பவுண்டேஷன் முக்கியம்

Spread the love

ஓப்பனையின் அஸ்திவாரம் ( மேக்அப் பவுண்டேஷன் மற்றும் பவுடர் ):

நல்ல மேக்அப்பின் அடித்தளம் சிறப்பாகவும், கவனமாகவும் செய்யப்பட பவுண்டேஷன் என்று கூறப்படும் சருமத்தின் நிறத்தையும் அழகினையும் உயர்த்திக் காண்பிப்பதும், அதற்கு உதவி புரியும் பவுடரும் தான் காரணமாகும்.

உங்களது பவுண்டேஷன் நிறமும், பவுடரின் நிறமும் சருமத்தின் நிறத்திற்கு ஒத்ததாகவும், இயற்கையான தோற்றம் தருவதாகவும் இருப்பது அவசியம்.சந்தன நிறம் அல்லது இளம் ரோஸ் நிறம் உள்ளவர்களுக்கு தேன் நிறம் அல்லது பிங்க் நிற டின்டுகள் (Tints) ஏற்றதாக இருக்கும். சிறிது நிறம் குறைவாக கோதுமை நிறத்தில் உள்ளவர்களுக்கு ஆலிவ் அல்லது பீச் நிறங்கள் ஏற்றது. இவர்களுக்கு பிங்க் டின்ட் ஏற்றதல்ல. மாந்தளிர் மற்றும் கருப்பு நிறம் உள்ளவர்களுக்கு பிரவுன் அல்லது டான் சிகப்பு போன்ற இருண்ட நிறங்கள் நன்கு சேர்ந்து கொள்ளும்.

பவுண்டேஷன் அல்லது பவுடர் வாங்குகின்ற போது என்ன செய்ய வேண்டும்?

பவுண்டேஷன் அல்லது பவுடரினை வாங்கும் போது, உங்கள் முகத்தில் தடவிப் பார்த்து தேர்வு செய்வது நல்லது. கைகளில் தடவிப் பார்த்து தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. மிகவும் லேசான நிறம் உள்ள பவுண்டேஷன் மற்றும் பவுடர்களைப் பயன்படுத்தும் போது, முகத்தில் மாஸ்க் தடவி இருப்பது போல தோன்றும். மிகவும் இருண்ட நிறமாக இருந்தால் முகம் முழுவதும் கனத்துத் தெரியும். சருமத்தின் நிறத்தையும், அழகினையும் சமன் செய்து காட்டுவது தான் பவுண்டேஷன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு ஏற்ற நிறத்தினை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.

சந்தையில் கிடைக்கும் பவுண்டேஷன் பொருட்கள் மற்றும் பவுண்டேஷன் தயாரிப்புகள் நீர்ம வடிவில் பாட்டில்களில் வருபவை. இதனை லிக்விட் பவுண்டேஷன்கள் என்பர். இவை மெலிதாக, சருமத்தில் படிந்து பரவக்கூடியவை. இளமையும், ஆரோக்கியமும், மிருதுவான சருமத்திற்கு லிக்விட் பவுண்டேஷன்கள் ஏற்றவை. மேலும் கூழ் போன்று சிறிது திடப் பொருளாக பளிங்கு ஜாடிகளிலும், டியூப்களிலும் பவுண்டேஷன்கள் தயாரித்து வெளியிடப்படுகிறன்றன. இவை பூசுவதற்கு எளிதாகவும்,  அதிகப் பரப்பளவு சருமத்தில் தடவி பூசுவதற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டு வகை பவுண்டேஷன்கனையும் தவிர்த்து, திண்ம வடிவில் வருபவையும் உண்டு. இவை கேக் போன்ற வடிவில் விற்கப் படுகிறது. இவை முகத்தில் பருக்கள், புள்ளிகள், தழும்புகள் மிகுந்த சருமங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

பவுண்டேஷன்கள் இடும் முறை:

