அழகுக்கு அழகு சேர்க்க..

Spread the love

அழகற்றவரையும் அழகாக்க..

ஒப்பனையின் (Makeup) அவசியம்:

இயற்கையிலேயே ஒரு சில பெண்கள் அழகாகக் காணப்படுவார்கள். அவர்களுக்கு அழகு கூட்டுவது அவசியமில்லை என்று ஒரு சிலரும், இன்னும் அழகை அதிகரிக்கலாம் என்று ஒரு சிலரும் கூறுவார்கள். ஆனால் அழகாக இருப்பவர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் கருத்தின்மையும், ஒப்பனை முறைகளில் ஆர்வமின்மையும் காணப்பட்டால் அழகிய இளம் பெண்களைக் கூட அழகற்றவர்களாக தோற்றம் தரச் செய்து விடுகிறது. அவர்கள் மட்டுமல்ல.. அழகு சற்று அமைந்தவர்களும், அழகே இல்லாத பெண்களை அழகாக மாற்றிக் காண்பிக்கும் மேக்அப் என்ற ஒப்பனைக் கலையின் இரகசியங்களை அறிந்து கொள்வது நல்லது. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.

ஒப்பனைக் கலைக்கு வேண்டிய பயிற்சிகள், தொழிற்நுட்பங்கள், தயாரிப்புப் பொருட்கள் என பல்வேறு விதங்களில் அழகுக் கலை தற்போது வளர்ந்துள்ளது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

மேக்அப் செய்வதற்குரிய தொழிற்நுட்பங்களைக் கற்றுத் தான் ஆக வேண்டுமா?

சந்தையில் மிக அதிகமாக விற்கப்படும் வகைவகையான மேக்அப் தயாரிப்புப் பொருட்களை கண்டிப்பாக வாங்கித்தான் பயன்படுத்த வேண்டுமா? வேறு வழிமுறைகள் எளிதாக அமைந்துள்ளதா? நமக்கு நாமே மேக்அப்பிற்கு உதவும் பொருட்களை தயாரிக்க முடியுமா? அதற்குரிய வழிகாட்டி கிடைக்குமா? இது போன்ற பல கேள்விகள் ஒப்பனைக் கலையில் நுழைய முயலும் மனிதர்களுக்குத் தோன்றுவதுண்டு.ஒப்பனைக் கலைக்குத் தேவைப்படும் அவசியமான சாதனங்கள்:

ஒப்பனைக் கலைக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் சாதனங்களை ஒரு வகையாகவும், முக மேக்அப் சாதனங்களை ஒரு வகையாகவும் இரண்டு வகைகளாகப் பிரித்து கீழே தரப்பட்டுள்ளன.

சந்தையில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும், சாதனங்களையும் நாம் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரின் தோற்றம் கவர்ச்சி தரக் கூடியதாகவும், முக மேக்அப் சிறப்பாக அமைவதற்கு வேண்டிய எல்லா அடிப்படைச் சாதனங்களையும் வைத்திருப்பது அவசியமாகும். அதிக செலவு செய்தோ, பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை வாங்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்பதும் சரியல்ல. மேக்அப் சாதனங்கள் உடல் நலத்திற்கு கெடுதல் தராத தரமுள்ளதாக வாங்குவதும் அவசியம்.

மேக்அப் சாதனங்கள் ( அடிப்படைச் சாதனங்கள் ):

குளியல் ப்ரஷ்:

மெல்லிய ரப்பர் ப்ரஷ்கள் அல்லது பீர்க்கங்காய்த் தோல்.

மெருகேற்றும் மாக்கல் (Pumice Stone):

தரமான, வழுவழுப்பான கல்லாக இருத்தல் அவசியம். முழங்கை, முழங்கால், பாதங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்ய உதவுகிறது. உடலின் சருமத்தில் மெதுவாக, கவனமாக தேய்த்தல் நல்லது. கடினமாக அழுத்தித் தேய்க்கக்கூடாது.

ஷவர் குளியல் தொப்பி (Shower Cap):

குளிக்கும் போது முடியில் தண்ணீர் படாமலிக்க உதவுகிறது.

