சுவாச மண்டலம் சீர் பெற ஆயுர்வேதம் மூலிகைகள் – 3

Spread the love

தூது வளை

தூதுவளை கொடி இனத்தைச் சேர்ந்தது. தனி பந்தலிலும் படரும். மரத்தின் மேலும், வேலியின் மீதும் படரும். இதன் இலை கோவை இலையைப் போல, ஆனால் கனமில்லாமலிருக்கும். இலையின் மேல் பல முட்கள் முளைத்திருக்கும். இதன் பூ கத்தரிப் பூவைப் போல ஊதா நிறத்துடன் கூடியதாக இருக்கும். காய் குண்டு குண்டாக சுண்டைக்காய் போலிருக்கும். இது ஆங்கிலத்தில் (Solanum Trilobatum) என அழைக்கப்படுகின்றது.

இது கத்திரி குடும்பத்தைச் சேர்ந்தது. தூதுவளை பொதுவாக லேகிய வடிவில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியது. ஆனால் அது உண்மையான தூதுவளையால் செய்யப்பட்டது தானா என்ற சந்தேகம் எழுபவர்கள் அதனைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே வாரம் ஒரு முறை சமையலில் சேர்த்து வர சிறந்த நற்பலன்களைத் தரும்.

தூதுவளை அனேகமாக அனைத்து இருமல், சளி மருந்துகளிலும் சேர்க்கப்படும். ஒரு மூலிகையாகும், தூதுவளையின் முக்கிய குணம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. தூதுவளையை உட்கொண்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் உடலின் உள் உள்ள சளி வெளியேறும். இருமல் நீங்கும். கப நாடி, கப தோஷம் உடையவர்கள் தூதுவளையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இரைப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு தூதுவளை ஓர் அற்புதமான மூலிகையாகும். இதனை எளிதாக வீட்டில் சமைத்து உண்பதற்கு இதோ சில யோசனைகள்.

ஆடாதொடை

தாவர விவரங்கள்

நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் “ஆடாதொடை” என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி.

மருத்துவப் பயன்கள்

இதயம், தொண்டை இவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். அமுகச் செய்யும் கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி..

மெதர்ஜின் (Methergin) போன்ற மருந்துகளுக்கு இணையானது. மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் புகைப்பதையும் கைவிடலாம்!

ஆடாதொடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் சுவாச மண்டல அவயங்கள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.

ஷயரோகத்திற்கும் ஆடாதொடை மருந்தாக உதவும். ஆனால் அதன் ஆற்ற”ஸ்டெப்டோமைசின்” (Streptomycin) மருந்தை விட பாதியளவு குறைவு.

பல ஆயுர்வேத மருந்துகளில் ஆடாதொடை சேர்க்கப்படுகிறது. அவை வாசாரிஷ்டா, வாசகண்டாரி லேஹியம், புனர்வை வசவம், அசோகாரிஷ்டம், குமரஸ்ஸவ, திரிபாலா க்ருதம், போன்றவை.

ஆடாதொடை இலைச்சாறு மூக்கிலிருந்து வரும் ரத்த போக்கை நிறுத்தும். 5 மி.லி. அளவில் சாறு ஒரு நாளில் 2 வேளை குடிக்க வேண்டும்.

எச்சரிக்கை

கர்ப்பிணிகள் ஆடாதொடையை உபயோகிக்கக் கூடாது.


Spread the love