நன்கு கழுவிச் சுத்தம் செய்த சருமத்தில் மேக்அப் செய்யத் தொடங்கினால், அது நீண்ட நேரம் நிலைத்திருப்பதுடன் மிகவும் சிறப்பாகவும் அமையும். பவுண்டேஷன் இடத் துவங்கும் போது முகம் மிகவும் சுத்தமாகவும், எண்ணெய்ப் பசை சிறிதளவு கூட இ;ல்லாமல் இருத்தல் அவசியம். அவ்வாறு எங்காவது பிசுபிசுப்புத் தன்மை தென்பட்டால் அஸ்ட்ரிஞ்ஜன்ட் லோஷன் தடவி அகற்றிக் கொள்ளவும். சருமத் துவாரங்கள் பவுண்டேஷன்களால் அடைபடாமலிருக்க, பவுண்டேஷன் இடுவதற்கு முன்பு முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்து கொள்வது நல்லது. மாய்ஸ்சரைசர் சருமத்தில் உட்கவரப்பட்டதுடன் பவுண்டேஷன் இடவும். இடது உள்ளங்கையில் சிறிதளவு பவுண்டேஷன் ஊற்றிக் கொண்டு வலது கை விரல்களால் அல்லது சுத்தமான,ஈரமாக்கிய ஸ்;பான்ஞ்சினாலோ ஒரே மாதிரியான அழுத்ததுடன் தடவி விடவும். முதலில் நடு நெற்றியில் சிறிது பவுண்டேஷன் வைத்து அதை வட்டமாகச் சுழற்றுவது போல சுற்றிச் சுற்றித் தடவவும். முழு நெற்றியிலும், முடி தொடங்கும் இடம் வரை இவ்வாறு நன்கு தடவி பூசவும். பின்னர் ஒரு பக்க நெற்றிப் பொட்டில் தொடங்கிப் பிறகு கன்னத்தில் பூசவும். கண்ணைச் சுற்றித் தடவி விடவும். இதே போல் முகத்தின் மறு புறத்திலும் பூசி விடவும்;. மூக்கின் ஒவ்வொரு பக்கத்திலும் சிறிது பவுண்டேஷன் வைத்துத் தடவி, அதைக் கண் இமை வரை கொண்டு  சென்று இமைகளின் மேலும் தடவி விடவும். பின்னர் ஐ ஷேடோ இடுவதற்கு இது நல்ல அடித்தளமாக அமையும்.

தாடை, உதடுகள், அதன் கீழப்பகுதி எல்லா இடங்களிலும் ஒன்று போலப் பூசவும். தாடை எலும்பு இருக்கும் இடத்தில் அது சற்றும் தெரியாத படி கவனமுடன் பூசி விடவும். தொண்டைப் பகுதியில் பவுண்டேஷன் மிச்சம் இருப்பின் அதை மெதுவாக மேல்புறம் நோக்கித் தடவி சரி செய்யுங்கள். முகம் முழுவதும் ஒரே மாதிரி பவுண்டேஷன் பூசப்பட்டிருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டு தூய்மையான, மென்மையான டிஷ்யூ பேப்பர் உதவியினால் எல்லா இடங்களையும் ஒற்றி எடுத்து விடுங்கள்.

சந்தையில் கிடைக்கும் பவுடர் வகைகள் :

பவுண்டேஷன் நிலைத்து இருக்கவும், மேக்அப்பிற்கு ஏற்றதாக சருமம் எண்ணெய்ப் பசை இன்றி இருக்கவும் பவுடர் உதவுகிறது. பெரும்பாலான நேரங்களில் தனி பவுண்டேஷன் மட்டும் செய்து கொண்டு பவுடர் பூச்சு இடுவதைத் தவிர்க்க ஒரு சிலர் எண்ணுவார்கள். இது தவறான எண்ணமாகும்.