ஹேர் ட்ரையர் (Hair dryer):

ஈரமான தலை முடியை உலரச் செய்வதற்கு ஏற்றது எலெக்ட்ரிகல் ஹேர் ட்ரையர். கட்டாயம் வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இயலுமானால் வாங்கிக் கொள்ளலாம்.

ஹேர் ப்ரஷ் (Hair Brush):

தலைவாரும் ப்ரஷ் ஆனது நைலான் குஞ்சங்கள் உள்ளதாக, முனை கூர்மை இல்லாததாக இருத்தல் அவசியம். வறண்டு போன முடியையும் எளிதாக வாருவதற்கு ஏற்றதாக இருத்தல் அவசியமாகும்.

பெரிய சீப்பு (Big Comb):

கையில் பிடிப்பதற்கு வசதியான பெரிய சீப்பு, அகன்ற பற்கள், குறுகிய பற்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஹெட் பேண்ட்:

முன் நெற்றியில் உள்ள முடியானது விழாமலிருக்க உதவும் நைலான் பிளாஸ்டிக் பாண்ட்;.

ஹேர்பின் கிளிப்புகள்:

வாரிய முடிகளை உரிய இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்றதாக பின்கள் மற்றும் கிளிப்புகள்.

நகம் வெட்டி:
நகம் வெட்டி. நகங்களுக்கு வெட்டுவதனை பின்னர் ராவிவிடுவதற்கு மெல்லிய அரம் (File). நீண்ட நகங்களைசீராக்கவும், கூர்மையாக்கவும்உலோகத்தாலான அரங்களை விட மிருதுவான உப்புத் தாள் (NiceEmery Sheets) ஏற்றவை.

மேக்அப் சாதனங்கள்:

லிப்ஸ்டிக் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் குறுக்கு வெட்டு ப்ரஷ் பிளஷர் பூசப் பயன்படும் தடித்த மென்மையான ரப் மாப் பிரஷ் (Rough Mop Brush),கூர்மையான முனை கொண்ட ஐ லைனர் ப்ரஷ்(Eye Liner Brush): மஸ்கரா இட்டவுடன் கண் இமைகளைப் பிரித்து விடப் பயன்படும் பிரஷுடன் இணைந்த புருவச் சீப்பு (Eye Brow Comb With Built In Brush) ஸ்பான்ச் ஒரு முனையிலும், ஐ ஷேடோ ப்ரஷ் மறுமுனையிலும் கொண்ட இருமுனை பிரஷ் (Double Ended Sponge And Shadow Brush) மற்றும் பஞ்சுக் குச்சங்கள் (Cotton Wool Buds).

மேக்அப் சாதனங்கள்:

டிஷ்யூ:

பொதுவாக க்ளென்சிங் ( மாசு அகற்றுதல் ) சமயத்திலும், லிப்ஸ்டிக் போன்றவற்றை ஒத்தி எடுப்பதற்கும், மேக்-அப்பில் நேரிடும் சில கைப் பிழைகளை அழிக்கவும், துடைக்கவும், கைகளைச் சுத்தமாக வைப்பதற்கு இது தேவைப்படும்

காட்டன் பட்ஸ் (CottonBuds):

ஈர்க்குச்சியில் பஞ்சு சுற்றப்பட்டது போன்ற காட்டன் பட்ஸ் உதவியினால் கசிந்த, ஒழுகின வர்ணங்களைத் துடைத்து சீராக்கவும், ஷேடோவைச் சருமத்துடன் சேரும்படி தடவி விடவும், பென்சில் கோடுகளை மெலிதாக்கவும் இது உதவுகிறது. பவுடர் வடிவத்தில் உள்ள ஐ ஷேடோ தடவுவதற்கும் இது பயன்படும்;.

காட்டன் ரோல் (Cotton Roll):

முகத்தில் வழநெச இடும் போதும் அதிகமான முகப்பவுடரை ஒற்றி எடுக்கவும் உதவுகிறது. ஐ ஷேடோவைச் சீராக்கவும் உதவும்.

