குங்குமப்பூ நன்மைகள்

Spread the love

குங்குமப்பூ அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. விலை அதிகமாக யிருந்தாலும், இதன் ஆற்றலைக் கருதும்பொழுது விலை மலிவுதான்.

வயிற்றில் புண் குணமாக குங்குமப்பூவை நாலை எடுத்து பாலில், காய்ச்சிய பாலில், சேர்த்து நாற்பத்து நாட்கள் குடித்தால் அல்சர் ஆறிவிடும்.

கொஞ்சம் குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடவும். ஜீரண சக்தி பெருகும். வாய் நாற்றமின்றி மணக்கும்.

பத்து குங்குமப்பூ எடுக்கவும். ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பை அதனுடன் சேர்க்கவும். இரண்டையும் இரண்டு ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும். பின்பு அரைத்து அதன் விழுதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட்டால் முகம் பளிச், பளிச் என்று ஒளிவிடும்.

குங்குமப்பூவை முதல் நாள் வெந்நீரில் போட்டு ஊற வைக்கவும், மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்துபோல் போடவும். இதன் பயன் கண்களின் கீழிருக்கும் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

வயது ஏறினாலும் பருவம் அடையாத பெண்களுக்கு குங்குமப்பூவைச் சாப்பிட பூப்படைய வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பிணிகள் எட்டாம் மாதத்திலிருந்து குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்யமாகப் பிறக்கும். இரண்டு குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கவும்.

குழந்தை பிறந்ததும் தாயானவள் மூன்று கிராம் குங்குமப்பூவை தண்ணீரில் போட்டு அரைத்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கசடுகள் வெளியேறும்.

நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை எடுத்து 15 குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்கவும். இதை முகப்பருக்கள் மீது தடவி, அரைமணி நேரம் ஊறி பின்பு முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை செய்தால் பருக்கள் மறைந்துவிடும். மேற்கொண்டு பருக்கள் வராது.


Spread the love
error: Content is protected !!