ஏனெனில் தனி பவுண்டேஷன் மட்டும் முழுமையான பலனை தருவதில்லை. லூஸ் பவுடர் என டப்பாக்களிலும் கேக் போல கெட்டிப்படுத்தப் பட்டு அழகிய கிண்ணங்கள், பேழைகளிலும் கிடைக்கின்றன. லூஸ் பவுடர்கள் பவுண்டேஷன் இட்டதும் மேலே தூவுவதற்கு ஏற்றவை. இதன் காரணமாக சருமத்தின் இயல்பை முற்றிலும் மறைப்பதில்லை. மேலும் தேவைக்கு அதிகமாக இருந்தால் அகற்றுவதற்கும் எளிதாகும். கட்டியாக்கப்பட்ட பவுடர் வெளியில் எடுத்துச் செல்ல எளிதாகும்.அவசரமான சில நேரங்களில் பயன்படுத்தவும் இயலும். உதாரணத்திற்கு வெளியில் சென்றுள்ள நேரத்தில் மூக்கின் நுனியில் வியர்த்து பிசுபிசுப்புத் தோன்றும் போது பவுடரினை பயன்படுத்த எளிதாகும். கட்டியாக்கப்பட்ட பவுடர் அடர்த்தி அதிகமாக இருக்குமென்பதால் பூசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.இல்லையென்றால் திட்டுத்திட்டாகத் தெரியும்.

பவுடர் பூசுதல் :

பவுடர் பப் (Puff) அல்லது பஞ்சினை பவுடரில் முக்கி எடுத்து முகத்தில் வைத்து சற்று அழுத்தி வட்டமாகச் சுற்றுவது போல பூச வேண்டும். நாசித்; துவாரங்களின் இரு பக்கங்களிலும், உதட்டின் ஓரங்கள், கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் கவனமுடன் பூச வேண்டும். அதிகமாக அழுத்திப் பூசினால் சருமத் துளைகள் அடைத்து விடும். பவுடர் அதிகமாக முகத்தில் காணப்பட்டால் மென்மையான கனத்த ப்ரஷ்அல்லது பப்பினால் (Puff) அதிகமாகத் தோன்றும் இடங்களிலுள்ள பவுடரை கீழ் நோக்கித் தடவி அகற்றலாம். தாடையும், கழுத்தும் சேருமிடத்தில் பவுடரை வேறுபாடு தெரியாமல் பூசிச் சமன் செய்ய வேண்டும். புருவங்களில் பவுடர் தங்கியிருந்தால் மெல்லிய ஐ ப்ரோ ப்ரஷ்மூலம் தடவி நீக்கி விடவும்.

மேலும் 3 விஷயங்கள்

ஹை-லைட்டர்ஸ், ஷேடர்ஸ் மற்றும் பிளஷர்ஸ்:

 மேக்அப் துவங்கிபவுண்டேஷன் மற்றும் பவுடர் பூச்சு வேலைகள் போன்ற அடிப்படையினை தயார் செய்து விட்டபிறகு உங்களது முக அழகினை மெருகூட்ட, துல்லியமாகக் காட்டும் ஒப்பனைப் பொருட்களைப்பயன்படுத்தலாம். இவற்றில் ஹை-லைட்டர்ஸ் (High Lighters), ஷேடர்ஸ் (Shaders ) மற்றும் ப்ளஷர்ஸ்(Blushers) என்று மூன்று வகைகள் உண்டு. இவை உங்கள் முகத்திலுள்ளகுறைகளை மறைத்து எலும்பின் வடிவினை மேம்படுத்தி, முகத்திற்கு அழகிய வடிவமும் உயிர்த் துடிப்பும்தரக் கூடியது.