ஸ்பான்ஞ்ச் (Sponge):

இதில் இரண்டு முன்று வைத்துக் கொள்ளலாம். முகத்தில் பவுண்டேஷன் இடவும், டோனர் தடவவும் தனித்தனியாக ஸ்பான்ஞ்சைப் பயன்படுத்தலாம். பயன்படுத்திய பின்பு இதைக் கழுவி காய வைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.

பவுடர் பஃப் (Power Puff):

லூஸ் பவுடர் ஆனாலும் பவுடர் கேக் ஆனாலும் இது தேவைப்படும்.

ட்வீஸர்(Tweezer):

புருவத்தை சீரமைக்கத் தேவைப்படும் ட்வீஸசரினை நல்ல, தரமான, இறுகப் பற்றக்கூடிய முனையை உடையதாக பார்த்து வாங்குதல் அவசியம்.

கத்திரிகோல் (Scivvor):

சிறிய ஸ்டெயின்லெஸ் ஸடீல் கத்தரிகோல் சர்ஜிகல் கடைகளில் கிடைக்கும்.

ப்ரஷ் வகைகள்:

ப்ரஷ்களில் பல வகைகள் உள்ளன. உதடுகள் வரைதல், கண் எழுதுதல், டஸ்டிங் பவுடர், ஐ ஷேடோ பவுடர் இடுதல் போன்ற பல காரியங்களுக்கும் தனித்தனியாக ப்ரஷ்கள் கிடைக்கின்றன. எல்லா பிரஷ்களையும் வாங்கவில்லையெனினும் ஒரு சில ப்ரஷ்கள் மட்டும் அவசியம் தேவை.

கான்டூர் ப்ரஷ்(Contour Brush):

அகன்ற, கனத்த, மென்மையான குச்சங்கள் கொண்ட ப்ரஷ் இது. முகத்தின் ஏற்ற, இறக்கங்களில் பவுடர், ப்ளஷர், ஷேடோஸ் போன்றவைகளைச் சீராக தடவுவதற்குத் தேவை.

கண் மேக்அப் ப்ரஷ்கள்:

நீங்கள் பயன்படுத்தும் ஷேடர் கலர்களுக்கு ஏற்றபடி இரண்டு, மூன்று ப்ரஷ்கள் வேண்டும். கூர்முனை கொண்ட ப்ரஷ்களாக இருக்க வேண்டும். அப்போது தான் கோடுகள் மெல்லியதாக அமையும்.

ஸ்பான்ஞ்ச் டிப் அப்ளிகேட்டர் (Sponge Tip Applicator):

லூஸ் ஐ ஷேடோ பவுடர் மற்றும் கண்களுக்கு கீழே பூசும் கலர்கள் ஆகியவற்றிற்கு இது தேவைப்படும்.

ஐ லைனர் ப்ரஷ் (Eye Liner Brush):

நுண்ணிய, கூர்மையான முனை கொண்ட சிறிய ப்ரஷ்கள் மெல்லிய கோடுகள் வரையவும், கலர் புள்ளிகள் வைக்கவும் இவை அவசியம்.

லிப் ப்ரஷ் (Lip Brush):

மர உளி போன்ற முனையுடைய லிப் பிரஷ்கள் ஆகும். இவை மூடியுடனும், தூசி படியாதவாறு உள்ளிழுக்கும் படியும் வருகின்றன. பயன்படுத்திய பின் நன்கு துடைத்துப் பாதுகாக்க வேண்டும்.

ஐ ப்ரோ ப்ரஷ் (Eye Brow Brush):

புருவங்களை விரும்பிய வடிவங்களில் வரைவதற்கும், அதிகமான பவுடரை நீக்குவதற்கும் உதவுகிறது.

அழகுபடுத்தும்  கலையில் அடிப்படையாக அமைந்துள்ள அடுத்தடுத்து உள்ள 4 நிலைகள்:

ஒப்பனைக் கலையில் முதல் நான்கு நிலைகளைத் தான் அடிப்படையாக வைத்து செயல்படுவார்கள். ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் கூறுவது கூடுதல் பலன் தரும் என்பதால் இடையிடையே விளக்கம் தரப்பட்டுள்ளது.


Spread the love