சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். நவீன வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி இல்லாதது. கோபம், டென்ஷன், மனப்பதற்றம் போன்றவற்றால் சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை வந்து விட்டது.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். கண், சிறுநீரகம், இதயம் என உடலின் முக்கிய உறுப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு விடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இயற்கை மருத்துவத்தில், மருந்தே உணவு; உணவே மருந்து என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் அடிக்கடி சமையலில் சேர்க்கும் வெண்டைக்காய், சர்க்கரை நோய்க்கு சரியான மருந்து என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வெண்டைக்காய் எப்படி உதவுகிறது என்று பார்போம்.. இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக அனுபவத்தில் கூறியுள்ளனர்.
மேலும், உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்கள் என்றால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் அதிகமாக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு உதவும். சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.