சருமத்தின் நிறத்தைவிட மெலிதான வெளிறிய வண்ணங்கள் (Pale colours) முகத்தோற்றத்தின் அமைப்பை வெளிக் கொணர்ந்து பளிச்சிடச் செய்யும். ஆழ்ந்த நிறங்கள் (Dark Colours) உடலில் அவயஅமைப்பை உள்ளுக்குள் அழுந்தச் செய்து அழகு அதிகரிக்கச் செய்கின்றன. இவை இரண்டுகருத்துகளின் அடிப்படையில் தான் ( மேக்அப் ) ஒப்பனைகள் செய்யப்படுகின்றன.மேடுபள்ளங்கள், வளைவு நெளிவுகளைமேம்படுத்திக் காட்டும் வண்ணங்களை கான்டூர் வண்ணம் (Contour Color) என்கிறார்கள். இது மேலோட்டமாகவும், மெல்லியதாகவும்இருக்க வேண்டும்.கடுமையாக வரைதல் கூடாது. கான்டூர் கலர்கள் ஜெல்லி, க்ரீம், ஸ்டிக் மற்றும்பவுடர் வடிவில் விற்பனை செய்கிறார்கள். ஜெல், லிக்விட் கலர்கள் சருமத்திற்கு இயல்பான தோற்றத்தினைவழங்குகிறது. பவுடர் வடிவில் வருபவை பயன்படுத்த எளிதாகவும் பவுடரை ஒன்றிரண்டுகோட்டிங் முறையில் தடவினால் கூட கலரைக் கூட்ட இயலும்.

 பொதுவாக உங்கள்முகத்தை அழகாகக் காட்டும் உறுப்பு எது? எதை மேம்படுத்திக் காட்டினால் முகம், கன்னம் அழகாகஇருக்கும்? எந்த உறுப்பைஉள்ளடக்கிக் காட்ட வேண்டும்?என்பதை அறிந்துகவனமுடன் தேர்தெடுத்தால் ஷேடரும், ஹை-லைட்;டரும் நன்கு இணைந்து தோற்றத்தைக் கூடுதல் அழகாகக் காட்டும். ப்ளஷர்ஸ்பெரும்பாலும்வண்ணத்தை உயர்த்துமே தவிர இருட்படிவு அல்லது கருமைச் சாயலையோஉண்டாக்காது. எனவே இது ஒரு நிறத்தின் அழகை மேலும் அழகுறச் செய்து காட்ட மட்டும்தான் உதவுகிறது.

அழகானமுகக்கூறுகளை எடுத்துக் காட்ட மட்டுமே ஹை-லைட்டர்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும்.அளவோடு அளவாக அமைந்திருக்கும் உங்கள் கன்னத்து எலும்புகள்,கண்களைச் சுற்றிஉயர்ந்து நிற்கும் புருவ எலும்புகள் போன்றவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவது தான்மேக்அப்பின் நோக்கம். அழகான கன்னம், புருவ எலும்புகள் கண்களின் அழகை அதிகரிக்கச் செய்கின்றன்.அவை உயர்த்திக் காண்பிக்கப்பட்டால் கண்களுக்கு மேக்அப் செய்யும் போது வசதியாகவும், எளிதாகவும்இருக்கும். மிகவும் வெளிறிய வண்ணம் (Pale Colours) கொண்டஹை-லைட்டர்களைப் பயன்படுத்தக் கூடாது.ஐவரி, லைட்,பிங்க், கிரிம் டோன்வண்ணங்கள் கொண்டவை வெள்ளையை விட நன்றாக இருக்கும். பிரான்ச் (Bronze), கோல்டு (Gold) மற்றும் ஆழ்ந்த பிங்க் போன்ற வண்ணங்கள்மாநிறமுடையவர்களுக்கு ஏற்றது ஆகும். இவற்றுடன் ஷைன் (Shine) அல்லது கிளிட்டர் (Glitter) எனப்படும்பளபளப்பைச் சேர்த்துப் பயன்படுத்த ஒளிமிக்க விளக்குகள் உள்ள இடங்களில் ஹை-லைட்டர்மிக அழகான தோற்றத்தைத் தரும்.

ஹை-லைட்டர் இடும் முறை:

கன்னத்து எலும்பை எடுப்பாகக் காட்ட, ஒவ்வொரு கண்ணின் வெளிப்புற கோணத்திலும் கன்னத்து எலும்பிற்கு மேலாகத் தொடங்கி முடி தொடங்கும் இடம் வரை ஹை-லைட்டர் கொண்டு ஒரு கோடு வரையவும். உள்ளடங்கிய முகவாய் அல்லது தாடையை முன்னுக்குக் கொண்டு வர முகவாய் நுனியில் ஹை-லைட்டரைத் தடவி அதை மேக்அப்புடன் சேரும் வண்ணம் மெழுகிச் சமன் செய்ய வேண்டும்.

