மைதா மாவு தரும் பரிசு

Spread the love

மைதா மாவின் தீமைகள்

மூப்பின் அடையாளம் நரையும் திரையும் என்று பண்டைய நாட்களில் சொல்வார்கள். ஆனால், தற்காலத்தில் வயதில் மூத்தவர்களிடையேயும் வெள்ளை முடி (நரை முடி) காணப்படுவதே இல்லை. இன்றைய அளவில் எளிதாகக் கிடைக்கும் ஹேர் டை (Hair Dye) எனப்படும் முடிச் சாயங்களே. இந்த ஹேர் டைகளில் சேர்க்கப்படுகின்ற ஒரு வேதிப்பொருள் பென்சைல் பெராக்ஸைடு (Benzyl Paradoxide) ஆகும். பழுப்பு நிறத்தில் இருக்கும் பழுப்பு நிறத்தை மாற்றி வெள்ளையாக்குவதற்கு இந்த வேதிப் பொருளைச் சேர்க்கின்றனர். இது மாவின் மஞ்சள் நிறத்தை மாற்றி வெளுப்பாக்குவதோடு நிற்பதில்லை. கோதுமை மாவிலுள்ள புரதச்சத்துடன் சேர்ந்து உடலுக்குள்ளும் செல்கிறது. இதனால் மைதா மாவினால் செய்யப்படுகின்ற புரோட்டா, ரொட்டி போன்றவைகளை உண்கின்றபோது சர்க்கரை நோய் உண்டாகிற வாய்ப்பு ஏற்படுகிறது.

அடுத்து இந்த மைதா மாவை மென்மை யாகவும், மிருதுவாகவும் ஆக்குவதற்கு அலாக்சன் (Alloxan) என்னும் வேதிப் பொருளைச் சேர்க்கின்றனர். ஆய்வுக் கூடங்களில் எலிகளுக்குச் சர்க்கரை நோய் உண்டாக்குவதற்காக இந்த அலாக்சன் எலி உணவில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு மைதா மாவுடன் சர்க்கரை நோய் இணைந்து கொள்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. மேலும், மைதா மாவில் நார்ச் சத்து மிகவும் குறைவு. அதனால், மைதாவை அதிகம் பயன்படுத்துகின்றபோது சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. பல மேலைநாடுகளில் மைதா மாவின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.


Spread the love