உடல் நலமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Spread the love

வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் தண்ணீர் அருந்தக் கூடாது. பிரிட்ஜ் தண்ணீர் கூடவே கூடாது. வெளியிலுள்ள காற்றழுத்தம் வீட்டிற்குள் இருக்கும் அழுத்தத்துடன் மாறுபடும். எனவே உடலில் பிரச்சினைகளை உண்டாக்கும். பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிடவும். காரட்டைத் துருவி எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்து இதைச் சாப்பிட பித்த கிறுகிறுப்பு நீங்கும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் ஒன்றை தினசரி சாப்பிடவும். இதயம், நுரையீரல் வலிமையடையும்.

கொஞ்சம் இஞ்சியைத் தட்டி ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி குடிக்கவும். பித்தம், வாயு போன்ற அஜீரணக் கோளாறுகள் வராது.

சிறுகீரையை பருப்புடன் சேர்த்து கூட்டு அல்லது சாம்பார் அல்லது பொரியல் செய்யவும் சாப்பிட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

தினசரி ஒரு டம்ளர் தக்காளிச் சாறு சாப்பிடவும். உடல் பருமன் குறையும்.

சிகப்பு முள்ளங்கிச் சாறையெடுத்து பாலில் கலந்து முகத்தில் தேய்க்க முகத்திலுள்ள கருந்திட்டுக்கள் மறையும்.

அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக் கோசை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தநீரை வடிகட்டி குடித்தால் வயிற்றுவலி மறையும்.

மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளதா? திராட்சை ரசத்துடன் சர்க்கரை கலந்து காலையில் மூன்று வாரங்கள் குடிக்கவும். நல்ல குணம் தெரியும்.


Spread the love