ப்ளஷர்ஸ்:

சருமத்திற்கு அழகான தோற்றத்தையும், நிறத்தையும் தரக்கூடிய கடுமையாக வண்ணங்களே (Strong Colours) ப்ளஷர்ஸ் எனப்படும். முகத்தின் மேடு, பள்ளங்கள், வளைவு நெளிவுகளை எடுத்துக் காட்டத் தேவையில்லாத அழகிய முகங்களைக் கூட மேலும் அழகாக்கிக் காட்டக் கூடியது ப்ளஷர்ஸ் மூலம் தான் முடியும். Matt blusterTM சற்று மெலிதான வண்ணமுள்ள ப்ளஷர்கள் இடும் போது, சற்று முதிர்ச்சியுற்ற சருமங்கள் கூட மேலும் அழகு பெறுகின்றன. எந்த இடத்தில் ப்ளஷரை இட்டுத் தொடங்குவது என்பதில் கவனம் தேவை.

மூக்கிற்கு வெகு அருகில் ப்ளஷரைத் தொடங்கினால் முகம் முழுவதும் உள்ளுக்குள் சென்று விட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடும். முகத்தை விரிவுப்படுத்தி பளிச் என்று காட்டுவதற்கு ஏற்ற வகையில் ப்ளஷர் எப்போதும் முடிவரையை (Hair Line) நோக்கிப் பூசி மெழுகிச் சமப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ப்ளஷர் உங்கள் சருமத்தின் நிறத்தை விட இரண்டு படி நிலைகள் (Steps) ஆழ்ந்த நிறமுள்ளதாக இருத்தல் அவசியம். அத்துடன் அது உங்கள் கண் மேக்அப் நிறத்தைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

ப்ளஷர் பூசுதல்:

இலையின் நுனி போன்று முகம் கூர்மையாகத் தோன்ற என்ன செய்ய வேண்டும்? கன்ன எலும்புகளின் மேற்புறம் ப்ளஷரைத் தடவி அதை அப்படியே மென்மையாக மேற்புறம் நோக்கியும், காதில் நடுப்புறம் நோக்கியும் இழுத்து மெழுகி இணையச் செய்ய வேண்டும். உங்கள் முக வாயைச் (Chin) சற்று முன்னுக்கு கொண்டு வந்து காட்ட விரும்பினால் சிறிதளவு ப்ளஷரை தாடையின் கீழே தடவிப் பரப்பி விடவும். முகத்திற்கு பிரகாசமும், ஆரோக்கியமான தோற்றமும் தர விரும்பினால் கன்னங்களில் ப்ளஷரைத் தடவி காதுகளை நோக்கியும், கண்களைச் சுற்றியும், நெற்றிப் பொட்டுகளை நோக்கியும் மெதுவாகத் தடவி சருமத்துடன் இணையச் செய்யவும்.

இயல்பான அழகிய தோற்றம் பெற, சிரிக்கும் போது உயர்ந்து எழுகின்ற கன்னக் கதுப்புகளில் (Apples) சிரித்தபடியே ப்ளஷர் தடவுங்கள்.

ஷேடர்ஸ்:

ஷேடர்ஸ் பயன்படுத்தப்படும் நோக்கம் என்ன? தடவப்படுகின்ற இடத்தைச் சற்று நிழல் படிந்தது போல செய்து இயன்ற வரை அவற்றின் தோற்றத்தை வெளியே தெரியாதபடி அல்லது தாழ்த்திக் காட்டுவதற்கு ஷேடர்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல அமைப்பான எலும்புகளை எடுத்துக் காட்டுவதற்கும், வீங்கிச் சுரந்த பகுதிகள், ஏற்றத் தாழ்வான உறுப்புகள் போன்றவற்றைப் பார்வையில் படாமல் செய்வதற்கும் ஷேடர்ஸ்  உதவுகின்றன. பகல் நேரங்களில் பயன்படுத்த பிங்க், கோல்டு, பீச், சிகப்பு போன்ற நிறங்கள் ஏற்றவையாகும். ஆழ்ந்த ப்ரவுன் போன்றவை இரவில் பயன்படுத்த ஏற்றவை.

