நோய்களை அழிக்கும் கொன்னை

Spread the love

தாவர விவரங்கள்

                                இலை உதிர்க்கும் மரமான கொன்னை, 6 லிருந்து 9 மீட்டர் வரை உயரமாக வளரும். நேராக வளரும் அடிமரம், பல விரிந்த கிளைகளுடையது. இளம் கிளைகளின் பட்டை பச்சை – மஞ்சள் – பழுப்பு நிறங்களுடனும், முதிர்ந்த கிளைகளின் பட்டை பழுப்பு நிறமாக இருக்கும். காம்புடன் கூடிய பூக்கள், நறுமணமுடயவை. தங்க மஞ்சள் நிறமுடயவை. வருடத்தில் ஒருமுறை, ஏப்ரல் மாதத்தில் பூக்கும். மரம் முழுவதையும் மலர்கள் மறைத்து விடும். பழம் பழுத்துவர, விதைகள் ஒன்றை விட்டு ஒன்றாக பிரிந்து விடும். ஒரு ‘செல்’ மாத்திரம் இருந்த பழம், பல ‘செல்’ களாகும்.

                                இந்தியாவிலே தோன்றிய இந்த மரம், தேசம் முழுவதும் காணப்படுகிறது. சாலை ஒரங்களில் அழகுக்காகவும் நடப்படுகிறது. பறிக்கப்பட்ட பழங்கள், மண்ணடியில் 7 நாள் வைக்கப்படுகின்றன. பிறகு வெய்யிலில் காயவைத்து, பழக்கோது (கதுப்பு) பிரிக்கப்பட்டு, காற்றுப்புகாத குப்பிகளில் அடைத்து வைக்கப்படும். தற்போது கொன்னைமரம் ஸ்ரீலங்கா, மாரிசஸ், தென் ஆப்ரிக்கா, சீனா, பிரேசில் போன்ற தேசங்களிலும் காணப்படுகிறது.

                                கொன்னை மரவேர் சிவந்த பழுப்பு நிறமும் உடையது. மேல் தோலை (பட்டை) சுலபமாக உரிக்கலாம். விதைப்பை (றிஷீபீ), 40-70 செ.மீ. நீளமும், 20-27 மி.மி. சுற்றளவும், நேராகவும் அல்லது வளைந்தும் இருக்கும் ஒவ்வொரு விதைப்பையிலும், 25-100 விதைகள் இருக்கலாம்.

ரசாயனம்:- கொன்னையில் உள்ள வேதிப்பொருட்கள் டேனின் (ஜிணீஸீஸீவீஸீ), ஆந்தராகுவினோன் (கிஸீtலீக்ஷீணீ ஹீuவீஸீஷீஸீமீs), ரெயின் (ஸிலீமீவீஸீ), எமோடின் (ணினீஷீபீவீஸீ) ஸ்டிராய்டுகள், பிசின், எளிதில் ஆவியாகும் எண்ணை, ஆல்கலாயிட் (கிறீளீணீறீஷீவீபீ) போன்றவை.

கொன்னையின் பயன்கள்

                                இதன் சமஸ்கிருத பெயரின் படி, நோய்களை வதைக்கும் குணம் உடையது. 3000 வருடங்களுக்கு முன்பே, சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

                                சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

•             கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

•             கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

•             பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான விஹ்நீஷீதீணீநீtமீக்ஷீவீuனீ ஜிuதீமீக்ஷீநீuறீஷீsவீs என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் ஷிணீறீனீஷீஸீமீறீறீணீ ஜிஹ்ஜீலீவீ, சிஷீக்ஷீஹ்ஸீமீதீணீநீtமீக்ஷீவீuனீ பீவீஜீலீ tலீமீக்ஷீவீணீமீ இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

•             வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் ‘பால்’, மூட்டு வலி (ஆர்த்தரைடீஸ்), சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

•             தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

•             இதயத்திற்கு நல்ல ‘டானிக்’. நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

•             கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி ‘அமீபா’ நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

•             பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் (திuஸீரீus) எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.

•             கொன்னை பழம் (உலர வைத்தது) பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி மலத்துடன் வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரை (ஸிவீஸீரீ கீஷீக்ஷீனீ) க்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க மலத்தை இளக்கி வெளிப்படுத்தும். பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் (றிணீstமீ) 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி (கிக்ஷீtலீக்ஷீவீtவீs), வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

கொழுந்து இலைகளின் கூழுடன் (5-15 கிராம்) மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், “ராஜமரம்” என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.


Spread the love