எது ஆரோக்கியமற்ற உணவு-?

Spread the love

ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த உணவு உடலுக்கு நன்மை தரும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் சிலருக்கு ஆரோக்கிய உணவே பொருந்தாமல், உணவு இணக்கமின்மை ஏற்படும். இணக்கமில்லாத உணவு கலவைகள் உடலில் நச்சுப் பொருட்களை தேக்கி விடும்.

உணவு பொருந்தாமை (இணக்கமில்லாதவை)

உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல், நன்மை பயக்கும் உணவுகள் உடலுக்கு இணக்கமில்லாமல் போதல் அபூர்வம். சிலருக்கு இந்த பொறுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. எதிர் மறையான பக்க விளைவுகள் தோன்றுகின்றன. இவை தலைவலி, ஒற்றை  தலைவலி, உப்புசம், வயிற்றுக் கோளாறுகள், களைப்பு, எடை அதிகமாதல் போன்ற பல அறிகுறிகள் தோன்றுகின்றன.

இந்த மாதிரி உணவு இணக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் முதலில் அவ்வளவு தெரியாவிட்டாலும், போகப் போக, நாட்பட்ட தீரா வியாதியாகி விடும். இது தான் உணவு இணக்கமின்மை (Food Intolerance) என்பதற்கும் உணவு ஒவ்வாமை (Food allergy) என்பதற்கும் உள்ள வித்தியாசம். உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் உடனே தென்பட்டு விடும். தவிர உணவு ஒவ்வாமை அபாயமானது. உடனே கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

உணவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையின் அறிகுறிகள்

அதீத வயிறு உப்புசம்

இனந் தெரியாத வியாதிகள் – வயிற்றெரிச்சல் கூடிய IBS ( Irritating Bowel Syndrome)மலச்சிக்கல் நுண்ணியிர்களால் வரும் தொற்றுக்கள்

கீழ்வயிறு, முதுகு வலிகள்

இடைவிடாத தலைவலி

சரும வியாதிகள்

வயிற்றில் அமிலம் அதிகம் சுரத்தல்

ஒரே உணவை அபரிமிதமாக உண்ணுதல்

தொடர்ச்சியாக ஒரே உணவை சார்ந்து அதையே உண்பது, அந்த உணவை பொறுக்க முடியாமல் போகலாம். இதை கவனித்து, நீங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் உணவை கண்டுபிடியுங்கள்.

கீழ்க்கண்ட உணவுகள் பாக்டீரியாவை தோற்றுவிக்கும்

சர்க்கரை (கேக், பிஸ்கட், சாக்லேட்) தேன், சில பழங்கள், சோடா பானங்கள் தவிர ஈஸ்ட் (Yeast) (ரொட்டி, பன், சீஸ், ஆல்கஹால் மற்றும் காளான்).

பாக்டீரியா தாக்கினால் தெரியும் அறிகுறிகள்

தொற்றுநோய் (ஃபங்களால் வரும்) (Fungus), அடிவயிறு உப்புசம், களைப்பு, மூளை சுணக்கம் போன்றவை.

அமிலத்தை அதிகரிக்கும் உணவுகள்

பழங்கள், சர்க்கரை, ஈஸ்ட், சீஸ், காஃபி, ஆல்கஹால் போன்றவை. அமிலம் ஏறுமாறனால் தெரியும் அறிகுறிகள் – வயிற்றுப்புண்கள், வயிற்றெரிச்சல், அமிலம் மேலேருதல், தலைவலி, சிறுநீர்ப்பையில் எரிச்சல், களைப்பு.

இணக்கமில்லாத உணர்வை உண்டாக்கும் உணவுகள்

தானியங்கள், பால் சார்ந்நத உணவுகள், சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற’சிட்ரஸ்’ (Citrus) பழங்கள், தக்காளி, கடற் உணவுகள், சர்க்கரை, பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள். இந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் – ஒற்றை தலைவலி, திடீர் தலைவலி, உண்டபின் களைப்பு, உப்புசம், அடிவயிறு வலி, தோலில் சொறி, போன்றவை.

உடலால் ஏற்று கொள்ள முடியாமல் போகும் சில உணவுகள்

கோதுமை, தானியம், பால் சார்ந்த உணவுகள், பழங்கள். இவற்றால், எக்ஸிமா, தோல் வியாதிகள், சருமம் உலர்ந்து, காய்ந்து போதல், வயிற்றுக் கோளாறுகள், ஒற்றை தலைவலி போன்றவை.

உண்ண அடங்காத ஆவலை உண்டாக்கும் உணவுகள்

சர்க்கரை உள்ள உணவுகள், உப்புச்சுவை உள்ள பக்குவப்படுத்தப்பட்ட கலோரி நிறைந்த உணவுகள் கொழுப்பு வகைகள் இவற்றை உட்கொள்வதால் மூட்டுவலி, தசை தொய்வு, சக்தியின்மை, தோல் பளபளப்பை இழந்து போதல், த்ரஷ் (Thrush), சொறி, கவனக்குறைவு போன்றவை ஏற்படும்.

ஊக்குவிக்கும் உணவுகள்

நிகோடின், பழ ரகங்கள், ஆல்கஹால், சர்க்கரை, உப்பு, காஃபி, டீ, சோடா பானங்கள். இவை இணக்கம் இல்லாமல் போனால் தோன்றும் அறிகுறிகள், இதயத்துடிப்பு அதிகரித்தல், மார்வலி, தசை புண்ணாதல், ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, உணர்ச்சி வசப்படுதல் போன்றவை.

தங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம் Dr. S. செந்தில்குமார்


Spread the love
error: Content is protected !!