ஆண்களே! தொப்பையை மறைக்க டிப்ஸ்

Spread the love

40 வயதுக்குள்ளாக இருக்கும் எந்த ஒரு ஆணும் தங்களுடைய தொப்பையான வயிற்றைக் காட்ட விரும்புவதில்லை. நமது இடுப்பைச் சுற்றி ஏற்ப்படும் தேவையற்ற  சதைகளை வெளியே தூக்கிச் செல்வதில் யாருக்கும் மகிழ்ச்சியும் இருக்கப் போவதில்லை. இதற்கு காரணம் வாழ்க்கை முறை அல்லது மன அழுத்தம் என்று என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், அறியாமையும், சோம்பேறித்தனமும் தான் உண்மையான காரணங்கள் என்பதை அனைவரும் தெளிவாக உணர்ந்திருப்பார்கள். இந்த சதையை உங்களால் குறைக்க முடியாமல் இருந்தாலும், ஸ்மார்ட் ஆகவும், அவற்றை மறைக்கும் வகையிலும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் சில ஐடியாக்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.

தொப்பையை தெளிவாக காட்டும் இறுக்கமான உடைகளை தவிர்க்கவும். உங்களுடைய வயிற்றின் தசைகளுக்கு இடம் தரும் வகையிலான கேசுவல் சட்டைகளை அணிந்தால் தொப்பையின் தசைகள் பெருமளவு மறைந்திருக்கவும், அதன் உண்மையான பரிமாணம் வெளியே தெரியாமலும் இருக்கும். ஏற்கனவே உங்கள் வயிறு வித்தியாசமாக இருக்கும் நேரத்தில், அதற்கு சற்றும் ஏற்காத வகையிலான உடைகளை அணிவது மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயமாகும். இவையிரண்டும் இணைந்து உங்களைக் காணும் போது இரட்டை கொடுமை போன்று தான் இருக்கும்.

இறுக்கத்தை தளர்த்துவோம்!!!

இறுக்கமான உடைகள் உங்களுடைய தொப்பையை மிகவும் சரியாக வெளிச்சம் போட்டு காட்டும். எனவே மிகவும் இறுக்கமோ அல்லது தளர்ந்தோ இல்லாத வகையிலான மற்றும் உங்களுடைய உடலமைப்பிற்க்கேற்ற சட்டைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அணியும் டீ-சர்ட்கள் கூட உங்களுடைய தொப்பையை மறைக்கும் வகையில் சற்றே தளர்வாக இருக்க வேண்டும்.

டக்-இன் ஞ்

உங்களுடைய சட்டைகளை டக்-இன் செய்வதன் மூலம், தொப்பையை மறைத்திட முடியும். மிகவும் இறுக்கமில்லாத ஒரு கேசுவல் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு, அதை டக்-இன் செய்தால் உங்களுடைய தொப்பை யாருக்கும் தெரியாது.

துணி தைப்பவர் …

உங்களுக்கு ஏற்ற வகையிலான உடைகளை தைத்து போடுவது சிறந்ததாகும். இதன் மூலம் உங்களுடைய ஸ்டைல் மற்றும் உடைகளை வித்தியாசமாக இல்லாமலும், மோசமாக இருக்குமாறு அணிவது தவிர்க்கப்படும்.

ராஜகோபாலன்


Spread the love