பேன்களை ஒழிக்க

Spread the love

1.  துளசி இலைகளை, அதுவும் கருந்துளசி இலைகளை தலையணையின் அடியில் பரப்பவும். தலையணையின் உறை வெள்ளை நிறமாக, மெலிந்த துணியாக இருந்தால் நல்லது. இந்த தலையணையில் தலை வைத்து, சில நாட்கள் படுக்க, பேன் மறையும். இதேபோல், மருதாணி பூவை இரவில் தலைக்கு வைத்துக் கொண்டால் பேன்களை தவிர்க்கலாம்.

2. ஓமவல்லி இலை, வசம்புப்பொடி, மிளகு இவற்றை அரைத்து மோரில் கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை அகலும். வெறும் வசம்பின் விழுதையும் தலையில் தேய்த்து, அரைமணி கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும்.

3. சிறிது வறுத்த வேம்பம் பூக்களையும் தலையில் வைத்துக் கட்டலாம்.

4. வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நிரில் அலசினால் பேன்கள் மறையும்.

5. கசப்பு பாதம் பருப்புகளை அரைத்து, விழுதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசலாம். பாதாம் பருப்புகளுக்கு பதில், சீதாப்பழ விதைகளையும் பயன்படுத்தலாம். சீதாப்பழ விழுது கண்களில் படக்கூடாது.

6. பேன்கள், ஈறுகளை அழிக்க பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றை ஒருமுறை உபயோகித்தால் போதாது. முழு நிவாரணத்திற்கு அவைகளை மறுபடியும் உபயோகிக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

7. தலையை நன்றாக தினமும் வார வேண்டும். பேன்களை ஒழித்தாலும், ஈறுகளை அழிப்பது கடினம். எனவே ப்ரத்யேக பேன், ஈறு, சீப்பினால் தலை வாரவும்.

8. பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

9. தினமும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள், துவாலைகள் இவற்றை உதறி, சுத்தம் செய்ய வேண்டும்.

10. கூந்தலை அழுக்கு, பிசுக்கின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

11. துளசியை நன்றாக விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து ஊறவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும். பேன்கள் மடிந்து மறையும். சுத்தமான தலையில் பேன்கள் இருக்காது. காய்ச்சல், அதிக உழைப்பு இவற்றால் உண்டாகும் வெப்பத்தினால் பேன்கள் ஓடிவிடும்.

வயது வந்த பெண் பேன் தினம் 3-5 பளபளப்பான முட்டைகளை இடும். இந்த முட்டைகளை முடிக்கால்களுக்கு அருகில், முடியின் தண்டில் இடும். எட்டு நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். 2-3 வாரங்களில் ‘வயதுக்கு வந்த’ பேனாக ஆகிறது. பேனின் ஆயுள் ஒரு மாதம். ஈறுகள் (பேன் குஞ்சுகள்) வளர்ந்த பேனை விட மயிர்க்கால்கள் கெட்டியாக பற்றிக் கொள்வதால், இவற்றை எடுக்க ஷாம்பு போதாது. வாரி எடுக்க பிரத்யேக பேன் சீப்புகள் தேவை.


Spread the love