனிந்த பப்பாளிப் பழம்.
செய்முறை 1
அவகேடோ, உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்துக் கொண்டு நன்றாகக் கலந்து சிறிது தேன் ஊற்றி மேற்கூறிய கலவையை முகத்திற்கு தடவி, வெதுவெதுப¢பான நீரில் பதினைந்து நிமிடம் கலந்து கழுவிக் கொள்ள வேண்டும். ஈரப்பசையுடன், மிடுக்கென்ற பொழிவும் இதன் மூலம் கிடைக்கும்.
செய்முறை 2
வேக வைத்த அவகேடோ கூழுடன் கனிந்த பப்பாளிப் பழத்தை மேல் தோல், விதைகளை நீக்கி நசித்து சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்ட இக்கலவையை முகத்தில் தடவி ஊற வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.