ஷேடர்ஸ்  இடும் முறை:

கன்னத்து எலும்புகளை எடுத்துக் காட்ட:

கண்களின் கீழ் நடுப்பகுதி ஆரம்பித்து காதின் மேற்பக்கம் நோக்கி ஷேடரைக் கொண்டு கோடிடவும். கண்களின் கீழ் அதே இடத்தில் ஆரம்பித்து காதின் கீழ்ப்புறம் நோக்கி இரண்டாவது கோடிடவும். இரண்டு கோடுகளுக்கு இடையே உள்ள இடத்தை ஷேடரால் நிரப்பி சமன் செய்து கொள்ளவும்.

உங்கள் மூக்கு அகன்று விரிந்திருந்தால்:

மூக்கின் இருபுறங்களிலும் ஷேடரைக் கொண்டு ஒன்றிரண்டு முக்கோணம் வரைந்து மூக்கின் தோற்றத்தைக் கூர்மையாக்குங்கள். அகன்று விரிந்த தாடைகளில், அகன்று கனத்த இடங்களை ஷேடர்ஸ்  கொண்டு தடவி சமன்படுத்தி முகம், கழுத்து ஆகியவற்றின் நிறத்தோடு இணையச் செய்யலாம்.

மூக்கு சற்று வளைந்து இருந்தால்:

வளைந்த இடத்தில் சிறிது ஷேடரைத் தடவி மெழுகிச் சமன் படுத்தினால் வளைவு தெரியாதபடி செய்து விடலாம்.

நெற்றி மிகவும் அகன்று இருந்தால்:

இரண்டு நெற்றிப் பொட்டுகளிலும் ஷேடரைத் தடவி முடி தொங்கும் இடம் வரை தடவிச் சமன் செய்து விடலாம்.

முகம் பளபளக்க முக தேய்ப்புகள் (Scrub):

                        மேக்அப் சாதனங்கள் மூலம் ஒரு புறம் நீங்கள் அழகை உருவாக்கினாலும், இருக்கும் அழகை மேம்படுத்தினாலும் இயற்கையான அழகு தான் நிரந்தரம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. சருமப் பராமரிப்பில் இயற்கையில் கிடைக்கின்ற இரசாயனக் கலவைகள் அற்ற தாவரங்களின் இலை, பூ, பழம், வேர், காய் மூலம் தயாரிக்கப்படுகின்ற முகத் தேய்ப்புகளும் களிம்பு மற்றும் பவுடராகவும் கிடைக்கிறது. பயன்படுத்துவதற்கு எளிதாகவும், சரும நோய்கள் ஏற்படுமோ என்ற பயம் சிறிது கூட தேவையில்லாது வீட்டிலேயே நாமே தயார் செய்து உபயோகிக்க இயலும் என்பது தான் இதன் சிறப்பு. முகத் தேய்ப்புகளினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

1. இறந்த செல்கள் நீக்கப் படுகின்றன.

2. முகச் சருமத்திற்கு ரத்தம் சீராக பாய உதவுகிறது.

3. பொலிவில்லாத, களையிழந்த சருமத்திற்கு உயிர் கொடுக்கும்

4. முகத்தேய்ப்புகளை விரல் நுனிகளால் தடவிக் கொள்ளலாம். முகத் தேய்ப்புகள் இயல்பான சருமம், உலர்ந்த சருமம், எண்ணெய் கலந்த சருமம், முதிர்ந்த சருமம் என்று பிரிக்கப்பட்டு சருமத்திற்கு ஏற்றபடியான முகதேய்ப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


Spread the love